பதிவுகள் முகப்பு

அருண்மொழிவர்மனின் 'துணைக்கோடல்' நேர்காணல்களின் தொகுப்பு பற்றிய பார்வை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் டொராண்டோவில் வெளியான எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் நூல்களிலொன்று 'துணைக்கோடல்'. ஆளுமைகள் பலருடனான அருண்மொழிவர்மன் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பு. நூல் ஆளுமைகளின் தோற்றங்களை வெளிப்படுத்தும் கோட்டோவியங்களுடன் , சிறப்பாக வடிவமைக்கப்பட்டு 'தாய்வீடு' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலின் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆளுமைகள் பலரின் ஆளுமைகளைப் பல்வேறு கோணங்களில் அறிந்திட எம் சிந்தனை விருத்திக்கு அவற்றைத் துணையாகக் கொள்ளக்கூடிய நேர்காணல்களை உ ள்ளடக்கிய நூலுக்கு மிகவும் பொருத்தமான பெயர்.

நடந்த நிகழ்ச்சியில் மேற்படி 'துணைக்கோடல்' நூல் பற்றி உரையாடிய எவருமே ஏன் நூலுக்குத் துணைகோடல் என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிக் குறிப்பிடாதது ஆச்சரியத்தைத் தந்தது. இறுதியில் நூல்கள் பற்றிய தனது கருத்துகளைக் கூறிய எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான க.சண்முகலிங்கம் அவர்களும் 'துணைக்கோடல்' என்னும் சொல்லுக்கு அர்த்தம் என்ன? ஏதாவது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா? என்று தன் சந்தேகத்தைத்தான் எழுப்பியிருந்தார். அதுவும் ஆச்சரியத்தைத் தந்தது. திருக்குறளில் 'துணைக்கோடல்' என்றோர் அதிகாரமே உண்டு என்பதை யாருமே ஏன் நினைவுக்குக் கொண்டு வரவில்லை?

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: ஜோர்ஜியா (2) - தொன்மையான கஸ்பேஜி மலை! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
17 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நமது இதிகாசமான மகாபாரதத்தில் வரும் சகோதரச் சண்டையின் வடிவத்தை, கிரேக்கர்களின் தொன்மக் கதைகளிலும் நாம் பார்க்க முடிகிறது. கிரேக்கர்களின் கதைகளிலிருந்து சிலவற்றை வியாசர் கடன் வாங்கி எழுதியிருப்பாரோ என்ற சந்தேகம்கூட, ரஷ்யாவின் எல்லையருகே ஜோர்ஜியாவில் உள்ள கஸ்பேஜி (Kazbegi) மலையின் அடிவாரத்தில் நின்றபோது எனக்கு ஏற்பட்டது.

நிரந்தரமாக வெண்பனிப் படலத்தைப் போர்த்திக்கொண்டு, வெண்மேகங்கள் துயிலும் இந்த மலை ஓர் உறங்கும் எரிமலை. இது கடைசியாகக் கிறிஸ்துவுக்கு முன்பு சுமார் 750-ஆம் ஆண்டளவில் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் காக்கேசிய மலைத்தொடரில், கிழக்கு ஜோர்ஜியாவில் அமைந்துள்ள கஸ்பேஜி மலையின் உயரம் சுமார் 5,047 மீட்டர் — 16,558 அடி.

கிரேக்கர்களின் ஒலிம்பியக் கடவுள்களுக்கு முன்பிருந்த தெய்வங்களை ‘டைட்டன்கள்’ (Titans) என்பார்கள். வானத்தைக் குறிக்கும் யுரேனஸ் (Uranus), பூமியைக் குறிக்கும் கையா (Gaia) ஆகியோருக்குப் பிறந்தவர்களே இவர்கள். ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு டைட்டன்கள் இருந்ததாகக் கிரேக்கத் தொன்மம் கூறுகிறது.

அவர்களில் குரோனஸ் (Cronus) தனது சகோதரியான ரியாவை (Rhea) மணந்தார். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான சூஸ் (Zeus), பின்னர் தந்தையை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றி ஒலிம்பியக் கடவுள்களின் தலைவரானார்.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: ஜோர்ஜியா (1) வைன் நதியாக ஓடும் தேசம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
17 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜோர்ஜியா நாட்டைப் பற்றி எழுதுவதற்கு முன்பு, அந்த நாட்டைப் பற்றி என் மனதில் பல வருடங்களாகப் பதிந்திருந்த ஒரு கதையைச் சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு கதை படித்தேன். அதில் வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், ஜோர்ஜியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்கிறாள். முதலிரவு முடிந்ததும் அவளுக்குத் தாகம் எடுக்கிறது. தண்ணீர் கேட்கிறாள். மாப்பிள்ளை வீட்டார் அவளுக்கு வைன் கொடுக்கிறார்கள். அவளது தாகம் அடங்கவில்லை; மேலும் அதிகரிக்கிறது. மீண்டும் தண்ணீர் கேட்கிறாள். அவர்களோ தொடர்ந்து வைனையே கொடுக்கிறார்கள். இறுதியில், காலையில் நாவறண்டு அவள் இறந்துபோகிறாள்.

இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜோர்ஜியாவில் இரண்டு நாட்களைக் கழித்தபோது, அந்தக் கதையின் அடிப்படைக் கரு எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அஜர்பைஜான் எப்படிப் பெற்றோல் வளம் கொண்ட நாடோ, அதேபோல் ஜோர்ஜியா வைன் நதியாக ஓடும் நாடு என்று சொல்லலாம். குறிப்பாக கிழக்கு ஜோர்ஜியா எங்கும் திராட்சைத் தோட்டங்கள் பரந்து கிடக்கின்றன. எங்கள் சுன்னாகம் பகுதியில் ஒரு காலத்தில் விவசாயம் எவ்வாறு மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்ததோ, அதேபோல் இங்கு திராட்சைத் தோட்டங்களும் வைன் தயாரிப்பும் மக்களின் வாழ்க்கையோடு கலந்திருக்கின்றன.

மேலும் படிக்க ...

'பெண் மேகம் குமுறும் கணங்கள்' - கோகிலா மகேந்திரனின் 'துயிலும் ஒருநாள் கலையும் ' (1986 ) நாவலை முன்னிறுத்திய கண்ணோட்டம்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
நூல் அறிமுகம்
16 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
[எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் பிறந்ததினம் நவம்பர் 17.அதனையொட்டி வெளியாகும் கட்டுரை. அவருக்குப் 'பதிவுக'ளின் இனிய பிறந்ததின வாழ்த்துகள்.]
ஓர்  இலக்கியப் படைப்பின் நேர்த்தியும் இலக்கின் அவசியமும் அது எழுதப்படும் காலநேரத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. 
 
ஒரு பெண்ணின் அகம் என்பதும் புறம் என்பதும், எக்காலத்தும் முழு வீச்சுடன் தன்னை வெளிப்படுத்த இயலாத சம்பிரதாய கட்டுப்பாடுகளுக்குள் சிக்குண்டவாறே பயணிக்கின்றது. அதிலும் குறிப்பாக மணமான பெண் ஒருத்தி தன்னை முழுமையாக வெளிப்படுத்த இயலாத மனச்சிறைக்குள் வாழ்வதை இயல்பாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றும் எமது சமூகத்திடம் அதீதமாகவே இருக்கிறது . அதனால் தானோ என்னவோ, படைப்புலகக் கதையாளர்கள் எழுதித் தீராத புனைவுகளின் மூலம் பெண்மனதின் உட்கிடக்கையை , அதன் உண்மையான ஆழஅகலங்களைப் பகுப்பாய்வு செய்ய முயல்கின்றனர்.
 
இன்றுள்ள சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் பெண்ணியக் கருத்துகளை துணிவுடன் முன்வைப்பது வியப்பானதல்ல. ஆனால் இற்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன் அத்தகைய கருத்துகளைப் புனைவு ரூபத்திலேனும் வெளிப்படுத்துவது மிகவும் துணிவு மிக்க பெண்களால் மட்டுமே முடியும்.
மேலும் படிக்க ...

விடை பெற்று விட்டாயா, நண்பனே? - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
13 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகிலுக்கு …வாழ்வின் நிலயாமையை வசந்தனின் சாவு மறுபடியும் நினைவு கொண்டிருந்தது .இங்கே தான் இருந்தான், ஈழம்போல் தூரத்திலு மில்லை . அவன் இறந்தது கூட அவனுக்கு தெரியாமலே போய் விட்டிருக்கிற தே .அது அவனை துயரப்படுத்துகிறது . வந்த​ புதிதில் ​ தந்தையோடு வசந்தன் தங்கி இருந்த​ கீழ்வீட்டிற்கு நிறைய​ தடவை போய் வந்திருக்கிறான் .

முகிலை விட ஐந்து வயசு இளையவன் , இங்கே வந்தலிருந்து உதவியாயிருக்கிற இருந்த​ ..தோழன் . இனி அவனை படத்தில் மட்டுமே காணலாம் . நெஞ்சில் ஒரு வெறுமை சுளிரென ஓடியது . இயற்கை , செயற்கை.. ஏற்படுத்தும் காயங்கள் வலிக்கவேச் செய்கிறது .ஊரிலேயே இருந்திருந்தால் …தீவு சிறிய தொலைவுத்தூர வசிப்பிடம். இங்கே இருப்பது போல கண்ணில் காணாது இருக்க மாட்டார்கள் . ‘

இறப்பு இயல்பாக சென்றிருக்கும் வருத்தி இருக்காது . அவனின் உறவுகள் கண்ணில் பட்டு ..நீரை நிறுத்தி விடுவர் இங்கே வாழும் முறையே வேறு. அகதி வாழ்வை வாழ வைக்கிற உலகத்தையே அவன் மனம் சபிக்கிறது. உள்நாட்டில் இருப்பதை ,வெளியில் வாழ்தகவு கூட …இருந்தாலும் நம் ஊரைப் போல் வருமா ? அத்திலாந்திக் , இந்து , பசுவிக் , மத்தியதரைக் கடல்கள் எம்மை அங்கே பிரிப்பதில்லை . கூட்டணிகளை ஏற்படுத்தி விசராகவே மாறிய பேய் மனிதர்கள் திரியும் கடல்கள் ,

அவனையும் அவர்களாக மாற்றும் நாடுகள் .கொஞ்ச காலமாவது அமைதியாய் , நிம்மதியாய் , திருப்தியாய் வாழ மனம் ஏங்கிறது . சுதந்திரக் காற்றை சுவாசிக்க மூக்கு ஏங்கிறது . .இங்கே இறப்பை இயல்பாய் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.. முற்பது வருசங்களை உறைய வைத்து அகதியாய் விரட்டுற இனவெறி . அவன் என்னவோ நடை பிணம் தான்.

கடிபட்ட அவனுக்கு  துவசம் செய்யவே கோபம் தலைக்கு ஏறுகிறது . இந்த ‘அச்சம்’ ஒன்றும் முகிலை பெரிதாய் அசைக்கும் வலுவற்றது . வயது மீறிச் செல்கிற போதும் கோபமும் உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது .

. கிராமத்தில் முகில் பிரிவிலே விடுதலை அமைப்பிற்கு அள்ளுப்பட்டவர்களை கை விட்டு எண்ணலாம் , அயலில் வேற மாதிரி இருக்கலாம் . அவனும் அப் பிரிவோடு அப்படியே நின்றிருந்திருந்தால் …வாழ்க்கை வேற மாதிரிமாறிப் போயிருக்கலாம் . அவனுள் விடுதலை வேணும் என்ற குரலும் எழாமல் கூட போய் விட்டிருக்கலாம் . ஒவ்வொருவருக்கும் மணி அப்பப்ப அடிக்கும் என்பர் . விடுதலை என்பது ஒரு புனிதவேள்வி . அதில் கலக்காமல் போய் விடுற தவறை நல்லகாலத்திற்கு அவன் செய்திருக்கவில்லை . எப்படியும் வாழலாம் என்பதில் அவனுக்கு உடன்பாடில்லை . கண்ணெதிரே அநியாயம் நடக்கிற போது தட்டிக் கேட்கப்பட வேண்டும் . கேட்டேயாக வேண்டும் .

மேலும் படிக்க ...

சுருட்டுச் சுப்பர்: "யு டியூப்பில் பார்ப்பதும் பொய். ரீலில் பார்ப்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்"

விவரங்கள்
- AI & VNG -
சமூகம்
12 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
"யு டியூப்பில் பார்ப்பதும் பொய்.ரீலில் பார்ப்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்." - சுருட்டுச் சுப்பர்

கனடாவில் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் நூற்றாண்டு விழா! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்ச்சி
12 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் ரொறன்ரோவில் உள்ள தமிழிசைக் கலா மன்றத்தில் மொழியியல் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களின் நூற்றாணடு விழா கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து, கனடா பண் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து வரவேற்பு நடனமும், கனடா, அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்களின் வரவேற்புரையும் இடம் பெற்றன.

கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களி உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பல்கலைக்கழகத்தில் படித்த நாட்களில் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களுடன் பழகிய மறக்க முடியாத சில நினைவுகளைக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பேராசிரியர் ஆ. சதாசிவம் அதிகம் கவனம் செலுத்திய ஆக்கங்களில் இருந்து சுமேரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள தொடர்புகளைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது பேராசிரியர் இ. பாலசுந்தரம், திருமதி பூங்கோதை பாலராஜன் ஆகியோரால் தொகுக்கப்பட்ட நூற்றாண்டு நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப் பெற்றது. 522 பக்கங்களைக் கொண்ட இந்த நூலைத் தொகுத்து எமக்களித்த பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் மலர்ச்செண்டு கொடுத்துக் கௌரவித்திருந்தார். தொடர்ந்து பேராசிரியர் ஆ. சதாசிவத்தின் மகனான மதியழகன் ஆறுமுகம் அவர்களின் உரை இடம் பெற்றது.

மேலும் படிக்க ...

"தமிழ் இலக்கியங்களின் பன்மைத்துவம்" பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பு மற்றும் கட்டுரை வரவேற்பு - 19 டிசம்பர் 2026! - முத்தரசி ஆய்விதழ் -

விவரங்கள்
- முத்தரசி ஆய்விதழ் -
நிகழ்ச்சி
12 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மதிப்பிற்குரிய பன்னாட்டுத் தமிழ் அமைப்பின் நிர்வாகிகளுக்கு, வணக்கம். மதுரை, காமராசர் பல்கலைக்கழக இணைவு பெற்ற, தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் 'ஏ' தரச்சான்று பெற்ற அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி) - கருமாத்தூர், தமிழ்த்துறை (சுயநிதி), மதுரை "முத்தரசி - கலை இலக்கியப் பண்பாட்டுத் தமிழாய்விதழ்" (E-ISSN: 2584-1238) மற்றும் "பிறழ் இதழ்" ஆகியவற்றுடன் இணைந்து, வரும் 19.12.2026 (சனிக்கிழமை) அன்று "தமிழ் இலக்கியங்களின் பன்மைத்துவம்" என்னும் பொருண்மையில் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

உலக அரங்கில் தமிழைப் பேணி வளர்க்கும் தங்களது பன்னாட்டுத் தமிழ் அமைப்பின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும், தரமான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கிடவும் அன்போடு அழைக்கின்றோம்.

மேலும் படிக்க ...

கலாமணி பரணீதரனின் "அப்பா என்னும் பெருவெளி”யும் ஈழக்கவியின் “தந்தை இறந்த பிறகும் உயரம் குறையவில்லை” கவிதையும்! - ஏ.எச்.எம்.நவாஷ் -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் -
கவிதை
12 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

"அப்பா என்னும் பெருவெளி” என்ற படைப்பின் மையத்தில் எனக்குத் தெரிவது ஒரு தந்தையின் மரணம் அல்ல; தந்தை இறந்த பிறகும் மகனுக்குள் தொடர்ந்து வாழும் ஒரு தந்தையின் இருப்பியல்.

கலாநிதி த. கலாமணி அவர்களின் 75 ஆவது அகவையை முன்னிட்டு, மகன் க. பரணீதரன் வெளியிடும் இத்தொகுப்பு வெறுமனே தந்தை பற்றிய நினைவுகளின் தொகுப்பல்ல. அது ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குள் எவ்வாறு தொடர்ந்து வாழ்கிறார் என்ற ஆழமான மெய்யியல் அனுபவம்.

அறிவார்ந்த இடைவெளி, நினைவின் துண்டுகள், உடலுக்கும் இல்லாமைக்கும் இடையிலான பதற்றம், நுண்ணிய மெய்யியல் நகர்வு ஆகிய அழகியல் கூறுகளைப் படைப்பூக்கத் தூண்டுதலாகக் கொண்டு, ஒரு தனித்துவமான கவிதையை செதுக்கியிருக்கிறேன்.

இந்தக் கவிதையின் தலைப்பு ஏன் முக்கியமானது?

'தந்தை இறந்த பிறகும் உயரம் குறையவில்லை' என்பது இக்கவிதையின் மைய உருவகம். உடல்ரீதியாக ஐந்தடி நான்கு அங்குலமாக இருந்த தந்தை, மகனின் நினைவிலும் அறத்திலும் மனச்சாட்சியிலும் அளவிட முடியாத உயரத்தை அடைகிறார். கிளிநொச்சி நோக்கிய பயணம் இங்கு ஒரு வரலாற்றுச் சம்பவமாக மட்டும் இல்லாமல், தந்தை மகனுக்குக் கொடுத்த உலகின் முதல் உயரமாக மாறுகிறது.

மேலும் படிக்க ...

திணைப்பாகுபாடும்- இயற்கைவளமும்! - முனைவர்.கு.செல்வஈஸ்வரி -

விவரங்கள்
- முனைவர்.கு.செல்வஈஸ்வரி -
ஆய்வு
12 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்:  முனைவர்.கு.செல்வஈஸ்வரி - , தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. 


ஐவகை நிலத்தின் பாகுபாட்டிற்கு ‘திணை’ என்றுபெயரிடுகிறோம். திணை என்றாலே ‘குடி’ என்று பொருள். குடிமக்கள் வாழும் ஐவகை நிலமே ‘திணை’ என வகுக்கப்படுகிறது. திணை என்பது மக்களின் வாழிடம் மட்டுமின்றி அங்குள்ள மரம், செடி, கொடிகள், உயிரினங்கள், பயிரினங்கள், மற்றும் விலங்குகள்அனைத்தும்இயற்கை நம்பியே வாழ உறுதுணைபுரிகின்றது. பண்டையோரின் திணைசார்ந்த வாழ்வியல் இயற்கையோடு ஒத்து அமைவதை வெளிக்கொணரும் வண்ணம் ஆய்வதே இக்கட்டுரை அமைகின்றது. திணைப்பாகுபாடு பற்றி அறிஞர் கருத்து,

‘‘திணை என்பது இடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள், உயர்திணை, அஃறிணையாகிய பிரிவு, வீடு, திண்ணை, உயர்நிலம்’’1

‘‘திணைபற்றிகூறுகையில்பூமி, இடம், குடி, பொருள், குலம், ஒழுக்கம், ஐந்திணை, பெருந்திணை.’’2

‘‘திணை பற்றி அபிதான நூல் கூறுகையில் உயர்திணை, அஃறிணை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் இவைமுறையே மலை, மணற்காடு, காடு ஊர், கடல்சார்ந்த நிலங்கள் அகத்திணை, புறத்திணை ’’3 என்று அகராதி பொருள் விளக்கம் அளிக்கின்றது.

மேலும் படிக்க ...

நற்றிணை கூறும் தொழில் முறைகள்! - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து -
ஆய்வு
12 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர் மூ.சிந்து, இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி), காளப்பட்டி ரோடு, கோயம்புத்தூர் – 6410483 -


முன்னுரை

சங்க இலக்கியத்தில் அகத்திணையான நற்றிணை ஐந்திணை ஒழுக்கங்கங்களைப் பற்றிய பாடல்களால் தொகுக்கப்பட்டுள்ளது. ஐந்திணை நிலத்தில் மக்கள் மேற்கொண்ட தொழில்கள் குறிப்பிடப்படுகின்றன. சங்க இலக்கியம் வேட்டைத் தொழிலில் துவங்கி உழவு, நெசவு இரும்பு, தச்சு, போர், கைத்தொழில், பண்டமாற்று, வாணிபம் என்று பல்வேறுபட்ட தொழில்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் அனைத்து நிலத்திற்கும் ஏற்ப ஒரு பொதுவானத் தொழிலாக உழவுத்தொழில் குறிப்பிடப்படுகிறது. சில குலத்தொழில்களாகவும் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்களுக்கு என சிறப்பிடம் பெற்ற ஊர்களும் காணப்படுகின்றன.

வேட்டைத்தொழில்

பழங்காலமக்கள் நாகரிகத்தில் கூடித்தொழில் செய்தல் வழக்கம் இருந்தது. வேட்டையாடுவதோடு, விளைச்சலில் கிடைத்தவற்றை அவர்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டனர். தம்முள் ஒருங்கிணைந்து கூட்டுச் சமுதாயம் உருவாக வழி வகுத்தனர்.

மேலும் படிக்க ...

சுசித்திரா விஜயனின் 'நடுநிசி எல்லைகள்'! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நூல் அறிமுகம்
12 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரிஸ்டராகப் பயிற்சி பெற்றுள்ள சுசித்ரா விஜயனின் ‘Midnight's Borders: A People's History of Modern India (2021)’ என்ற ‘கள ஆய்வு’ நூலை, ‘நடுநிசி எல்லைகள் நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு’ என்ற தலைப்பில் ஞான வித்யா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். இந்நூலை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அண்மையில் ஏற்பட்டது. இந்திய எல்லைகள் பிரச்சினைபற்றி செய்திகள் வாயிலாக மேலோட்டமாக அறிந்திருக்கிறேன். ஆனால் இந்திய தேசிய உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து - அந்த மக்களின் பிரச்சனைகளை வாசித்தபோது மனதை அறுக்கும் காட்சிகளாக என்னால் பார்க்க முடிந்தது.

ஏதோ பழைய விடயங்களை அறிவதுபோல எனக்குத் தோன்றவில்லை. 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எட்டாண்டடுகள்வரை 9,000 மைல் பயணங்களை மேற்கொண்டு பாராபட்சமாக விளிம்புநிலை மக்களுடன் சுசித்திராவால் நேரடியாக நடாத்தப்பட்ட உரையாடல்களின் போது - அந்த மக்களின் உணர்ச்சிபூர்வமான வரலாற்றின் உருவாக்கமாக இதனைப் படிக்கமுடிந்தது. உண்மையில் உயரும் ஒளிரும் இந்தியா என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பத்தை தோலுரித்துக் காட்டும் சுசித்ரா விஜயன் நுண் உணர்வுமிக்க உணர்ச்சிபூர்வமான சித்தரிப்புகளுடன் எல்லைகளைக் காட்சிப்படுத்திக் காட்டுகின்றார்.

மேலும் படிக்க ...

வித்துவ சிரோமணி சி.கணேசையர் நினைவாக......

விவரங்கள்
Administrator
இலக்கியம்
11 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தமிழறிஞர் வித்துவ சிரோமணி சி.கணேசையர் அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. ஆய்வுக்கட்டுரைகளை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வந்தவர். இவரது தொல்காப்பிய ஆய்வுக்கட்டுரைகள் இவருக்குப் பெரும் புகழைத்தேடித் தந்தன. மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கின்றார். இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பை இப்பதிவின் இறுதியில் தந்திருக்கின்றேன். அது இவரது இலக்கியப் பங்களிப்பைத் துல்லியமாக எடுத்துரைக்கும்.

இவரைப்பற்றி எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஶ்ரீலங்கா சஞ்சிகையின் நவம்பர் 1960 இதழில் எழுதிய கவிதை இது. அ.ந.க என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அதனை கணேசையரின் நினைவு தினமான நவம்பர் 8 இனையொட்டி இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். தமிழறிஞரான இவரைப்பற்றி அடிக்கடி நான் ஊடகங்களில் காண்பதில்லை. இவரைப்போன்ற தமிழறிஞர்களை, இவர்கள்தம் இலக்கியப் பங்களிப்புகளை நினைவு கூர்தல் அவசியம்.

தமிழ் முனிவர் கணேசையர் - அ.ந.க (அ.ந.கந்தசாமி) -

செந்தமிழ் மாமுனிவன் சின்னையர் பெற்றெடுத்த
நந்தமிழ் ஆசான் கணேசையன் - முந்தும்
தவவளத்தால் ஈழத் தமிழ்வளர்க்க வந்தான்
அவன்நினைவு பேணிடுவோம் யாம்.

புன்னாலைக் கட்டுவனின் நற்புலவர் தங்கோமான்
பொன்னைய்ய வள்ளல் துணைக்கொண்டு - தன்னேரில்
தொல்காப் பியத்தைத் துலக்கி வெளியிட்டு
ஒல்காப் புகழெய்தி னான்.

ஈழப் புலவர் இனிய வரலாறு
காலக் கடலில் கரையாது - நூலாய்த்
தொகுத்துரைத்தான் செந்தமிழ்ச் சேவையஃ தொன்றே
அகத்தே நிலைகொண் டவன்.

மற்றெல்லாம் பற்றுமிவன் அற்றாலும் வண்டமிழின்
பற்றொன்றே பற்றாகப் பற்றிட்டான் - குற்றமில்
செந்தமிழைச் சேர்ந்தார்க்கு வாரி வழங்கிவந்த
அந்தணர்தம் கோவென் றறை.

நினைவெல்லாம் செந்தமிழின் நன்நினைவே காணும்
கனவெல்லாம் செந்தமிழ்க் கானம் - அனைத்தும்
தமிழுக் கெனவளித்த தண்டமிழா என்பேர்
தமிழுள்ள காலுலகில் வாழி.

- ஶ்ரீலங்கா - நவம்பர் 1960

மேலும் படிக்க ...

நினைவுக் குளியல் (7): ஞானக் கிறுக்கு! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
இலக்கியம்
10 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘ஞானக் கிறுக்கு’வென தமிழில் சொல்லப்படுவதை என் சின்ன வயதில் நான் கேட்டிருக்கிறேன். பெரிய வகுப்பு படித்த, படித்துவிட்டு வேலையில்லாமலிருந்த பல அண்ணன்மார்கள் சிலவேளைகளில் அதுபற்றி சிரித்துச் சிரித்துப் பேசுவது இன்றுமெனக்கு ஞாபகம். பாரதியார் அவ்வாறானவர். வளர்ந்த பின்னால் அவரையே நான் ஞானக் கிறுக்காகக் கொண்டாடியதுமுண்டு.

இந்தத் தேர்ந்தெடுப்பு முக்கியமானவோரிடமாகும். ஏனெனில் வெறும் கிறுக்குத்தனமும் ஞானவான் அல்லது ஞானக் கிறுக்கன்போல் தோற்றம் காட்டிவிடுவதுண்டு.

நான் இந்த இரண்டாவது வகையான கிறுக்கனாக இருந்தேனென்றுதான் இப்போது நினைக்க எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கையின் போக்கினைத் திசையெடுத்துச் செல்லும் முக்கியமான தருணங்களில், நான் நிதானமாகச் சிந்தித்து எந்தவொரு முடிவினையும் எடுத்துவிடவில்லை. ‘வந்தால் வா, போனால் போ’ என்பதுபோலவோ, ஆசைவயப்பட்டோ எடுத்ததாகவே அந்த முடிவுகள் இருந்திருந்தன.

ஆனாலும் பெரும் சேதாரங்களின்றி வாழ்க்கையின் சில உயரங்களை நான் அடைய முடிந்திருந்தேன்.

மேலும் படிக்க ...

பத்துப்பாட்டில் வருணனை அழகியல்! - முனைவர் சி.பொற்கை ஆதிரை -

விவரங்கள்
- முனைவர் சி.பொற்கை ஆதிரை -
ஆய்வு
08 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- முனைவர் சி.பொற்கை ஆதிரை, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), பூசாகோ கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 014. -


முன்னுரை

இலக்கியங்களைப் படைப்பதில் கையாளும் அழகியல் உத்திகளுள் வருணனை முக்கிய இடம்பெறுகிறது. இவ்வுத்தி பழந்தமிழ் இலக்கியங்களில் நேர்த்தியான முறையில் கையாளப்பட்டுள்ளது. இவ்வருணைகள் அடியளவில் குறுகிய எட்டுத்தொகைத் தன்னுணர்ச்சிப் பாடல்களில் சுருக்கமாகவும் காப்பியம் நோக்கிய வளர்ச்சியைக் காட்டும் பத்துப்பாட்டில் விரிவாகவும் காணப்படுகின்றன.

தொல்காப்பியத்தில் இலக்கியங்களுக்கான அழகியல் செய்திகள் இருந்தாலும் கூட வருணனை குறித்து நேரடியான இலக்கணக் குறிப்புகள் காணப்படவில்லை. ஆயினும், எண்வகை வனப்புகளில் ஒன்றான தொடர்நிலைச் செய்யுளுக்குரிய ‘தோல்’ பற்றிக் கூறுமிடத்து அதில் வருணனை பயன்படுத்தப்படும் கூறு உள்ளது. இதனைப் பத்துப்பாட்டில் காணமுடிகிறது. எனவே ‘தோல்’1 (செய்யு.நூ.230) என்னும் வனப்பு வருணனையை உள்ளடக்கியதாகக் கொள்ள இடமுண்டு. “சொற்களாலும் தொடர்களாலும் கண்முன் காட்சிப்படுத்தும் பாங்கில் தரப்படும் விரிவான விளக்கங்கள் வருணனையாகின்றன”2 என்கிறார் ச.வே.சுப்பிரமணியன்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் பின்வருநிலையணி! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
08 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

கட்டுரையாளர்: - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061 -  


முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று பின்வருநிலை அணியாகும். கம்பர் தன் காப்பியத்தில் தண்டியலங்காரத்தின் பின்வருநிலையணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தில் வழி ஆராய்வோம்

பின்வருநிலையணி

ஒரு செய்யுளின்கண் முன்னர் வந்த சொல்லே திரும்பவும் வரினும் அல்லது முன்னர் வந்த பொருளே பின்னர்த் திரும்ப வந்தாலும் இது பின்வருநிலையணியாகும்.

“முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்

பின்வரும் என்னிற்பின்வரு நிலையே”

(தண்டியலங்காரம் 41)

பின்வருநிலையணியின் வகைகள்

இது சொற்பின்வருநிலை, பொருள் பின்வருநிலை, சொற் பொருள் பின்வருநிலை, என மூன்று வகைப்படும்.

1.சொற்பின்வருநிலையணி

முன் வந்த சொல்லே பின்னும் பல விடத்தும் வந்து அதே பொருள் உணர்த்துவது சொற்பின்வருநிலையணி ஆகும்.

நிகும்பலை யாகப்படலத்தில் அரக்கர் சேனையை இலட்சுமணன் அழிக்கின்றான்.

இலட்சுமணனது வில்லினின்றும் வெளிப்பட்ட வலி மிக்க அம்புகள் இடைவிடாத மழை போல வந்து பாய்வதனால், போரில் கொல்லும் சிறந்த போர் வீரர்களும், யானை வீரர்களும், குதிரை வீரர்களும், தம் திண்ணிய தலையிலே சூடிய மலர்க் கண்ணிகளில் தாவி மொய்க்கின்ற வண்டுகளோடு இறந்து பட்டனர்.

“மா வாளிகள் மா மழை போல் வரலால்

மா ஆளிகள் போர் தெறு மா மறவோர்

மா ஆளிகள் வன் தலையில் தலைவாம்

மா ஆளிகளோடு மறிந்தனரால்”

(நிகும்பலையாகப்படலம் 2915)

மேலும் படிக்க ...

ஈழத்து சிறுகதை பகுப்பாய்வு ( 05) : வ.ந.கிரிதரனின் ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ - காலப் பேரழிவு, இருத்தலியல் மீறல் மற்றும் பின்நவீனத்துவ அறிவியல் புனைகதை! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
07 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

“எவ்வளவு மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு மாசுபடுத்தப்பட்டு விட்டது இந்த அழகிய நீல வண்ணக் கோள்... மானுட வரலாற்றில் மிகப்பெரியதொரு பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டவுள்ளார் ஆத்மாநாம்.”

 — வ.ந.கிரிதரன், ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ (2005)

 1. அறிமுகம்:

எதிர்காலத்தின் நிழலும் அறிவியலின் அகந்தையும்

வ.ந.கிரிதரனின் ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ உரைபடைப்பு, தமிழ் அறிவியல் புனைகதை (Tamil Science Fiction) தளத்தில் வெறும் தொழில்நுட்ப நுட்பங்களை விவரிக்கும் கதையாக அமையாமல், ஆழமான தத்துவார்த்தக் கேள்விகளையும் சூழலியல் அறவியலையும் எழுப்பும் ஒரு முன்னோடிப் படைப்பாகத் திகழ்கிறது. கி.பி. 3025 ஆம் ஆண்டினைப் பின்னணியாகக் கொண்ட பிரதியை, ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் பண்பாட்டு விமர்சனப் பாணியில் (Ecocriticism, Existentialism, and Science & Technology Studies) பகுப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கட்டுரை.

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து உலக இலக்கிய வெளியில் அறிவியல் புனைகதைகள் (Science Fiction) வெறும் தொழில்நுட்பச் சாதனைகளின் கற்பனைப் பெட்டகங்களாக மட்டும் இயங்கவில்லை; மாறாக, அவை மனிதகுலத்தின் தார்மீக வீழ்ச்சியையும் எதிர்காலச் சூழலியல் பேரழிவுகளையும் முன்னறிவிக்கும் தத்துவார்த்த எச்சரிக்கைக் குரல்களாக உருமாறியுள்ளன. தமிழ் இலக்கியச் சூழலில், வ.ந.கிரிதரனின் ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு!’ சிறுகதை இந்த உலகளாவிய மாற்றுப் பார்வையின் மிக முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கிறது. கி.பி. 3025 ஆம் ஆண்டின் வறண்ட நிலப்பரப்பை களமாகக் கொண்ட இப்படைப்பு, தொழில்நுட்பத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி மனிதனை விடுவிக்கிறதா அல்லது அவனது ஆன்மீக மற்றும் உயிரியல் இருப்பை முற்றிலுமாகத் துடைத்தெறிகிறதா என்ற ஆழமான வினாவை எழுப்புகிறது.

மேலும் படிக்க ...

கேலிச்சித்திரம்: சுருட்டு சுப்பர் பாடுகின்றார்! - AI & VNG -

விவரங்கள்
- AI & VNG -
சமூகம்
07 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
சுருட்டு சுப்பர் பாடுகின்றார்: "நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை". சுருட்டு சுப்பர் கம்பாவாரிதியின் அண்மைக்காலக் கூற்றினைக் கேட்டிருப்பார் போலும்.  [* சுருட்டு குடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.] 

கம்பவாரிதியின் கருத்துகள் பற்றி! - நந்திவர்மப் பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப் பல்லவன் -
அரசியல்
07 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முகநூலில் வழக்கம்போல் நம்மவர்கள் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விட்டார்கள். காரணம் கம்பவாரிதி ஜெயராஜ் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துகள்தாம். அவர் அப்படி என்ன கூறி விட்டாரென்று இவர்கள் துள்ளிக்குதிக்கின்றார்கள்? அவர் கூறினார் நம்மவர்கள் நடந்த போராட்டத்தை மறந்து விட வேண்டுமென்று. புகலிடத்து செல்வம் நாட்டுக்குள் வருவது நிறுத்தப்பட வேண்டுமென்று.

போராட்டத்தைத்தான் மறந்து விட வேண்டுமென்று கூறுனார். தமிழர்களின் வரலாற்றை மறந்து விட வேண்டுமென்று அவர் கூறவில்லை. போராட்டம் என்று அவர் கருதுவது ஆயுத ரீதியாக, அகிம்சை ரீதியாக இதுவரை நடந்த போராட்டத்தை என்று அவர் கூறுவதாக நான் கருதுகின்றேன். ஒரு விடயத்தைப்பற்றி ஒருவருக்குக் கருத்துக்கூறும் உரிமை உண்டு. அவ்வகையில் அவர் அவ்விதம் கூறுவதற்கு உரிமை உண்டு. அக்கருத்தைப்பற்றித் தர்க்கம் செய்யலாம். அதற்காக அவர் நடத்தையைப் படுகொலை செய்யக்கூடாது.

மேலும் படிக்க ...

வலி – உடலின் எச்சரிக்கையா? மூளையின் அனுபவமா? - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
ஆய்வு
07 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நீண்டகால வலியின் உடலியல், உளவியல் மற்றும் சமூகப் பரிமாணங்கள்

முன்னுரை

“வலி” என்ற சொல் மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், அதன் பின்னால் மனித உடலையும் மூளையையும் உள்ளடக்கிய மிகச் சிக்கலான உயிரியல் செயல்முறை இருக்கிறது. காயம் ஏற்பட்டால் வலி வருகிறது; நோய் ஏற்பட்டால் வலி வருகிறது; அழற்சி ஏற்பட்டாலும் வலி ஏற்படுகிறது. ஆனால் சில நேரங்களில் காயம் குணமாகிவிட்ட பின்னரும் வலி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க உட

வலி என்பது உடலில் நிகழும் ஒரு நிகழ்வா? அல்லது மூளை உருவாக்கும் ஒரு அனுபவமா?

இன்றைய வலி அறிவியல் கூறுவது, இவ்விரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது என்பதாகும். வலி என்பது உடல், நரம்பு மண்டலம், மூளை, உணர்ச்சிகள், எண்ணங்கள், தூக்கம் மற்றும் சமூகச் சூழல் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் சிக்கலான அனுபவமாகும். சர்வதேச வலி ஆய்வு சங்கம் (IASP), வலியை உண்மையான அல்லது சாத்தியமான திசு சேதத்துடன் தொடர்புடைய அல்லது அதனை ஒத்த “விரும்பத்தகாத உணர்வியல் மற்றும் உணர்ச்சி அனுபவம்” என்று வரையறுக்கிறது. மேலும் வலி உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகளால் வெவ்வேறு அளவில் பாதிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடுகிறது.

மேலும் படிக்க ...

தீபாவளித் திருநாள் தித்திக்கும் கொண்டாட்டம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா --

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா --
கவிதை
07 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உள்ளங்கள் திருந்திட உள்ளங்கள் உயர்ந்திட
உள்ளங்கள் மகிழ்ந்திட உயர்வான நாளாய்
எண்ணியே முன்னோர்கள் தேர்ந்துமே எடுத்தார்
இன்பமாய் கொண்டாடத் தீபத்திரு நாளை

மத்தாப்பு மலரும் பட்டாசு வெடிக்கும்
புத்தாடை புத்துணர்வு கூடவே சேரும்
எத்தனையோ பட்சணங்கள் இல்லங்கள் எங்கும்
வரவேற்று நிற்கும் மனம்மகிழ்ந்து துள்ளும்

தீபாவளிக் கென்று கதையொன்றும் இருக்கு
தீமையின் உருவான அரக்கனது கதையே
அரக்கனைச் சக்தி அழித்த தினமதனை
அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார் மண்ணில்

தீமையின் உருவாக அரக்கன் அன்றிருந்தான்
அழிந்தது ஆனந்தம் என்றுமே இருந்தோம்
ஆனாலோ பலவரக்கர் திசைதோறும் வருகிறார்
அம்பிகையை வேண்டுவோம் அவ்வரக்கர் தோன்றாமல்

மேலும் படிக்க ...

பதிவுகள் இணைய இதழ்மேல் பற்று வைத்திருந்த கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதன்! வெளிப்படுத்தும் மின்னஞ்சல்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
05 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளரும், கலை, இலக்கியத்திறனாய்வாளருமான வெங்கட் சாமிநாதன் அவர்களுடனான தொடர்பினை எனக்கு ஏற்படுத்தித் தந்தது பதிவுகள் இணைய இதழ்தான். பத்து வருடங்களுக்கும் அதிகமாக ம், அவர் மறையும் வரை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருந்தார். அவரது நினைவு அவ்வப்போது தோன்றி மறைவதுண்டு. இன்றும் அவ்விதமே தோன்றியது. அப்போது என் மின்னஞ்சல்களில் அவர் எழுதியவற்றை மீண்டும் பார்த்தேன்.

அவரது மின்னஞ்சல்கள் எவ்வளவுதூரம் அவர் பதிவுகள் இணைய இதழ்மேல் மதிப்பை வைத்திருந்தார் என்பதை எடுத்தியம்பின. இவரைப்போல் நான் சிறுவயதில் அறிந்து வியந்த கலை, இலக்கிய ஆளுமைகள் பலருடன் எனக்குத் தொடர்பினை ஏற்படுத்தித் தந்தது பதிவுகள் இணைய இதழே.

திரு. வெங்கட் சாமிநாதனை நான் ஒரு போதுமே சந்தித்ததில்லை. சந்திக்காவிட்டாலும் அவருடன் நீண்ட காலமாக வைத்திருந்த எழுத்துலகத்தொடர்பு அதை ஈடு செய்துவிட்டதாகவே உணர்கின்றேன்.

மேலும் படிக்க ...

திருப்பூர் இலக்கிய விருதுகள் 2026 (18 ஆம் ஆண்டு விழா )! - தகவல் : சுப்ரபாரதிமணியன்-

விவரங்கள்
- தகவல் : சுப்ரபாரதிமணியன்-
நிகழ்ச்சி
02 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்கள் கூடுகை / விருது வழங்கும் விழா 20/10/26 மாலை நடைபெற்றது. சேவ் அலுவலகம், 5 ஐஸ்வர்யா நகர், கேஎன்பி காலனி, திருப்பூர் ( தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் அருகில்). தலைமை: வியாகுலமேரி ( இயக்குனர் சேவ் ).
முன்னிலை : சுப்ரபாரதிமணியன். எழுத்து அனுபவம் : கருத்தரங்க உரை விருது பெற்றக் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் விருதைப் பெற்றுக்கொண்டு பேசினார்கள்:

வாழையூர் குணா / க.வானமாமலை/ கார்த்தி டாவின்சி / எஸ் மோதிலால் நேரு / பா சத்தியமோகன் / ஜி சிவக்குமார் சுப்ரமணியன் கில்லிப்பாலம் / மருத்துவர் த ரவிக்குமார் தமிழ்ச்செல்வி ராஜ ராஜன் /லதிகா விவேகானந்தன் / கிளமெண்ட் விக்டர்/ பெரியார் விஜயன் / யுவராஜ் சம்பத் ஞானபாரதி / காங்கேயம் அப்பு / /மானூர் புகழேந்தி / யாழ் எஸ் .ராகவன் / சாந்தா கோவிந்தன் /ஜா. சலேத் / விசித்திர கவி / நிழலி / இ.தாஹிர் பாட்சா / கே ஜெயலட்சுமி/ முகில் தினகரன் / வே நெடுஞ்செழியன் / வானதி சந்திரசேகரன் சாந்தா தத் / பாளை கோ.மாணிக்கம்/ / இளங்கோ ஓடை / கருமலை பழம் நீ / அறிவுச் செல்வன் / வலங்கைமான் நூர்தீன் வலம்புரி லேனா / வீரன் வயல் வீ. உதயகுமாரன் / . மோகன்குமார் எஸ். குழித்துறை / அரவிந்தன் ரவிச்சந்திரன்

கனவு இலக்கிய அமைப்பு / சேவ் ( Save ) இனைந்து இந்த விழாவை நடத்தியிருந்தன.சுசீலா, உஷா, கிரிஜா சுப்ரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்

மேலும் படிக்க ...

அவள் கற்றுக்கொண்டது உடற்கூறியல் அல்ல! பாத்திமா ஸெய்னப்: ஒரு பெண்ணின் இருப்பியல் சாட்சியம்! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
கவிதை
02 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ஷாஃபி ஷிஹாப்தீன் பாத்திமா ஸெய்னப்பின் வாழ்க்கை ஒரு தனிப்பட்ட வெற்றிக்கதை மட்டுமல்ல; வெறுப்புக்கு முன்னால் மனிதநேயத்தையும், அவமானத்திற்கு முன்னால் அறிவையும், நிராகரிப்புக்கு முன்னால் நம்பிக்கையையும் நிறுத்திய ஓர் அழகிய மானுடச் சாட்சியம். கவிதையும் கலையும் மனிதநேயத்தின் ஒளியைச் சுமந்து செல்லட்டும்]

பதினான்கு வயதில்
அவளுக்குத் தெரிந்திருந்தது
கணிதத்தின் விடைகளை.

ஒரு முக்கோணத்தின்
மூன்று கோணங்களும்
எதிரெதிராக நிற்கும்போதும்
அது முக்கோணமாகவே இருக்கிறது.

மனிதர்களுக்கு மட்டும்
இந்த எளிய உண்மை
ஏன் புரிவதில்லை?

2019 மே.

ஒரு தேதிக்குப் பிறகு
காலம் தனது மொழியை மாற்றிக்கொண்டது.

நேற்று வரை
அவளுடன் விளையாடியவர்கள்
இன்று அவளுடைய பெயரை
ஒரு குற்றத்தின் முன்னொட்டாக உச்சரித்தார்கள்.

தந்தையின் பெயர்
திடீரென்று
அவளுடைய நெற்றியில்
எழுதப்பட்ட தீர்ப்பாயிற்று.

மேலும் படிக்க ...

கவிதை: செயற்கை எழுத்தாளர்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
02 நவம்பர் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு பந்தி எழுத்துப் பிழை இல்லாமல்
எழுத முடியாதவர்
எழுதுகின்றார் பக்கம் பக்கமாக,
எழுத்துப்பிழை இல்லாமல்
எழுதுகின்றார்.
எண்ணிக்கையற்று எழுதுகின்றார்.
எண்ணிக்கையற்ற பக்கங்களில்
எழுதுவதால் ,
இவர்கள் நினைக்கின்றார்கள்
இப்படி எழுதி விட்டால்
இவர்கள் எழுத்தாளர்கள்
ஆகி விட்டார்கள்
என்று.
நீங்கள் எத்தனை பக்கங்கள் எழுதினாலும்
நீங்கள் எப்படித்தான் சிந்தனையாளர்கள் ஆகக்
காட்டிக்கொண்டாலும்.
உங்களால் நீங்கள் எழுதிய
எந்தவிடயங்களைப் பற்றியும்
மேடைகளில்
தர்க்கம் செய்ய முடியாது.
ஏனெனில்
தர்க்கம் செய்வதற்குச்
இயற்கை நுண்ணறிவு NI அறிவு தேவை.
செயற்கை நுண்ணறிவு AI அல்ல.
மேடையில்
இயற்கை நுண்ணறிவு
இல்லாவிட்டால்,
செயற்கை நுண்ணறிவு
உதவிக்கு வராது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. பதிவுகள் வாசகர்கள், படைப்பாளிகள் கவனத்துக்கு!
  2. கூட்டு அறிக்கை: கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து எதிர்காலத்திற்கான ஒரு கூட்டணியை உருவாக்குகின்றன! - தமிழில் - நுண்ணறிவு எந்திரன் -
  3. டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்... - வ.ந.கிரிதரன் -
  4. ரஞ்சகுமாரின் “கோசலை” சிறுகதை: ஈழப் போரின் இருத்தலியல், தாய்மை மற்றும் துன்பியல் அழகியல் பற்றிய ஒரு வாசிப்பு - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
  5. நினைவுக் குளியல் (6) கனவுகளும் மாறிய நிஜங்களும்! -தேவகாந்தன்-
  6. தாமரைச் செல்வியின் 'சுமைகள்' நாவல் - ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  7. பாட்டி சொன்ன புராண, இதிகாசக் கதைகள்! - ஶ்ரீரஞ்சனி -
  8. கேலிச்சித்திரம்: சுருட்டு சுப்பரின் திருகுதாளங்கள்! - AI & VNG -
  9. தேவதேவனின் சொல்லாளுகைத் திறன் (நல்லதோர் வீணை கவிதைத் தொகுப்பை முன்வைத்து) - மு. இராமர் மாசானம், முனைவர் பட்ட ஆய்வாளர் -
  10. அனைவருக்கும் தொல்காப்பியம் - சான்றிதழ்ப் படிப்பு (அடிப்படை நிலை) - தகவல்: சுகந்தன் வல்லிபுரம் -
  11. இணைய வழித் தொடர் வகுப்பு: சிறுவர்க்கான தொல்காப்பியம்! (அடிப்படை நிலை) - தகவல்: சுகந்தன் வல்லிபுரம் -
  12. செம்மணிப் புதைகுழி: இடைக்கால அறிக்கை மீதான சந்தேகங்களும், சர்வதேச விசாரணையின் அவசியமும்! - வ.ந.கிரிதரன் -
  13. டொரோண்டோ பெரும்பாகத்திலுள்ள நூலகங்களுக்கு உங்கள் நூல்களை விற்க விரும்புகின்றீர்களா? - வ.ந.கிரிதரன் -
  14. நமது வரிப்பணம், பிறநாட்டுப் புத்தகங்கள்: கனடாத் தமிழ் நூல்களை நூலகங்கள் ஏன் அதிகம் வாங்குவதில்லை? - நந்திவர்மப்பல்லவன் -
பக்கம் 1 / 137
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி