தமிழ் ஸ்டுடியோ.காம்: கான்ஸ் விருது பெற்ற தீபன் - திரையிடல் & கலந்துரையாடல்
25-12-2016, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நன்கொடை: ரூபாய் 50/-
சிறப்பு அழைப்பாளர்: எழுத்தாளர் & நடிகர் ஷோபா சக்தி
நண்பர்களே கான்ஸ் விழாவில் விருது பெற்ற தீபன் திரைப்படம் முதன்முறையாக சென்னையில் திரையிடப்படவிருக்கிறது. கடந்த சென்னை திரைப்பட விழாவில் கூட இந்த படம் திரையிடப்படவில்லை. முதல்முறையாக சென்னையில் திரையிடப்பட்டு, அதில் நடித்த எழுத்தாளர் ஷோபா சக்தியுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. நண்பர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்று வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரங்க வாடகைக்காக ஐம்பது ரூபாய் நன்கொடை நிர்ணயித்துள்ளோம். நன்கொடையை வடபழனியில் உள்ள பியூர் சினிமா புத்தக அங்காடியில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டு ஞாயிறு நிகழ்வில் கலந்துக்கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் நண்பர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். 9566266036, 044 42164630

அன்புடன் ,
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.co | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.






தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈஸ்ட்ஹாமிலுள்ள அக்ஷயா மண்டபத்தில் நிறைவேறியது. பிரபல எழுத்தாளர் முல்லைஅமுதன் ஜெயராணி தம்பதிகளின் மூத்த புதல்வி கார்த்திகா "சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்" என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும் சமர்ப்பணம் செய்தார்.

பேசா மொழி: பியூர் சினிமா - நூலகம் - புத்தகங்கள் தேவை.
" அவுஸ்திரேலியா மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது. இதுவரை காலத்தில் இலங்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால் அனுப்பி பட்டதாரிகளாக்கியுள்ளது. எனினும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிப்புற்ற தமிழ் மாணவர்களின் தேவைகள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன."
22/10/26 சனிக்கிழமை அன்று செல்வி. கார்த்திகா மகேந்திரனின் புத்தக அறிமுக, இசைச் சமர்ப்பண விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விழாவே வித்தியாசமான முறையில் எம் சமுதாயத்திற்கு நல்லதோர் பாடம் கற்றுக் கொடுக்கும் முறையில் அமைந்திருந்ததைக் காண்டு வியந்தேன். விழாக்கள் என்றாலே ஆடம்பர மோகம் தாண்டாவமாடுகின்ற இக் காலகட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் தரமான நிகழ்வுகளை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். அவரவர் புகழை பறைசாற்றவே அனேகமானோர் இப்படியான விழாக்களை நடாத்துவது வழக்கம் ஆனால் இவ்விழாவோ இளைய தலைமுறையினரிடம் இலைமறை காயாக மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதை உணரக்கூடியதாக இருந்தது.
பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக திரைப்படமாக்கப்பட்ட நாவல்கள் என்கிற தலைப்பில் எந்தெந்த நாவல் / சிறுகதையெல்லாம் திரைப்படமாக்கப்பட்டதோ அவையும் விற்பனைக்கு உள்ளன. இவைகள் அன்றி, தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய திரைப்படங்களின் டி.வி.டி க்களும், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கு கழகம் (NFDC) தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்பட டி.வி.டி க்களும், விற்பனைக்கு உள்ளன. சினிமா சார்ந்து என்ன வேண்டுமென்றாலும், இனி நண்பர்கள் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியலாம். சினிமா சார்ந்த உங்கள் அணைத்து தேவைகளும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நிறைவடையும் வகையில் அதனை செம்மைப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம். இன்னமும் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியாத நண்பர்கள் உடனே வருகை தாருங்கள். 

‘2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபாகரனின் மாவீரர் தின உரையிலிருந்து இன்றைய காலகட்டத்தை உபயோகித்து, தமிழர்களுடைய போராட்ட வரலாற்றையே ஆராய்ந்து பார்த்துள்ளது இந்த நூல். தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர்நது தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு என்ற ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்கள் பற்றியும் பக்க சார்பில்லாமல் இந்நூலில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஜெயபாலன். ஜனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தார்மீகப் போராளியின் பதிவாகவே இந்நூலை நான் பார்க்கிறேன்’ என்று அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் அண்மையில் கிழக்கு லண்டன் றினிற்ரி மண்டபத்தில் இடம்பெற்ற ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூல் அறிமுகத்தின்போது அந்நூல் குறித்துப் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









