அல்பேட் காமுவின் (Stranger) அந்நியன்
அக்கால செக்கோஸ்லேவியாவில் பணம் சேர்ப்பதற்காக ஒரு இளைஞன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பல வருடங்கள் பணத்தைச் சேர்த்து, திருமணமாகி குழந்தையுடன் குடும்பஸ்தனாகிறான். பணத்துடனும் மனைவி குழந்தையோடு தனது பிறந்த வீட்டை நோக்கிப் புறப்படுகிறான். ஊரை அடைந்தபோது குழந்தையையும் மனைவியையும் ஒரு ஹோட்டலில் விட்டு விட்டு, தனது வீட்டை நோக்கிச் சென்றபோது, அங்கு அவனது சகோதரியும் தாயும் அந்த வீட்டை ஹோட்டேலாக நடத்துகிறார்கள். அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. தன்னை அடையாளம் காட்டாமல் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததுடன் தனது பணத்தை அவர்களுக்குக் காட்டினான். அன்றிரவு தாயும் சகோதரியும் அவனைக் கொலை செய்து பணத்தைத் திருடினார்கள். அடுத்த நாள் கணவனைத்தேடி வந்த மனைவி அவனை அடையாளம் சொன்னபோது தாய் கயிற்றில் தொங்கி உயிர்விட்டார். சகோதரி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்தார்.
இந்த சம்பவம் வெளிவந்திருந்த பத்திரிகையைச் சிறையில் பல தடவை மீசோல்ட என்ற அல்பேட் காமுவின் (Albert Camus)) கதாநாயகன் படிப்பதாக The Stranger(அந்நியன்)என்ற நாவலில் வருகிறது. சாதாரணமான பத்திரிகை செய்தியாக ,
இந்தச் சம்பவம் சொல்லப்பட்டபோதும் பல கோணங்களில் மனிதர்களது உறவுகளை நமக்குச் சிந்திக்க வைக்கிறது.
இருத்தலியல் கோட்பாட்டின் குருவாகிய அல்பேட் காமுவின் இரு புத்தகங்களில் படிக்கக் கிடைத்தது. பிளேக் எனப்படும் கொள்ளை இருத்தலியலின் முன்னுதரணமாகதாகவும் அந்நியன் அதற்கு எதிராக எப்படியும் வாழமுடியும் என வாழ்வானது மனஓடையை நமக்குக் காட்டும் நாவலாக அமைந்துள்ளது.