பதிவுகள் முகப்பு

திருமுருகாற்றுப்படை - சில வினாக்களும் விவாதங்களும்! - முனைவர் ஆ. சந்திரன்-

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன்-
ஆய்வு
02 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* கட்டுரையாளர்: உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.

முன்னுரை

பத்துப்பாட்டு என்ற பெயரில் இன்று வழங்கப்படும் நூல்களுள் முதலில் இடம்பெற்றுள்ளது திருமுருகாற்றுப்படை. முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் பாடப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்று கூறும் நச்சினார்க்கினியர் உரையுடன் நமக்குக் கிடைத்துள்ளது. இத்திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவர் நெடுநல்வாடை மற்றும் எட்டுத்தொகையிலுள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர் என்றும், இவர் பிற்காலத்தவர் என்றும் நிறுவியுள்ளார் பேராசிரியர் எஸ்.வையாபுரிபிள்ளை1.

எனில் பிற்காலத்தில் பாடப்பட்ட இத்திருமுருகாற்றுப்படை எவ்வாறு பத்துப்பாட்டில் ஒன்றாகச் சேர்ந்தது? பத்துப்பாட்டில் இத்திருமுருகாற்றுப்படைக்கு உரிய இடம் என்ன? என்பதனைப் பற்றிய கேள்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. மேலும் பத்துப்பாட்டிலுள்ள மற்ற ஆற்றுப்பாடல்களுடன் இது கொண்டுள்ள உறவு என்ன? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன. இவற்றிற்கான விளக்கங்களைத் தேட முயல்கின்றது இக்கட்டுரை.

திருமுருகாற்றுப்படையும் தொல்காப்பிய விளக்கமும்

“கூத்தர், பொருநர், பாணர், விறலி” ஆகிய நால்வர் மட்டுமே ஆற்றுப்படுத்த உரியவர்கள் என்கிறது தொல்காப்பியம்2. ஆனால் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர் “பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்பு முதலியனவுங் கொள்க” எனப் பொருள் விரித்து முருகாற்றுப்படையும் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் என்கிறார். ஆனால் சங்க இலக்கியங்களுக்கு இலக்கண நூலாக ஆய்வாளர்களால் கருதப்பெறும் தொல்காப்பியத்தில் ‘அடியவர்’ ஆற்றுப்படுத்த உரியவர் என்ற குறிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

ஆய்வு: கம்பராமாயணத்தில் ஜோதிடவியல்! -முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
-முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
31 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


*கட்டுரையாளர் - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, 


முன்னுரை

இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று முக்காலத்திலும் நடைபெறுவதை அறிவன் நமக்கு கூறுவர். அறிவன் என்பது ஜோதிடரைக் குறிக்கும் சொல்லாகும். சங்க இலக்கியத்தில் கணியன் என்று கூறப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதல் இன்று வரை எல்லா இலக்கியங்களிலும் ஜோதிடக் குறிப்புகளை நாம் காண முடிகிறது. ஜோதிடம் குறித்த சிந்தனை மிகப் பழங்காலம் தொட்டே நம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. ஜோதிடம் என்பது மக்கள் அறிவியல் பயனால் பெற்ற ஒன்று. ஜோதிடம் அன்று முதல் இன்று வரை தமிழக வாழ்வுகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்களும், மன்னர்களும் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். மன்னர்கள் போர் செய்யும் போது, திருமணம் செய்யும்போது, முடிசூட்டும் போது நல்ல நாள் பார்த்து செய்து மகிழ்வுடன் வாழ்ந்து வந்தனர். கம்பர் தம் இராமாயணத்தில் ஜோதிடம் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

ஜோதிடவியல்

ஜோதிடம் என்பது கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றினால் ஏற்படும் நன்மை, தீமைகளைக் கணித்துக் கூறுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்வையும் ஜோதிடத்தின் மூலம் கணித்து கூறுகின்றனர். பழந்தமிழர் ஒரு செயலைச் செய்ய வேண்டுமாயின், நாளும் கோளும் பார்த்து நல்ல நாளினைத் தேர்வு செய்து அச்செயலினைச் செய்துள்ளனர் என்பதனைப் புறத்திணைகளில் உள்ள 36-வது நூற்பா கூறுகிறது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் விண்ணில் நட்சத்திரங்கள் அல்லது கோள்கள் இருக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய ஆயுள், இயல்புகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கணிப்பது ஜோதிடம் ஆகும்.

மேலும் படிக்க ...

நினைவுக் குளியல் (5): கறை படிந்த கைகள்! - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
31 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


‘தாயொடு செல்வம் போம், தந்தையொடு கல்வி போம்’ என ஒரு பழம் பாடல் சொல்கிறது. என் ஒன்பதாவது வயதில் என் தந்தையை நான் இழந்தபோதும், என் கல்விக்கு எந்தப் பங்கமும் நேரவில்லை. அதற்காக எந்தளவு சிரமத்தை என் தாய் உத்தரித்திருப்பார் என்று உணர்கிற வயதும் அப்போது எனக்கில்லை. ஆனால் வாழ்க்கைச் சாகரத்தில் நான் அடியெடுத்து வைத்த பிறகு, ஒவ்வொரு சிரமங்களையும் சாதுர்யமாய்க் கடந்திருந்த காலங்களில், கல்வியின் அவசியத்தையும் அதை எனக்களித்த தெய்வம் அதற்காய்ப் பட்ட சிரமங்களையும் எண்ணிப்பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால் சமகாலத்தின் எந்தக் கரிசனமும் இல்லாமலேதான் அந்தக் காலம் கழிந்து சென்றதாக இப்போது படுகிறது.

மாணவ நிலையின் அந்தப் பருவம் முக்கியமானது. அது, படிப்பு கைகூடாவிட்டாலும்கூட, விளையாட்டு அல்லது சங்கீதம் அல்லது சித்திரமென ஏதோவொரு துறையில் தன்னை நன்கு பொருத்திக்கொண்டு தன்னை உயர்த்தும் சுயசிந்தனையின் உந்துதலின்றியே மேலே பறக்கக் கிளம்பிவிடுகிறது. இந்தத் துறைகளுக்குள் அமைக்க முடியாவிட்டாலும், அது இயன்றவொரு வெளியில் தன்னை நிறுவுவதில் எத்தனம் செய்யத் தவறுவதில்லை. அதிலொன்று கையெழுத்து. அதற்காக சிலர் அளவுக்கதிகமாகவும் கஷ்ரப்படுவார்கள். நான் என் கையெழுத்துக்காகப் பட்ட கஷ்டங்களும் கரிசனங்களும் அளப்பரியவை. அந்த அளவுக்கு பாடங்களில்கூட நான் கவனம் செலுத்தியதில்லை. அதை நினைத்தால் இப்போதும் சிரிக்கமுடியும். ஆனால் அந்த வயதில் நானொரு யுத்தம் நடத்திக்கொண்டிருந்தேன் என்பதுமட்டும் உண்மை.

மாணவர்களின் அழகிய தெளிவான கையெழுத்துக்காகவே புள்ளிகள் அதிகம் கொடுக்கும் ஆசிரியர்கள் அப்போது இருந்திருந்தார்கள். இந்த விஷயத்தை மீறியும்கூட கையெழுத்தானது முக்கியமான அம்சம்தான். அதுவொரு மனநிலைப் பிரதிபலிப்பாகவும் மனோவியல் ரீதியில் கணிக்கப்பட்டிருந்தது. அக் காலத்து எழுத்துபகரணங்களின் படிமுறை வளர்ச்சிகளை இக் காலத்தில் நினைப்பதுகூட சுவாரஸ்யமாகவே இருக்கும். ஒருவரது கையெழுத்து அமைவதற்கும் இந்த எழுது சாதனங்களுக்கும் இடையே நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அனேகமாக பாலர் வகுப்பெனப்படும் அரிவரியிலிருந்து முதலாம் வகுப்பு முடிகிற வரையில் சிலேற்றும், கற்பென்சிலும்தான் எழுதும் உபகரணங்களாகயிருந்தன.

மேலும் படிக்க ...

சென்னை 29வது 'சமூக நீதி' திரைப்பட விழாவில்... - சுப்ரபாரதி மணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதி மணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
30 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தத் திரைப்பட விழாவில் துவக்க விழா படமாக ஃபர்ஸ்ட் ஃபிலிம் என்ற படம் திரையிடப்பட்டது . இந்த படம் சென்ற மாதம் திருப்பூர் டாப் நூலகத்தில் நடந்த பெண்கள் தினத்திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது..

29ஆவது சமூக நீதி திரைப்பட விழா சென்னையில் பெரியார் திடல் அன்னையின் மணியம்மையார் திடலில் அரங்கில் 15/4/26 அன்று ஆரம்பித்தது. ஐந்து நாட்கள் இந்த சமூக நீதி திரைப்பட விழா நடக்கின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் துவக்கி வைத்தார் .மறுபக்கம் அமைப்பின் செயல் பாடுகள் கடந்த முப்பது ஆண்டுகளாக மாற்று கலாச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிப்பிட்டார். இயக்குனர் ஆர்பி அமுதன் அவர்கள் வரவேற்று பேசினார். 'இந்த திரைப்பட விழாவில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகின்றன. அதுவும் கணிசமாக தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படம் மற்றும் குறும்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது. முதன் முயற்சியாக திரைப்படங்களை எடுத்து இருப்பவர்களின் படங்களும் நிறைய இடம்பெறுகின்றன அவர்களை முதன்மைப்படுத்தும் விதமாக இதில் திரைப்படங்கள் திரையிடல் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சமூக நீதி சார்ந்த பிரச்சினைகளும் மனித உரிமை கேள்விகளும் நிறைய எழுபப்பட்டு வரும் நிலையில் அதற்கான களங்கள் குறும்பட ஆவணப்படங்களில் இடம் பெற்று இருக்கின்றன என்பது ஆரோக்கியமாகப்படுகிறது .இந்த திரைப்பட விழாவில் சமூக நீதி கூறும் மனிதர்கள் அவர்கள் நடவடிக்கைகள் அவர்கள் சார்ந்த தருணங்கள் கொண்ட படங்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன' என்று குறிப்பிட்டார்.

நேற்று முதல் படமாக 'தி ஃபர்ஸ்ட் ஃபிலிம்' என்ற படம் இடம்பெற்றது.  இந்தப் படத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சூழலில் ஒரு பெண் ஒரு திரைப்படம் பார்ப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எவ்வளவு சிரமமாக இருந்தன, அது அவர்களின் விடுதலையின் ஒரு படியாக எப்படி இருந்தது என்பதை அந்த படம் விளக்கியது.  'தீண்டாத வசந்தம்' போன்ற படங்கள் இந்தியாவில் நடந்து வரும் ஆவண கொலைகள் பற்றிய மையமாக இருந்தது. 'மறையாத நிழல்' என்ற பாரு பெண்மணியின் படம் பாலியல் தொந்தரவு சார்ந்த ஒரு பெண்ணின் நிகழ்வு வாழ்க்கை முழுவதும் தொடர்வது பற்றி இருந்தது.  மற்றும் விளிம்பு நிலை சார்ந்த மக்கள் பற்றிய படங்களும் மொழி சிறுபான்மையினர் பற்றிய படங்களும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன.

மேலும் படிக்க ...

பிராந்திய மொழியின் உக்கிர அழகியல்: சோலைக்கிளியின் ‘எட்டாவது நரகம்’ - ஒரு அதிநவீன வாசிப்பு! (2) - ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -
ஆய்வு
30 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் 2: உடற்கூற்று அரசியலும் அண்டவியல் சிதைவும்  (Anatomy of Violence & Cosmic Rupture)

உடற்கூற்று அரசியலும் அண்டவியல் சிதைவும் (Anatomy of Violence & Cosmic Rupture) என்ற பகுதிக்குள் நுழைகிறோம். இதில் கவிஞர் சோலைக்கிளியின் 'எனது தாய்ப்பால்', 'நவீன இலங்காபுரி', 'இறகு உதிர்ந்த கிராமம்' ஆகிய மூன்று முக்கிய கவிதைகளை முன்வைத்து, வன்முறை என்பது மனித உடலைத் தாண்டி, பிரபஞ்சக் கூறுகளையும் இயற்கையையும் எவ்வாறு சிதைக்கிறது என்பதை 'உடலரசியல்' (Biopolitics) மற்றும் 'அண்டவியல் சிதைவுக் கோட்பாடு' (Cosmic Rupture) ஊடாக விரிவாக ஆராய்வோம்.

1. தாய்ப்பால் ஈயக்குழம்பாதல்: வன்முறையின் உடற்கூற்று அரசியல் (Biopolitics and Anatomy of Violence)

போரின் குரூரம் என்பது ஒரு சமூகத்தின் ஆக அடிப்படையான, உயிரியல் ரீதியான மென்மைகளை உக்கிரமான சடப்பொருட்களாக மாற்றியமைக்கிறது. பிரெஞ்சு தத்துவஞானி மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault) முன்வைத்த 'உடலரசியல்' (Biopolitics) கோட்பாட்டின்படி, அதிகாரமும் வன்முறையும் மனித உடலின் ஆக உன்னதமான திரவங்களையும், உயிர்ச் செயல்பாடுகளையும் தன்வயப்படுத்திச் சிதைக்கின்றன. சோலைக்கிளியின் ‘எனது தாய்ப்பால்’ கவிதை, இந்த உடற்கூற்று அரசியலின் உச்சகட்டப் வெளிப்பாடாகும்:

"எனது தாய்ப்பால் ஒரு ஈயக் குழம்பாக இருந்திருக்க வேண்டும்.

எப்படி முடியும் மிகவும் பசுமையாக இன்னொரு முலையும் இல்லையா என்பதைப்போல அந்தப் பாலில் குளிர்மை நிறைந்திருந்தால், இன்று சுற்றி வரவும் அக்கினிக்குள்ளே வாழ்ந்து தொலைக்க?"

தாய்மை, முலைப்பால், அதன் குளிர்மை என்பன மானுடத்தின் ஆகப் பெரும் கருணையின், பாதுகாப்பின் குறியீடுகள். ஆனால், தன்னைச் சுற்றிலும் எரியும் போர்க்காலத் தீயினூடு வாழும் கவிஞன், தனக்குக் கிடைத்த உக்கிரமான தற்காப்புச் சக்தியின் மூலத்தைத் தன் தாயின் உடலிலிருந்தே தேடுகிறான். பாசமும் குளிர்மையுமான சாதாரணப் பெண்ணின் பாலில் வளர்ந்திருந்தால், இந்த வன்முறை யுகத்தின் குண்டுவெடிப்புகளையும், நெருப்புகளையும் தின்று செரிக்கும் ஆற்றல் தனக்குக் கிடைத்திருக்காது என அவன் வாதிடுகிறான்.

மேலும் படிக்க ...

அமெரிக்க-ஈரான் உடன்படிக்கை: சில யதார்த்தங்களும் சில சங்கடங்களும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
30 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

ஈரானிய போரும் ஹோமூஸ் நீரிணையும் ஓர் இடியாப்ப சிக்கலாய் நீளுவதாய் உள்ளன. பரஸ்பர தாக்குதல்களும், பரஸ்பர மறுப்புகளும் இப்போரின் உறுத்தும் முக்கிய அம்சங்களாகின்றன. கண்ணுக்கு புலப்படாத, அதி நவீன விமானம் என்று பெயர் பெற்ற F - 35 விமானமும், மூன்று நாசகாரி கப்பல்களும் தாக்கப்பட்டு விட்டதாய் ஈரான் கூறினாலும் அமெரிக்கா அதனை உடனடியாக மறுப்பது வழமையாகின்றது. உண்மையில், அப்படி எந்த ஒரு கப்பலும் தாக்கப்படவில்லை. நாங்களாகவேதான் நீரிணையினையிலிருந்து அவற்றை அப்புறப்படுத்தி விட்டோம் என்று அமெரிக்கா எடுத்துரைப்பதையும் உலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது. போதாதற்கு, இப்போரின் நிலவரங்கள் இப்போது, நாளுக்கு நாள், மணிக்கு மணி, செக்கனுக்கு செக்கன் மாறி கொண்டே இருப்பது இன்னும் ஒரு விசேட அம்சமாகிறது.

15,000 துருப்பினரையும் 100 விமானங்களையும் களமிறக்கி தனது Project Freedom எனும் திட்டத்தை முன்னெடுக்க போவதாக கூறி வந்த அமெரிக்கா, ஏதோ காரணத்தால் இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுள்ளதாக அறிவித்தது. இதே நாளில்தான் (மே-06) ஈரானின் வெளிநாட்டமைச்சர் சீனத்துக்கு தனது அதிரடி விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இப்படி திடீரென அவர் சீனத்திற்கு விஜயம் செய்வது என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. ட்ரம்ப், சீனாவுக்கு விஜயம் செய்ய இருக்கும் ஒரு கிழமைக்கு முன்னதாகத்தான் ஈரானிய வெளிநாட்டமைச்சர் இப்படி திடீரென தனது விஜயத்தை மேற்கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, சங்கடப்பட வைப்பதாகவே இருந்தது. முக்கியமாக ட்ரம்பை. ஏனெனில், இப்படி Project Freedom என்ற பெயரில் ஓர் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து, பலவந்தமாக ஹோமூஸ் நீரிணையை திறப்பதில் தான் ஈடுபட்டால், சீனம் நேரடியாக போர்க்களத்தில் இறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க சென்றுள்ளாரோ மனிதர் என்பது கேள்வியானது. ட்ரம்ப் இத்தகைய கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டதாலா Project Freedom ஐ வாபஸ் பெற்றார் என்பதும் கேள்வியானது. இருக்கலாம். ஏனெனில், ஈரானில் உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத எண்ணையை சீனாவே பெறுகின்றது. ஆகவே ஹோமூஸ் நீரிணையை மூடுவதும், ஈரானை தாக்குவதும் ஒருவகையில் சீனத்துக்கு எதிராக தொடுத்த போராகத்தான் இறுதி கணிப்பில் வந்து சேர்கிறது.

தனது 12 விமானம்தாங்கி கப்பல்களைக் கொண்டு ஹோமூஸ் கடல்பாதையை மூடிவிடலாம் என்றாலும் அத்தகைய அமெரிக்காவின் திட்டம் இப்போது கைகூடுவதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இதுவரை எடுத்துள்ள அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் ஈரானின் விடயத்தில் தொய்வடைந்து போய் விட்டதாகவே தெரிகின்றது.

மேலும் படிக்க ...

அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் !

விவரங்கள்
- கவிஞர் எம். சுப்பையா -
கவிதை
30 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கவிஞர்  'நாங்குநேரி திரு எம். சுப்பையா' -

கவிஞர் அறிமுகம்: அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர்  'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் !  - நாங்குநேரி வாசஸ்ரீ் -
                      
- கவிஞர் எம். சுப்பையா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மூத்த தமிழறிஞர். அவர் நாங்குநேரி அருகேயுள்ள புதுக்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி 1993ல் ஓய்வு பெற்றவர். ‘இலக்கிய இன்பம்’ என்ற அமைப்பின் மூலம் அக்காலத்திய பல பட்டிமன்றங்களிலும், பொது மேடைகளிலும் தமது பேச்சாற்றலால் புகழ் பெற்றவர். பல தலைவர்களின் மேடைகளில் பேசி அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தற்போது தொண்ணூறு வயதினைத் தாண்டிய பின்னும், தம் இல்லத்தின் வெளிச்சுவற்றில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுதி இளம் சிறார்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டி வருபவர். அவர் சமூகம், தத்துவம், காதல், புரட்சி, பக்தி சார்ந்த பல கவிதைகளைப் படைத்து அவற்றைப் பாடலாகவும் பாடி வந்துள்ளார். இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையிலுள்ள அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு சில கவிதைகளை இங்கே காணலாம். - 


தத்துவப் பாடல்!

மனிதா! மனிதா! சிந்தித்து நடடா மனிதா
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்
முன்வரிதனை மனதில் வை
பின்வரிதனை செயலில் காட்டு
நேற்றைய வாழ்வு நாளைய பாடம்
புரிந்து நடடா மனிதா
பட்டறிவு வாழ்க்கைப் பாடமன்றோ மனிதா
பார்போற்றும் மாமனிதர் கற்றுத்தந்தார்
இதை மறவாதே மனிதா
எந்நாளும் இனிய நாளே மனிதா. 

மேலும் படிக்க ...

சிந்தனைக் களம்: ‘செயற்கை நுண்ணறிவு நோக்கில் பண்ணிசை மரபு’

விவரங்கள்
- தகவல்: முனைவர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
28 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting |Meeting ID: 861 6957 8632 | Passcode: 687942

மேலும் படிக்க ...

பின்காலனியப் பார்வையில் அழகு சுப்பிரமணியம்! (பகுதி 2) - மேமன்கவி -

விவரங்கள்
- மேமன்கவி -
இலக்கியம்
27 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

6

இராஜ அரியரத்தினத்தின் அழகுவின் கதையை தமிழுக்கு கொண்டுவந்த (“சேதுப்பாட்டி”) முயற்சிக்குப் பிறகு, அழகுவின் ஆங்கிலக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அடுத்த முக்கிய முயற்சியாக 1973ஆம் ஆண்டு மல்லிகை மார்ச் மாத இதழில் (அழகுவின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட இதழ்) அழகுவின் The Scholar என்ற ஆங்கிலக் கதை “பட்டதாரி மாணவன்” என்ற தலைப்பில் ராஜஸ்ரீகாந்தனால் மொழிபெயர்க்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் ராஜஸ்ரீகாந்தன் அவர்களின் கையில் கிடைத்த அழகுவின் நிறைவேறாத குறுநாவலான Mr. Moon மொழிபெயர்ப்பு 1975–1976 மல்லிகை இதழ்களில் வெளிவந்தது. ஆனால் Mr. Moon இன் ஆங்கிலப் பிரதியை நமக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. இதுவரை அது ஆங்கிலத்திலோ தமிழிலோ நூலுருவம் பெறவில்லை.

1999ஆம் ஆண்டு ஜூன் மாதம், ராஜஸ்ரீகாந்தன் அழகுவின் 12 சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து நீதிபதியின் மகன் என்ற பெயரில் வெளியிட்டார். அதில் மொழிபெயர்ப்புத் துறை பற்றிய ராஜஸ்ரீகாந்தனின் விரிவான குறிப்பும், மேமன்கவியின் அட்டைக் குறிப்பும் இடம்பெற்றன. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தும் வீரகேசரியில் பணிபுரிந்தும் வந்த சூரியகுமாரி அந்த மொழிபெயர்ப்பு நூலைப் பற்றி ஒரு விமர்சனத்தையும் எழுதியிருந்தார்.

அத்தொகுப்பில் இடம்பெற்ற அழகுவின் “கணிதவியலாளன்” (The Mathematician) என்ற தமிழ் மொழிபெயர்ப்புக் கதை பல இலக்கிய இதழ்களில் மறுபிரசுரமாகியுள்ளது.இக்கட்டுரை ஆசிரியரின் தயாரிப்பில், 1991ஆம் ஆண்டு தமிழக திருப்பூரில் இருந்து சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கனவு 17வது இதழில், ராஜஸ்ரீகாந்தன் மொழிபெயர்த்த “கணிதவியலாளன்” முதன்மைக் கதையாக இடம் பெற்றது.இவ்வாறு, ஒரு தொகை அழகுவின் கதைகள் ராஜஸ்ரீகாந்தனின் மொழிபெயர்ப்பு முயற்சியால் நமக்குக் கிடைத்தன.

மேலும் படிக்க ...

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 2) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
27 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு!

1. நல்லூர்க் காலம் -  நகர அமைப்பு மற்றும்  கட்டடக்கலை

நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக்  குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது.  ஒல்லாந்தர் கால நல்லூர்  ஒழுங்கற்ற வடிவம்  கொண்டதாக இருந்ததையே  அக்கால நிலப்படங்கள்  காட்டுகின்றன.  தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." ('யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) , பக்கம் 69)

நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற  முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால் நாம் இன்று வரை வாஸ்துசாஸ்த்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளைத்தான் எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின் பற்றினார்கள். இவ்விதிகளின்படி தலைநகர்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு - மேற்காக, வடக்கு - தெற்காக இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில் ) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச்சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களை சந்திக்குமிடத்துக்கண்மையில் ஒவ்வொரு திக்கிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் இவ்விதிகள் குறிப்பிடுகின்றன.  இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து , தென்னிந்திய , வட இந்திய நகரங்கள் , ஆலயங்களையெல்லாம் ஆராய்ந்திருக்கும் Architecture of the World: India  என்னும் நூல் இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று. (Andreas Wolwahsen , Henri Stierlin (Editor)  இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.

மேலும் படிக்க ...

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 1) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
26 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ சென்ற ஞாயிறு 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]

1.

வரலாற்று முக்கியத்துவம்

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் அவரது 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' என்னும் இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத்  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று  வரலாற்றுத் தெளிவின்மை.  இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான,  வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு  இல்லை என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத் தமிழரின்  வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள்.  அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.

மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர்  காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன்  அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன்.  எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

மேலும் படிக்க ...

பயணத்தொடர் : கரிபியன் கடற்பயணம் (1) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
26 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற்  பயணம்.  அடிமனத்தில் முதல் பயணமாதலால்  எப்படி பயணம் இருக்கும்? 
போரடிக்குமா? 

புத்தகங்கள் மற்றும் கம்பியூட்டர் இருந்தால் எனது பொழுது போகும் ஆனால் சியாமளாவின நிலைவேறு.  கடல் குருஸ் என்பது இதுவரை வயதானவர்களுக்கு உள்ள பயணம் என்ற நினைவே மனதில் இருந்தது. பல நினைவுகளை சுமந்தபடி பொதிகளுடன் கப்பலில் ஏறினோம். ஆரம்பத்தில் கப்பலில் ஏறுவது, விமானத்தில் ஏறுவது போல் பாஸ்போர்ட், விசா மற்றும் பல சோதனைகள் இருந்தன. 

கப்பலில் எந்த குடிப்பானங்களும் கொண்டு செல்ல முடியாது என்று விதி இருப்பது நான் அறிந்ததே. ஆனாலும், சான் பிரான்சிஸ்கோ ஹோட்டலில் தங்கியபோது வருபவர்களுக்கு இரண்டு இலவசமாக குடிப்பானம் உள்ளது – அதை “வெல்கம் ரிங்” என்று சொல்லலாம். நான் அதைக் குடிக்கவில்லை, பிறகு மறந்தே போய்விட்டேன். 

இரண்டாவது நாள் அதை அங்குள்ள வரவேற்பில் உள்ள இளம் பெண்ணிடம் வெல்கம் ரிங்கை  நினைவுபடுத்திபோது, அவள் சிரித்துவிட்டு  ‘அது காலாவதியாகிவிட்டது’  என்று சொல்லிவிட்டு, பின்பு உள்ளே போய் ஒரு புதிய வைன் கொண்டு தனது அன்பளிப்பாக வழங்கினாள். இளம் பெண்கள் நம்மை சட்டை செய்யும் வயது கடந்த போதிலும், ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்டேன். படிப்பதாக கூறினதும், அவளது கையில் பத்து அமெரிக்க டாலர்கள் வைத்தேன். அன்று இரவு ஒரு கிளாஸ் குடித்து, முக்கால் போத்தல் மீதி இருந்தது.

மேலும் படிக்க ...

ஆய்வு: பிராந்திய மொழியின் உக்கிர அழகியல்: சோலைக்கிளியின் ‘எட்டாவது நரகம்’ (1) - ஒரு அதிநவீன வாசிப்பு! - ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -
ஆய்வு
25 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயக் கட்டமைப்பு (Proposed Chapter Outline)

அறிமுகம்: எண்பதுகளின் ஈழத்துக்கவிதைச் சூழலும் சோலைக்கிளியின் வரவும்

    சமூக யதார்த்தவாதக் கவிதைகளுக்கு மத்தியில் சோலைக்கிளியின் 'உணர்வுநிலை/அனுபவநிலை' மொழியின் தனித்துவம்.

    'மன்னித்தல் சாத்தியமற்ற' எட்டாவது நரகமாக மாறும் பூகோளம் - தலைப்பின் தத்துவார்த்தப் பின்னணி (இஸ்லாமிய ஏழடுக்கு நரகக் குறியீட்டின் நீட்சி).

அத்தியாயம் 1: கருப்பையின் வன்முறையும் அதிர்ச்சிப் படிமங்களும் (Trauma and Dystopian Imagery)

    ஆய்வுக்குரிய கவிதைகள்: 'தொப்பி சப்பாத்துச் சிசு', 'வால் மனிதர்கள்', 'தொட்டில்'

    பகுப்பாய்வு: போர்க்காலச் சூழல் மனிதனின் எதிர்காலச் சந்ததியை எப்படி வன்முறை வடிவங்களாக மாற்றுகிறது? 'விரல் சூப்ப நேரமில்லாத', 'கருப்பையிலேயே கத்தியோடு பிறக்கும்' குழந்தைகள் பற்றிய சர்ரியலிசப் படிமங்கள் எவ்வாறு 'டிஸ்டோபியன்' (Dystopian) எதிர்காலத்தை தீர்க்கதரிசனமாக உரைக்கின்றன என்ற ஆய்வு.

அத்தியாயம 2: உடற்கூற்று அரசியலும் அண்டவியல் சிதைவும் (Anatomy of Violence & Cosmic Rupture)

    ஆய்வுக்குரிய கவிதைகள்: 'எனது தாய்ப்பால்', 'நவீன இலங்காபுரி', 'இறகு உதிர்ந்த கிராமம்'

    பகுப்பாய்வு: தாய்ப்பால் ஈயக்குழம்பாக மாறுதல், சூரியனின் மையப்புள்ளியில் வாய் வைத்தல் போன்ற உக்கிரமான படிமங்கள் வன்முறையின் தீவிரத்தை உடலரசியலாக (Body Politics) மாற்றும் விதம். போர் எவ்வாறு நிலவு, விண்மீன், தென்னைமரம், வற்றாளைக்கொடி (நிலக்கண்ணி) என இயற்கையையே அண்டவியல் ரீதியாகச் சிதைக்கிறது என்ற பகுப்பாய்வு.

மேலும் படிக்க ...

சிறுகதை: தப்புத்தாளங்கள்! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து) -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து) -
சிறுகதை
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



வானதி பிறந்தது வசதியான குடும்பத்தில். ஆனால் அவளின் வாழ்க்கையின் உண்மையான வடிவம் கனடாவின் பனிக்காற்றில் தான் செதுக்கப்பட்டது. ஒழுங்கும் ஒத்திகையும் கலந்து கிடந்த வளர்ப்பு, அதன் நடுவே, கடின உழைப்பை தன் நெஞ்சின் துடிப்பாக மாற்றிக் கொண்டு, அவள் வைத்தியராக உயர்ந்தாள்.

சிறுவர் வைத்திய நிபுணராக அவளின் நாட்கள், குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் கலந்த ஓர் இனிய இசைபோல் பாய்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு குழந்தையின் கண்ணீரும் அவளுக்கு ஒரு பொறுப்பாகவும், ஒவ்வொரு சிரிப்பும் ஒரு வெற்றியாகவும் மாறின. மருத்துவமனையின் வெள்ளைச் சுவர்களுக்குள் அவள் உருவாக்கிய உலகம்—அன்பும் அர்ப்பணிப்பும் கலந்த ஒரு சிறிய பிரபஞ்சம்.

உலகின் பல நகரங்கள் அவளின் காலடிச்சுவடுகளை நினைவில் வைத்திருந்தன. மாநாடுகள், பயிற்சிகள், ஆராய்ச்சிகள் என அவளின் வாழ்க்கை நின்று விடாத ஒரு சக்கரம் போல இடையறாது சுழன்றது. அந்த சுழற்சியின் மையத்தில் இருந்தது அவளின் உறுதி; “நிற்காதே” என்று அவளையே அவள் தொடர்ந்து அழைக்கும் ஓர் உள் குரல்.

அவளின் பெற்றோர், மண்ணின் மணத்தை இழக்காதவர்கள். வெளிநாட்டின் வசதிகளுக்குள் வாழ்ந்தாலும், சொந்த கலாச்சாரத்தின் நெஞ்சுரத்தை தளர விடாதவர்கள். அந்த மரபின் கயிறு உறுதியாக கட்டப்பட்டிருந்தது—அதன் ஒரு முடிச்சில் தான் மாதவன் நுழைந்தான்.

மாதவன்—சொந்த நாட்டில் சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றியவன். அவன் பார்வை அமைதியாக இருந்தது; ஆனால் அந்த அமைதியின் அடியில் ஓர் ஆழம் இருந்தது. மெதுவாக பேசும் அவன் சொற்கள், சிந்தித்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருந்தன. அவன் உள்ளத்தின் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது இசையின் ஒரு  நதி.

மேலும் படிக்க ...

பின்காலனியப் பார்வையில் அழகு சுப்பிரமணியம்! (பகுதி 1) - மேமன்கவி -

விவரங்கள்
) - மேமன்கவி -
இலக்கியம்
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

             - எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் -

1

ஈழத்திலிருந்து ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்ற இலங்கைத் தமிழர். இவர் இலங்கைக் காரைநகரில் 1915 பிப்ரவரி 15 பிறந்தவர். இவரது தந்தையார் இலங்கையில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரும் அவரது தந்தையாரும் இலக்கிய ஆர்வமிக்கவர்கள். அதனால் அவரது மகன் அழகு சுப்பிரமணியத்தை வெளிநாட்டில் சட்டத் துறையில் பயில வைத்தார். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரது குடும்பத்தினரின் இலக்கியத்துறை ஆர்வத்தின் காரணமாக அழகு சுப்பிரமணியமும் ஆங்கில இலக்கியத்துறையில் ஈடுபட்டு உலகப் புகழ் பெற வழிவகுத்தது.

இலண்டனில் பயின்றுகொண்டிருந்த காலத்திலே அங்கு உலக கலை இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்புக் கொண்டிருந்தார். தாகூர், இந்தியாவின் முற்போக்கு எழுத்தாளர் முல்ராஜ் ஆனந்த் போன்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களுடனும் அறிஞர்களுடனும் தொடர்பினைப் பேணியவர். அதன் காரணமாக இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராக அழகு இயங்கினார். இத்தகையவர்களின் தொடர்பின் காரணமாக முற்போக்கு இயக்கம், இடதுசாரி இயக்கம், காலனிய எதிர்ப்பு இயக்கம் போன்றவைகளில் ஈடுபட்டவர். “Indian Writing” என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் இயங்கினார்.

அழகுவின் கதைகள் உலக, இலண்டன் மற்றும் இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பிடித்துள்ளன. உதாரணமாக இந்தியச் சஞ்சிகைகளில் ஒன்றான The Illustrated Weekly of India போன்றச் சஞ்சிகைகளில் கதைகள் எழுதி இலக்கிய விமர்சகர்களிடையும் வாசகர்களிடையும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றேம்: மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய – பத்திரிகைத்துறையில் என்கதை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர். இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது. அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.

இதுபோன்ற பல செய்திகளை வீரகேசரி – தினக்குரல் மற்றும் சமகாலம் முதலான ஏடுகளில் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றிய வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கும் - பத்திரிகைத்துறையில் என் கதை - என்ற நூலிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.

தனபாலசிங்கம், ஏற்கனவே, நோக்கு ( தினக்குரல் ஆசிரிய தலையங்கங்கள்) ஊருக்கு நல்லது சொல்வேன், தமிழ் தேசியவாத அரசியல், ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர். தோழர் சண்முகதாசனின் கட்டுரைகள், மற்றும் சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் ஆகியற்றையும் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து கலவரங்கள் தொடங்கிய காலப்பகுதியில் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். வீரகேசரியில் தனது தொழில்சார்ந்த வாழ்க்கையை முதலில் ஒப்புநோக்காளராக ஆரம்பித்தவர். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தென்னிலங்கையில் இனக்கலவரம் நடந்தது. அப்போது, பிரதமராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் “ என்று சூளுரைத்தார். இவ்வாறு நாட்டில் மிகுந்த நெருக்கடி தொடங்கியவேளையிவ் தனபாலசிங்கத்தின் கொழும்பு வாழ்க்கை ஆரம்பமாகிறது. நாமிருவரும் அவ்வேளையில் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக இணைந்தோம். அன்று முதல் இற்றை வரையில் இவருடனான எனது நட்புறவு நீடிக்கிறது.

படிப்படியாக தன்னை இவர் எவ்வாறு வளர்த்துக்கொண்டார் என்பதையும், இந்நூலில் நனவிடை தோய்ந்து பதிவுசெய்திருக்கிறார். இந்நூலை இலங்கையின் மூத்த இடதுசாரித்தோழரும் பத்திரிகையாளருமான (அமரர் பாதிநேசன் வீ. சின்னத்தம்பி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். பேராசிரியர் எம். ஏ. நுஃமான் முகவுரையும், மூத்த பத்திரிகையாளர் டீ. பி. எஸ். ஜெயராஜ், பேராசிரியர் சந்திரிக்கா சுப்பிரமணியம், தெட்சணா மூர்த்தி மதுசூதனன் ஆகியோர் தங்கள் கருத்துரைகளையும் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க ...

ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள்! -முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா, துணைத்தலைவர்/இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -

விவரங்கள்
-முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா -
ஆய்வு
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* கட்டுரையாளர்: முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா, துணைத்தலைவர்/இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை 


முன்னுரை

தமிழை வளம் மிக்க மொழியாக உலகிற்கு உரைக்க அடித்தளம் இட்டவை சங்க இலக்கியங்களாகும். உலகமொழிகளில் நம் மொழியை இனங்காட்டுதற்கும் நம் பழந்தமிழரின் காதல், , வீரம், கொடை, ஈகை முதலான நற்பண்புகளை எடுத்தோதுவதற்கும் வழிகோலுவன சங்க இலக்கியங்கள். அத்தகு நெறியில் சங்க இலக்கியங்களில் உள்ள கலைச்சொற்களை இனம் கண்டால் வருகின்ற இளந்தலைமுறையினர் அதைப் பயன்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப உலகிற்கான முன்னுதாரணமாகவும் அவை அமையும். அந்த வகையில் ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள் குறித்து அறிந்து கொள்வதும் ஆய்வு செய்வதும் இங்கு தேவையாகிறது.

ஆட்சிச் சொல்லகராதி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள ஆட்சிச் சொல்லகராதி மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது. 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சங்கத் தமிழ் கலைச்சொற்கள்

ஆட்சிச் சொல்லகராதி தொகுதி-1இல் ஆநிரை கவர்வோர் (பக்.1), கரந்துறைப்பாட்டு(பக்.20), காழகில் (பக்.51), வறியார்க்கீவோர், அறச்சாலை, ,இரவலர் இல்லம், (பக்.51), மலைப்போர்ப்படை, நறுமணப்புல்வகை, அடுமனை உணவச்சம் (பக்.53), மயங்குபொருள், இடைஞர்(பக்.54), வட்டரங்கு சார், பொங்கு உவகை(பக்.57), கடுந்துயர்(பக்.61), நாடு கவர்தல்(பக்.63), நறுநெய்யாட்டு, கரந்துறைதல் (பக்.64), முதுமொழி, மீயுயர்(பக்.71), வளை நரம்பிழை, நனி விருப்பன், கடுஞ்செலவு, களரி(பக்.79), வழக்குரைத்தல், கடுஞ்சொல்லாடல், பாழ்நிலம், அணங்கு(பக்.80), போர்க்கலக் கம்மியர், படைக்கலக் கொட்டில், உள்ளிட்ட ஏராளமான சொற்கள் சங்க கால மக்களின் பயன்பாட்டில் இருந்த வேர்ச்சொற்கள் பலவும் கலைச்சொற்களாக விளங்கியமை என்று தெளியலாம். ஏனெனில் சங்க இலக்கியங்களில் இத்தகு சொற்களை இனம் காணலாம்.

மேலும் படிக்க ...

ஆதி டிவி (Aathi TV): (நேர்காணல்) அன்றும் இன்றும் வரலாற்றுப் பேழை - யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை , மே 24, 2026 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் (டொரோண்டோ, கனடா)  நடைபெறவுள்ள கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ' யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' நூல் வெளியீடு பற்றி , ஆதி தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணல் இது. இதில் நானும், நண்பர் எழுத்தாளர் கனடா மூர்த்தியும் நேரில் கலந்து கொண்டோம். மெய்நிகர் வழியாக நூலாசிரியர் இ.மயூரநாதன் கலந்து கொண்டார். 

தற்போது இந்நேர்காணல் ஆதி தொலைக்காட்சியின் யு டியூப் சானலில் பதிவேற்றப்பட்டுள்ளது. காணொளியைப் பாருங்கள். நூல் வெளியீட்டுக்கு வந்து ஆதரவு வழங்குங்கள்.  கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

காணொளிக்கான இணைப்பு - https://www.youtube.com/watch?v=JMogjIFOmZE

ஆதி டிவி  (Aathi TV):   (நேர்காணல்) அன்றும் இன்றும் வரலாற்றுப் பேழை - யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு!

தொகுப்பாளர்: ஜனந்தினி ஜெயனபவன்
சிறப்பு விருந்தினர்: இ. மயூரநாதன் | மு. நாராயண மூர்த்தி | வ.ந. கிரிதரன்
தொழில்நுட்பம்:  பிரதாப் ,  ஹரேன் | வழிநடத்தல்:  விஜிதா விமலன் | தயாரிப்பு : ஆதி டிவி (Aathi TV)

ஊடகவியலாளர் டேவிட் ஜெயராஜ் (டி.பி.எஸ்.ஜெயராஜ்) மறைவு பத்திரிகைத் துறைக்கு பெரிய இழப்பு! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நிகழ்வுகள்
21 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ZOOM MEETING: https://us06web.zoom.us/j/82713649366#success


இலங்கைத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளராக டேவிட் ஜெயராஜ் விளங்கினார். அவர் ஒரு சாதாரண செய்தியாளர் மட்டுமல்ல; கூர்மையான சமூகக் கவனிப்பாளராகவும் திகழ்ந்தார். அவரது எழுத்தின் அடையாளம் நேர்மையே. எந்த அலங்காரமோ மிகைப்போ இல்லாமல், உண்மையை உண்மையாகவே பதிவு செய்தார். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவரது செய்தி வெளியீட்டின் நேர்மையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.

அவரது வாசகர்கள் தமிழர் சமூகத்தைத் தாண்டி பரவியிருந்தனர். எனது பல சிங்கள நண்பர்கள்கூட செய்தித்தாளை எடுத்தவுடன் முதலில் அவர் எழுதிய கட்டுரைகளையே வாசிப்பார்கள். இவ்வாறு சமூகத்தின் பல தரப்பினரிடமும் நம்பிக்கையைப் பெற்றிருப்பது ஒரு பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அரிதான சாதனையாகும்.

நான் இளமையிலிருந்தே அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். ஐலன்ட் பத்திரிகையில் அவரது கட்டுரைகளை முதன்முதலாக வாசித்தபோது, அவை எனக்குள் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

நான் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்தபின், அவர் கனடாவின் டொராண்டோவில் குடியேறினார். இருந்தபோதிலும், இலங்கைத் தமிழர் அரசியலைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார். 1987 ஆம் ஆண்டு நான் ஆஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகையைத் தொடங்கியபோது, அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தேன். அவரது பல கட்டுரைகளை தமிழில் வெளியிடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

மேலும் படிக்க ...

நினைவூட்டுகின்றோம்: கனடாவில் கட்டடக் கலைஞர் இ,மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: ஓராயம் -
நிகழ்வுகள்
20 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் : முள்ளிவாய்க்கால்!

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி  வழி வநகி

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=lY4GiyAL1rs

முள்ளிவாய்க்கால்  ஒரு நினைவுச்சின்னம்.
முள்ளிவாய்க்கால்  ஒரு நினைவுச்சின்னம்.

மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு 
நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம் அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

மேலும் படிக்க ...

அக்கினிக் குஞ்சு சிறகு விரிக்கும்! -பங்கிரையான்-

விவரங்கள்
-பங்கிரையான்-
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பாயும் நினைவுகளாய்
மறைந்து கிடக்கின்றன.

வலி சுமந்த சமூகம்,
விடியலைத் தேடி ஓடும் மனிதரில்
விழுந்த காயங்கள் ஆயிரம்—
ஒவ்வொரு அடியிலும்
மௌனத்தின் சிதறல்கள்.,
மனிதன் தேடும் விடியல்
தூரத்தில் மங்கலாய் தெரிகிறது.

மேலும் படிக்க ...

புதிய வண்ணத்துப்பூச்சி ! -துவாரகன் -

விவரங்கள்
-துவாரகன் -
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


அது புதிய வண்ணத்துப்பூச்சி 
அதன் வரவு மகிழ்ச்சியானது

தேன் குடிப்பதற்குப் பதிலாக 
எங்களோடு சேர்ந்து 
கஞ்சி குடிக்கவும் 
கூழ் குடிக்கவும் 
பண்டிகைகளில் பலகாரம் சாப்பிடவும் கூடுமென 
ஆரூடம் கணித்தனர்.

மிக அரிதான
செவ்வாச்சிவகை என்றும் கூறினர்.
அதன் வருகை கண்டு 
அம்மம்மா மிக மகிழ்ந்தார். 
சாமியறையில் நேரமெடுத்து 
வேண்டுதல்கள் செய்தார். 

மேலும் படிக்க ...

வானுக்கும் மண்ணுக்கும் இடையிலான சைகை (உலகளாவிய மெய்பொருள் கவிதை) - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 [ராஃபெல்லின் புகழ்பெற்ற ஓவியம் 'The School of Athens'. பிளேட்டோ விரலை மேலேயும், அரிஸ்டோட்டில் உள்ளங்கையைக் கீழேயும் காட்டியபடி இருக்கும் சித்திரம் அது. ராஃபெல்லின் அந்த உன்னதமான ஓவியம், வெறும் வண்ணங்களின் தொகுப்பல்ல; அது மனிதச் சிந்தனையின் இரு துருவங்களுக்கிடையிலான நித்திய உரையாடல். அந்த ஓவிய உரையாடல் கவிதையாக உயிர்ப்பாகியுள்ளது.]


I. முற்றுப்பெறாத நாகரிகங்களின் அருங்காட்சியகம்

பொருட்களைப் பாதுகாக்கும் காலம்
மலையேறிப் போகும்;
அருங்காட்சியகங்கள் இனி
மனிதப் பதற்றங்களைப் பாதுகாக்கும்.

காலநிலை கட்டுப்படுத்தப்பட்ட
கண்ணாடிக் கூண்டுக்குள்:
உடைந்த அகதி ஒருவனின் திசைகாட்டி,
குழந்தையின்
கீறல் விழுந்த கணினித் திரை,
எரிக்கப்பட்ட நூலகங்களின் சாம்பல்,
ஒரு தத்துவவாதியின்
பெயரிடப்படாத சந்தேகம்.

அதன் மையத்தில்:
அந்த இரண்டு சைகைகள்.
ஒன்று:
அரூப நெருப்பை நோக்கி எழும்பும் விரல்.
மற்றொன்று:
காயப்பட்ட பருப்பொருளை
நோக்கி இறங்கும் உள்ளங்கை.

பார்வையாளர்கள் மௌனமாக நிற்பார்கள்—
மனித இனத்தின்
புதைபடிவமான நரம்பு மண்டலத்தை
வெறித்துப் பார்ப்பது போல.

மேலும் படிக்க ...

பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்த தகவலினை முகநூல்  வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். அவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

அவரை நான் அதிகம் சந்தித்ததில்லை. ஓரிரு தடவைகள் நேரில் சந்தித்துள்ளேன். ஆனால் அவர் என்னுடன் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தார். கடந்த 2019லிருந்து ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று மெசஞ்சர் மூலம்   வாழ்த்துச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தார். தான் எழுதும் ஆங்கிலக்கட்டுரைகள், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கான இணைய இணைப்புகளை மெசஞ்சர்வாயிலாக அனுப்புவார். அவ்விதம் அவர் அனுப்பிய இறுதித்தகவல் மார்ச் 24 வந்திருந்தது. பாடகர் டி.எம்.எஸ். செளந்தரராஜன் பற்றிய பதிவு. ஒரு தடவை பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய அவரது கட்டுரைக்கு நான் எழுதியபோது அதற்கு அவரது வலைப்பதிவில் எதிர்வினை எழுதியதுடன் , மெசஞ்சர் மூலம் விரிவான பதிலையும் அனுப்பியிருந்தார்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. சண்டிலிப்பாயின் கலைச்சங்கமம் - 2026! - குரு அரவிந்தன் -
  2. முனைவர் சு.சோமசுந்தரியின் ‘சில்லாட்டை’ சிறுகதை நூல் ஒரு பருந்துப்பார்வை! - முல்லைஅமுதன், இலண்டன்-
  3. நூலகம் தளத்தின் ஆரம்பக்கால வரலாறும் , அமரர் ஈழநாதனின் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -
  4. ஒரு தகவலுக்காக: தொன்மை மிகு நல்லை மூதூர்! - வ.ந.கிரிதரன் -
  5. அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் இலங்கை நூல்கள்! - தகவல்: நடேசன் & கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  6. கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! - வ.ந.கிரிதரன் -
  7. தள்ளுவண்டிலைத் தவிர்த்தல்! - ஆங்கிலத்தில்: சிவகாமி விஜேந்திரா | தமிழில் - ஶ்ரீரஞ்சனி -
  8. திக்குவல்லை கமால் சிறுகதைகள்: கலங்காத வாழ்வின் மெய்யியல்! - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
  9. படித்தோம் சொல்கின்றோம்: ஒரு விதையின் இருமலர்கள் – Two Blooms of One Seed! - முருகபூபதி -
  10. வ.ந.கிரிதரனின் பாடல் அவரது குரலில் - 'நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்'. இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5. AI
  11. எழுத்தாளர் கே. டானியலின் பஞ்சகோணங்கள் நாவல் - ஓர் அறிமுகக் குறிப்பு! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  12. நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'பிரத்தியேகக் காட்சி - ஏழு நாடகங்களும் பதிவுகளும்' நூல் பற்றிய இரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  13. அமெரிக்கா & ஈரான் வளைகுடாப் போர் நிலைமை பற்றிய ஓர் அலசல்! - எல். ஜோதிகுமார் -
  14. மே 1 - உழைப்பாளர் தினப்பாடல் : வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'
பக்கம் 1 / 128
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி