முக்கிய வரலாற்றுக் குறிப்பு: யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! - வ.ந.கிரிதரன் -
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் எனது நூலின் இரண்டாவது அத்தியாயம் 'நல்லூரும் யாழ்ப்பாணமும்! இதில் நல்லூரும் ராஜதானியும் ஒன்று என்பார்கள் கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் என்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோர் அவை இரு வேறானவை என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றில் தர்க்க நியாயங்களின் அடிப்படையில் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோரின் கருத்தான நல்லூரும், யாழ்ப்பாணமும் வேறானவை என்னும் என் கருத்தை முன் வைத்திருப்பேன்.
நான் மீண்டும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினை மீண்டும் கனடாவிலிருந்து எழுதிய காலகட்டடத்தில் என்னிடமும் இந்நூல் இருக்கவில்லை. ஏனயோர் எழுதிய குறிப்புகளின் அடிப்படையிலெயே என் தர்க்கத்தை முன் எடுத்திருந்தேன். அதன்படி முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ. நடராசா ஆகியோரின் கூற்றுக்களுக்கமையவும், அவர்களின் தர்க்கத்தின் அடிப்படையிலும்,கைலாயமாலையில் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகியவைத் தனித்தனியாகக் குறிப்பிடப்படுவதன் அடிப்படையிலும், நல்லூர் வேறு, யாழ்ப்பாணம் வேறு என்னும் முடிவுக்கு வந்திருந்தேன்.