இலங்கை அரசின் இவ்வருடத்துக்கான மொழிபெயப்புக்கான சாகித்திய விருது

இலங்கை அரசின் இவ்வருடத்துக்கான மொழிபெயப்புக்கான சாகித்திய விருது எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான உபாலி லீலாரத்தினாவுக்கு இலங்கை அரசின் இவ்வருடத்துக்கான சாகித்திய விருது கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத்தொகுப்பு நூலை மொழி பெயர்த்ததற்காக "Kadali binde giya pasu" உபாலி லீலாரத்தினாவுக்கு சிறந்த மொழிபெயர்பாளர் விருது கிடைத்துள்ளது.
இவ்விதமான மொழிபெயர்ப்புகள் பல்லின மக்கள் வாழும் நாடுகளில் பரஸ்பர புரிந்துணர்வுக்கு வழிவகுக்கின்றன. அதே சமயம் ஒரு நாட்டு மக்களின் பல்லின இலக்கியச் செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. வாழ்த்துக்கள் அகிலுக்கும், மொழிபெயர்ப்பாளர் உபாலி லீலாரத்தினாவுக்கும். இது போன்ற மேலும் பல மொழிபெயர்ப்புகள் தமிழில் இருந்து சிங்களமொழிக்கும், சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கும் வெளிவரவேண்டும். வெளிவரும் என எதிர்பார்ப்போம்.



ஈழத்தின் அதிமூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான குறமகள் என அழைக்கப்படும் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் நேற்று செப்டம்பர் 15 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார். புனைகதை எழுத்தாளர் கவிஞர் வானொலி – மேடைப் பேச்சாளர் விமர்சகர் ஆய்வாளர் விவாத அரங்கு மேலாளர் நடிகர் நாடகவியலாளர் இனப்பற்றாளர் சமூக சேவையாளர் என்று பல தளங்களை வெற்றிகரமாகச் சந்தித்த இவர் இலங்கையில் 27 வருடங்கள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பெண் எழுத்தாளர்களுள் மிக முக்கியமான ஒருவராக மதிப்புப் பெற்ற இவரே கனடாவில் இலக்கிய பொன்விழா கண்ட ஒரேயொரு தமிழ் எழுத்தாளர். 1994 ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிகளை மதித்து தமிழர் தகவலால் விருதுடன் தங்கப் பதக்கம் சூட்டி இவருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன்னர் வைரவிழா கண்ட இவர் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 25 ஆண்டுகளாக கனடாவிலுள்ள பல பொது அமைப்புகளில் பிரதான பதவி வகித்து புகழ் பெற்ற குறமகளுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களின் ஒருவரான ரோசா மாவீரரானவர். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்களுக்கு 905-274-1136 அல்லது 647-878-2451 தொடர்பு கொள்ளலாம்.
இலங்கையில் நீண்ட கால வரலாற்றைக்கொண்ட தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு தற்பொழுது 200 வயது. அதனை முன்னிட்டு உலகில் பல நாடுகளில் வதியும் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி தமது கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்விச்சாலைக்கு நன்றி தெரிவிக்கும் எண்ணத்துடனும் அங்கு பணியாற்றிய அதிபர்கள், ஆசிரியர்களின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையை நினைவு கூர்வதற்காகவும் பழைய மாணவர் ஒன்றுகூடல்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்துவருகின்றனர். 


04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் இலம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.
கரவை மு. தயாளன் எழுதிய 'சில மனிதர்களும் சில நியாயங்களும்' என்ற நாவலும் எனது பேனாவிலிருந்து என்னும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் நாடகம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகள், கவிதைகள் முதலானவற்றை உள்ளடக்கமாகக்கொண்டுள்ள தொகுப்பு நூலும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் Dandenong North Senior Citizens Centre ( 41 A, Latham Crescent, Dandenong North , Victoria 3175) மண்டபத்தில் நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணியிலிருந்து 7.00 மணிவரையில் நடைபெறும்.
வாழும்போதே ஒருவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிப்பது மகத்தான நற்பணியாகும். அந்த வகையில் வாழ்நாள் முழுவதும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்துவரும் 'கல்விச்சேவையாளர்" சி. காராளபிள்ளை அவர்கள் இன்று கௌரவிக்கப்படுவதையிட்டு யான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பிரான்ஸ் நாட்டில் தமிழ்மக்களின் அறிவுப்பசியைப் போக்கும்பொருட்டு கால்நூற்றாண்டுக்கு முன்பாகவே 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையத்தை" ஆரம்பிக்க வழிசமைத்த பெருமகன். இன்றுவரை அதன் காப்பாளராகவிருந்து வழிகாட்டி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் பத்திரிகைää சஞ்சிகைää வானொலிää தொலைக்காட்சிää நூல்கள் வெளியீடுää சங்கங்கள் உருவாக்கம் என அத்தனை முயற்சிகளுக்கும் ஆலோசனை வழங்கி ஊக்கப்படுத்தி வருபவர். எண்பது வயதை எட்டியுள்ள இவ்வேளையிலும் இளைஞனைப்போல் ஊக்கமுடன் செயற்படும் அவரைப் பாராட்டிக் கௌரவிப்பதன் மூலம் 'பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்" தனது வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்கிறது."
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. 






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









