'றொறன்ரோ' தமிழ்ச்சங்க மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்: "அறிவியல் புனைகதைகள்"
![]()


‘மலையாள எழுத்தாளரான கமலாதாஸ் ‘என்கதை’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்தபோது மலையாள இலக்கிய உலகில் மாத்திரமல்ல மலையாள சமூகத்திலேயே அது பெரும் புயலைக் கிளப்பியது. அவரது ‘என் கதை’ நூலாக வெளியானபோது பதினொரு மாதங்களிலேயே ஆறு மறு பதிப்புகளைக் கண்டது. முப்பத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாகித் தீர்ந்தன. தன் வாழ்க்கையில் தனது இந்த சுயசரிதையை எழுதும்போது தான் அடைந்த மகிழ்ச்சியை வேறு எந்த நூலும் தந்ததில்லை என்று அவர் கூறுகின்றார். கமலாதாஸின் எழுத்துக்களைப்பற்றி அதீத பாராட்டுக்களும், கடுமையான கண்டனங்களுமாக பல்வேறு நிலைப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று மீளாள் நித்தியானந்தன் கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை, லண்டனில் இடம்பெற்ற பெண்களின் கருத்தாடல் நிகழ்வில் பங்குபற்றிப் பேசியபோது குறிப்பிட்டார். நவரட்னராணி சிவலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மீனாள் நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது ‘தந்தைவழி சமூக அமைப்பிற்குள் பெண் என்பவள் மூச்சுவிடமுடியாமல் திணறும் அவஸ்தையைப் பற்றி கமலாதாஸ் காரசாரமான வாதங்களை இந்த நூலிலே முன்வைத்திருக்கிறார். அவரது தந்தை, அவரது கணவர், அவரது நாலப்பாட்டுக் குடும்பத்தின் ஆண்மக்கள் அனைவருமே கொண்டிருந்த ஆணாதிக்கக் கொடுமையை கமலாதாஸ் இந்த நூலிலிலே ஒளிவு மறைவின்றி எழுதிச் செல்கிறார். அமைதியும் நிம்மதியும் குலைந்த சூழலில், கொந்தளிக்கும் கடலின் நடுவில் சுழல்வதுபோலச் சிக்கி, வாராத துணைநாடி அலைமோதும் தன் நெஞ்சத்துக் குமுறல்களை அவர் அநாயாசமாக எழுதிச் செல்கிறார். கமலாதாஸின் ‘என் கதை’ என்ற சுயசரிதை இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டார்’
ஈழத்தில் இசைக்காகவென்றே நிர்மாணிக்கப்பட்ட இராமநாதன் நுண்கலைக்கல்லூரியின் அதிபராகத் திகழ்ந்து சிறந்த இசை ஆசிரியராகப் புகழ்பெற்ற ஸ்ரீமதி சரஸ்வதி பாக்கிராஜா அவர்களின் மறைவு ஈழத்து இசை உலகின் மிகப் பெரிய ஆளுமையை இழந்து நிற்கும் சூனியத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தன் இறுதிக் காலங்களில் எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சிக்காக அவரோடு நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நாட்களை மிகுந்த துயரத்தோடு நினைவு கூருகின்றேன். சுகவீனமான நிலையிலும் எனது கேள்விகளுக்கு பொறுமையாகவும், பரிவோடும் பதில் சொல்லிய அந்தப் பெருமனதை வியந்து பார்க்கின்றேன். எந்த நேரத்தில் தொலைபேசி எடுத்தாலும் சலிப்பில்லாமல் ஒரு தாயின் கனிவோடு என் கேள்விகளுக்கு அவர் பதில் தர முயற்சித்தும் சட்டென அவருக்கு நினைவுபடுத்தமுடியாத நிலையில் ‘மாலிக்கு இது தெரியும் அவரிடம் இதைக் கேட்டுப்பாருங்கள்’ என்று கூறுவதையும் நினைவுகூருகின்றேன். அவருடைய பேட்டியோடு எனது ‘மகரந்தச் சிதறல்’ நூல் சென்னையில் வெளியாகிவிட்ட போதிலும் அதனை அவரிடம், அவரின் கரங்களில் நேரடியாக கையளிக்கும் பாக்கியத்தை இழந்து போனேன் என்று நினைக்கும்போது நான் மேலும் துயரத்தில் ஆழ்கின்றேன்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?? என்று பெண்களை இழிவு படுத்தி இருட்டடிப்புச் செய்த காலத்தில் பெண்களுக்கான மூலாதாரமாக முதன்மைப்பாடசாலையாக பிரித்தானியரால் 1834 அளவில் நிறுவப்பட்டதுதான் வேம்படி மகளிர் கல்லூரி. 'கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடும் காணீர்"என்கின்ற பெரும் புத்துணர்விற்கு பெண்களை இட்டுச் சென்றது இக்கல்லூரியின் தோற்றம். அதி வணக்கத்திற்குரிய குருமார்கள் பீற்றர் பார்ச்சிவல், ஜேம்சு லிஞ்ச்,தோமஸ் ஸ்குவான்சு ஆகியோரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்ட வேம்படி மகளிர் கல்லூரியானது ஈழத்து தமிழ் மாதர்களின் கல்வியை, அறிவை, கலாச்சாரத்தை,வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பி நிற்கின்ற மாபெரும் கலைக் கோவிலாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாக இன்று மிளிர்கின்றது. . இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் சாதனையாக யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் என்கின்றது கல்வித் திணைக்களத்தின் புள்ளி விபரம் . இத்தகு வரலாற்றுப் புராதனமும்,பெருமையுமிக்க வேம்படி மகளிர் கல்லூரியில் கவின் கலைகளை வளர்ப்பதற்கான அரும் பெரும் முயற்சிக்கான அடித்தளமாக டொரோண்டோவில் பிறந்து வளர்ந்து நாட்டியக்கலையில் சாதனை படைத்து நிற்கும் செல்வி ஐஸ்வர்யா சந்துரு அவர்கள் நாட்டிய தர்ப்பணம் எனும் அற்புத நிகழ்வை 16 ந்திகதி ஜூலை அன்று நடாத்தி எம்மை எல்லாம் அதிர வைத்தார். மண்டபம் நிறைந்த மக்கள் சூழ அவரின் அற்புதமான நாட்டிய தர்ப்பணம் கலை மன்றம் ஆதரவில் "தோர்ன்கில்" நகர கவின் கலைப் பெருஅரங்கில் வெற்றிகரமாக நடந்தேறியது.

தகவல்: தமிழர் வகைதுறை வளநிலையம் (டொராண்டோ)

தகவல்: அருள் சவரிமுத்து
புலம் பெயர்ந்த மண்ணான கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற தெலை நோக்கோடு ரிஈரி (வுநவு) தொலைக்காட்சியின் ‘தமிழ் இனி வெல்லும்’ - தொடர் -2 இன் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் 2016 ஆம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை , வுநவு தொலைக்காட்சியின் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அமரர் வை. சொக்கலிங்கம் ஞாபகார்த்தமாக, கனேடிய சிறார்களிடையே தமிழ் மொழியை ஊக்குவிக்கும் நோக்குடன் , ஆநனஉநவெசந ஊழnநெஉவ நிறுவனர் வைத்திய கலாநிதி செந்தில் மோகன் அவர்களின் ஆதரவுடன் திருமதி ராஜி அரசரட்ணம் அவர்கள் இந்தத் தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார்.
கீழ்ப்பிரிவுப் போட்டியின் போது, முதலிடத்தை ஜஸ்மிதா சிவரூபன் , இரண்டாமிடத்தை அபிவர்ஷி பாலசுப்ரமணியம் , மூன்றாம் இடத்தை துவாரகா ஜீவனேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேல் பிரிவுப் போட்டியில் முதலிடத்தை குபேரகா குமரேஸ்வரன், இரண்டாமிடத்தை ஆரணி சுகந்தன் , மூன்றாம் இடத்தை அகிலவன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். இறுதிப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன . நடிப்புடன் கூடிய இந்தப் போட்டி நிகழ்வில் மாணவர்களை விட அதிகமான மாணவிகளே கலந்து கொண்டதும் கவனிக்கத்தக்கது. இப்போட்டி நிகழ்வின்போது பிரதம நடுவராக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் கடமையாற்றினார். ஏனைய நடுவர்களாக வாசுகி நகுலராஜா, கலைவாணி பாலசுந்தரம், விமலா பாலசுந்தரம் ஆகியோர் கடமையாற்றினார்கள்.

நிகழ்ச்சி நிரல்: 'நர்த்தகி' திரைப்படம் திரையிடல் | விமர்சனவுரை: ரதன் / கந்தசாமி கங்காதரன்
'அயல்' திரைப்படம் முன்னோட்டம் | கலந்துரையாடல் | ஏற்புரை: இயக்குனர் ஜி.விஜயபத்மா
நன்றியுரை: மேரி கியூரி போல் | நாள்: 16-07-2016 | நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் |3A, 5637, Finch Avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: 416-822-6316 | அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்
நண்பர்களே, விதை இயற்கை அங்காடி கடந்த நான்கு வருடங்களாக அடையார் காந்தி நகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், தமிழ் ஸ்டுடியோவின் பியூர் சினிமா புத்தக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் தற்போது விதை இயற்கை அங்காடியில் கிளை ஒரு திறக்கப்பட்டுள்ளது. சிறிய கடைதான். ஆனால் மொத்தமாக ஆர்டர் செய்தால் உங்கள் வீடு தேடி பொருட்கள் வரும். பொருட்களை அலைப்பேசியின் மூலம் பெற: 9566266036, 9444407798அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்
சிறப்பு அழைப்பாளர்கள்:
எழுத்தாளர் சாரு நிவேதிதா
இயக்குனர் வஸந்த்
இயக்குனர் ஜனநாதன்
இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் பா. ரஞ்சித்
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் மாத இதழான படச்சுருள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு செய்து, இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ் சூழலில் மிக காத்திரமான, செறிவான கட்டுரைகளை, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் சிறப்பிதழாக கொண்டு வரும் பெரும் முயற்சியினை படச்சுருள் கடந்த ஓராண்டாக மேற்கொண்டு வந்தது. மிக கடுமையான இந்த பணியை படச்சுருள் ஆசிரியர், ஆலோசனை குழுவோடு இணைந்து மிக சிறப்பாகவே செய்து முடித்தது. இப்போது இரண்டாம் ஆண்டில், இன்னமும் சிறப்பான மாற்றங்களோடு படச்சுருள் வெளிவரவிருக்கிறது. நிகழ்கால சினிமாவைப் பற்றியும் படச்சுருள் பேசவிருக்கிறது. இந்த நேரத்தில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிற்கு வருகை புரிந்து படச்சுருள் இதழுக்கு மேலும் ஆதரவளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தகவல்: உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை - மின்னிதழ் செய்தி!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.
போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
3 குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
4. போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. போட்டிக்கு அனுப்பப்படும் குறுநாவல்களை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
6. குறுநாவல் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்குக் கூடாமலும் அமைதல் வேண்டும்.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:
முதலாம் பரிசு - 400 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 350 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு - 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
சிறப்புப் பரிசு - தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.
முடிவுத்திகதி: 30.09.2016
கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம் 16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை வகித்தார்.
” தி தமிழ் ஸ்டோரி “ ( The Tamil story) என்ற ஆங்கில நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நூலில் வவேசு அய்யர், புதுமைப்பித்தன், பாரதி முதற்கொண்டு 88 தமிழ்ச்சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன் இதில் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ இன்னும் மீதமிருக்கிறப் பொழுதுகளில்..” என்ற கதையும் இடம்பெற்றுள்ளது. மற்றும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சி.ஆர் ரவீந்திரன், சு. வேணுகோபால் ஆகியோரின் கதைகளும் இடம் பெற்றுள்ளன Tranquebar Press, NewDelhi வெளியிட்டுள்ளது. விலை ரூ 850 .
புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பழைய தலைமுறையினரின் வாழ்க்கையையும் எழுத்துப்பாணியையும் அறிந்து கொள்ள இத்தொகுப்பு பயன்படுவதாக கருத்துரைகள் வழங்கப்பட்டன. சொக்கலிங்கனார் “ அறிவுத்தொழிலும், இலக்கியமும் ‘ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மீண்டும் ழகரம் சஞ்சிகை எதிர்வரும் ஜூன் 19ந்திகதி வெளிவரவுள்ளது. கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் 'ழகரம்' சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும் கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகை. 'ழகரம்' சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே சக எழுத்தாளர்களான கவிஞர் திருமாவளவன், பொன்னையா விவேகானந்தன் ஆகியோருடன் இணைந்து வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். கவிதைகள், தொடர்கதைகள் என பலவகைப்படைப்புகளைக் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். 'கானல் நீர்க்கனவுகள்' என்னும் கவிதை நூலினை வெளியிட்டிருக்கின்றார். 'காலத்தின் பதிவுகள்' என்னும் கவிதைத்தொகுதி மலையன்பன், ரதன் ஆகியோரின் கவிதைகளுடன் இவரது கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வெளிவந்த 'ழ'கரம் சஞ்சிகை இதழ்களைப் 'படிப்பகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54#catid227
'ழகரம்' இதழ்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள் வருமாறு:
இதழ் 1 - ஆனி 1997:
உள் அட்டையில் விளம்பரத்துக்குப் பதில் கவிதை: திணிப்பு - ராவுத்தர். முதலாவது பக்கத்தில் ஒரு பக்க ழகரம் குழுவினரின் ஆசிரியத்தலையங்கம் 'குவியம்' என்னும் பெயரில் வெளியான அனைத்து இதழ்களிலும் வெளியாகியுள்ளது. ஆனால் ழகரம் குழு உறுப்பினர்கள் யார் யார் என்னும் விபரம் அறிவிக்கப்படவில்லை.
இதழ் ஒன்றில் வெளியான ஆக்கங்கள் விபரம் வருமாறு:
கவிதை: சந்தனக்கல் - பொன்னையா விவேகானந்தன்.
கவிதை: மின்மினிப்புள்ளி - அ.கந்தசாமி
பத்தி: கரிச்சான் கோலங்கள் - கரிச்சான் குஞ்சன்.
கவிதை: - சம்பாத்தியம் - நிலா குகதாசன் (இவர் அமரராகிவிட்டார்).
கவிதை: வேனில் - திருமாவளவன்
கவிதை: சங்காரம் - சிவவதனி பிரபாகர்
கட்டுரை: பேர்ரோல்ற் பிறேஷ்ட் - P.விக்கினேஸ்வரன்
கவிதை: பொழுது - சகாப்தன்
மொழிபெயர்ப்புக் கவிதை: கவிதையை நேசிக்கும் சிலர் - மூலம்: விஸ்லாவா ஸிம்ப்ரோஸ்கா; தமிழில் - ஜெகன்
கட்டுரை: கடலின் மீது ஒரு வண்ணத்துப் பூச்சி - சேரன் (பிரமிள் நினைவு தினக்கட்டுரையின் சுருக்கிய வடிவம்).
சிறுகதை: நானும் கேஸ்டினாவும் ஒரு பந்தயக் குதிரையும் - சக்கரவர்த்தி (சிறுகதை என்னும் பெயரில் வெளியான நெடுங்கதை; 14 பக்கங்கள்)
கட்டுரை: இளங்கறுவலின் பனிவயல் உழவு
ஓவியம் : கருணா

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில், தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலாநிதி நீலமலர் செந்தில்குமார் அவர்களின் An Endless Refuge என்ற ஆங்கில் நூல் அண்மையில் ரொறன்ரோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் உரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல எழுத்தாளர்களைப் பலதடவைகள் கௌரவித்திருக்கின்றது. அந்த வகையில் கலாநிதி நீலமலர் அவர்களையும் கௌரவிக்கும் பாக்கியம் இன்று எழுத்தாளர் இணையத்திற்குக் கிடைத்திருக்கின்றது. கலாநிதி நீலமலர் அவர்களின் இலக்கியக் கருத்துரையைச் செவிமடுக்க வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் வணக்கம்கூறி, அவரைப்பற்றியும் அவரது ஆக்கங்கள் பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.
கலாநிதி நீலமலர் அவர்களின் தாத்தாதான் தமிழ் அறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். தமிழ் மீது கொண்ட அதீத பற்றுக் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பணி நீக்கம் செய்யப்படாலும் மனம் தளராது தொடர்ந்தும் தாய் மொழிக்காகப் போராடியவர். அவர் தனது மகனுக்கும் மறைமலை அடிகளாரின் பெயரையே சூடியிருந்தார். கலாநிதி நீலமலர் அவர்களின் தந்தையான மறைமலை இலக்குவனார் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது உரையைப் பல தடவைகள் நான் கேட்டிருக்கின்றேன். குறிப்பாக உலகத்தாய் மொழி நாளன்று சண் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. கலாநிதி நீலமலரின் தாயாரும் ஒரு பேராசிரியராவார். திருமதி நீலமலர் செந்தில்குமார் அவர்கள் எதிராஜ் கல்லூரியில் கல்வி கற்றவர். சென்னையில் வசிக்கும் இவர் தொடக்கத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.

12:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, Scarborough Civic Centre, 150 Borough Dr,, Toronto, Ontario M1P 4N7
மேலதிக தொடர்புகளுக்கு: 416 450 6833, 416 832 0929, 416 857 6406. | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
https://www.facebook.com/events/1726678017579758/

- கற்சிலைமடு மாணவர்களுக்காக நூலகமொன்றினைச் சிறிய அளவில் ஆரம்பிக்க நண்பர் ஜெயக்குமரன் முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றார். அது பற்றி அவர் முகநூலில் இட்டிருந்த பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஆர்வம் உள்ளவர்கள் நூல்களை மேற்படி நூலகத்துக்கு அன்பளிப்புச்செய்து உதவலாம். நண்பரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். - பதிவுகள் -
கற்சிலைமடுவின் குழந்தைகளுக்கு ஒரு சிறுவர்/குழந்தைகள் நூலகம் ஒன்றை சிறிய அளவிலேனும் அக்கிராமத்தில் உள்ள பெருந்தகையாளர்களின் உதவியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். ( ஒரு சிறு அறையேனும் தேவை.) வ.ந. கிரிதரனின் குடிவரவாளன் நாவலுடன் இந்நூலகத்தை ஆரம்பிக்க விரும்புகிறேன்.அன்பர்கள், எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கு ஒரு நூலையேனும் இந்நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
]
தொடர்புகளுக்கு: திரு. தர்சன் (ஆசிரியர்) 0775305488



கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது. கனடாவில் வதியும் எழுத்தாளர் வ.ந கிரிதரனின் “குடிவரவாளன்” நாவலின் அறிமுகநிகழ்வின் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு தொகைப்பணமே நூலாசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இச்செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சு.குணேஸ்வரன், சித்திராதரன் ஆகியோர், குறித்த பிள்ளைகளின் கல்விச்செயற்பாட்டுக்கு பொறுப்பாகச் செயற்படும் திரு தர்சன் (ஆசிரியர்) அவர்களை கற்சிலைமடுவில் நேரில் சந்தித்து கற்றல் உபகரணங்களை ஒப்படைத்தனர்.
கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.
கனடாவின் கல்வித்துறை - தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ் உறவுகளுக்கு வணக்கம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 தமிழ்விழா ஜூலை 1 (வெள்ளி) முதல் ஜூலை 4 (திங்கள்) வரை நியூ ஜெர்சியில், ட்ரென்டன் நகரில் நடைபெறவுள்ளது. நீங்களனைவரும் பேரவையின் தமிழ்விழாவிற்கு வந்து சிறப்பிக்கத் திட்டமிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். விழாவிற்கு இன்னும் முன்பதிவு செய்யாதவர்கள் பேரவை இணையத்தளத்தில் பதிவுசெய்யவும்.
பேரவையின் 29-வது தமிழ்விழா, தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவாகவும் பாவேந்தர் பாரதிதாசனின் 125-வது பிறந்த தினமாகவும் மலர இருக்கிறது. விழாவின் சிறப்பு நிகழ்வாக, தஞ்சாவூர் கலைக்குழுவினர் வழங்கும் "கங்கை கொண்ட சோழன்" எனும் வரலாற்று நாடகம் நடக்கவிருக்கிறது. தமிழ்த் திரைப்படக்கலைஞர்கள் ஜெயம் ரவி அவர்களும், அரவிந்த் சாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு "தனி ஒருவன்" திரைப்படக் கருவை (Theme) மையமாகக் கொண்டு, நம்மை மகிழ்விக்க இருக்கிறார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இன்னொரு யாழ்ப்பாண நூலக எரிப்பு நாள் வந்து கடந்து போயுள்ளது. அந்த ஒரு நாளில் நினைவு கூர்ந்துவிட்டுப் போவதால் தினமும் அழிந்து கொண்டிருக்கும் ஆவணங்களைக் காக்க முடியாது.
நண்பர்களே, நூலக நிறுவனத்தினராகிய நாம் (www.noolaham.org) ஆண்டு முழுவதும் ஆவணப்படுத்தலில் ஈடுபடுகிறோம். 5,000 நூல்கள், 7,000 சஞ்சிகைகள், 4,000 பத்திரிகைகள், 2,000 பிரசுரங்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 18,000 ஆவணங்கள். முழுக்க முழுக்க ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல இலட்சம் பக்கங்கள்.
2,700 ஆளுமைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி தமிழின் மிகப்பெரும் வாழ்க்கை வரலாற்று அகராதியை உருவாக்கியுள்ளோம்.
அவை தவிர ஏட்டுச் சுவடிகள், நினைவு மலர்கள், கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள், அழைப்பிதழ்கள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், காணொளிகள் எனச் சகலவிதமான ஆவணங்களையும் திரட்டி ஆவணக்காப்பகமாகச் செயற்படத் தொடங்கியுள்ளோம்.
அன்புடையீர், உலகத் தொல்காப்பிய மன்றம் - கனடாக் கிளை எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் தொல்காப்பியம் பற்றிய கருத்தரங்கினையும் முத்தமிழ் விழாவினையும் நடத்தவுள்ளது. அதில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தங்களை அழைப்பதில் பெருமகிழ்வு எய்துகின்றோம். இத்துடன் இருநாள் நிகழ்வுகளக்கான நிகழ்;ச்சித் தொகு;பபுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து வருகை தரும்வண்ணம் பணிவன்போடு கேட்டக்கொள்கின்றோம்.
த.சிவபாலு , தலைவர்
கார்த்திகா மகாதேவன், செயலாளர்
தமிழால் இணைவோம்! தமிழால் வளர்வோம்! தமிழை வளர்ப்போம்!
தகவல்: த.சிவபாலு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முகநூல்: கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்!
- கம்பன் கழகம், பிரான்ஸ் -
உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.
முதல்நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.