நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம் (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)
இலக்கிய ஆய்வு நூலுக்கான 'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' வழங்கிய 'தமிழியல் விருது-2011' என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட 'பல்வேறு பயன் தரும் பனைமரம்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.