அஞ்சலி: தமிழ்ப் பணியாளர் சிவாப்பிள்ளை சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்..! - வி.ரி. இளங்கோவன் -

வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியென அயராதுழைத்த இலண்டன் சிவாப்பிள்ளை (சிவகுருநாதபிள்ளை - வயது 83) கம்போடியா - அங்கோர் நகரில் நடைபெற்ற 'கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன்" 1000 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டவேளை> சிந்திப்பதை நிறுத்திக்கொண்டமை அதிர்ச்சியையும் மிகுந்த கவலையையும் தருகிறது. அவரது பூதவுடல் லண்டனுக்கு எடுத்துவரவிருப்பதாகத் தெரியவருகிறது.
1966 -ம் ஆண்டு முதல் யான் நன்கறிந்த மனிதர். அடுத்த சில வருடங்களில் அவர் பொறியியல் படிப்பிற்காக லண்டன் வந்தார். கணினித்துறையில் கற்று வல்லுநராகத் திகழ்ந்தார். கணினியில் தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அன்றே முயற்சி மேற்கொண்டவர்.
யாழ்ப்பாணம் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகக்கொண்ட அவர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி> யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் யான் கல்வி கற்ற காலத்தில் (க. பொ. த.) சில மாதங்கள் எமக்குத் தமிழ்ப் பாட ஆசிரியராகவும் கடமையாற்றியவர். அவரது மனைவி எனது வகுப்புச் சக மாணவர்.
யான் பிரான்ஸ் வந்த காலத்தில் (1991) அவருடன் மீண்டும் தொடர்பு கிடைத்தது. இலண்டனில் எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டு உரையாற்றத் தவறியதில்லை. எனது நூல்கள் அறிமுக நிகழ்வுகளை அங்கு ஒழுங்குசெய்து உதவியவர். வீட்டிற்கும் அழைத்து அன்பாக உரையாடி உபசரித்த பெருந்தகை. மூத்த சகோதரர்போல் என்னுடன் பாசமாகப் பழகிய அன்புள்ளம்.



“செக்கூரட்ரி.... மதுரையிலயிருந்து வசந்தன் வந்தால், காம்பவுண்டுக்குள்ளை எலவுட்பண்ண வேண்டாம்.... இதோ உங்க ரூம்ல அவன் ட்ரெஸ்சு வெச்சிருக்கிற சூட்கேசை வெச்சிருக்கேன்.... இந்தா பாருங்க, உங்க டேபிள்ள ரூவா ஐயாயிரம் வெச்சிருக்கேன்....




பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று 


தமிழ்மொழி இனிமையானது. பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இலக்கியவளம், இலக்கணச் செழுமை கொண்டது. செம்மொழி அந்தஸ்து கொண்டது. சொல்வளம் நிறைந்தது. ஒரு சொல்லுக்கு பல பொருளும், பல சொல்லுக்கு ஒரு பொருளும் உடையது. இதுபற்றி தருவது நிகண்டுகளாகும். திவாகரநிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு என்று பல நிகண்டுகள் உள்ளன. சரணம், பாதம், கால், அடி, கழல், தாள் ஆகிய சொற்கள் அனைத்தும் கால் என்ற ஒரு சொல்லையேக் குறிக்கும்.கம்பராமாயணத்தில் இச்சொற்கள் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்து குறித்து ஆராய்வோம்.
தேவனும் வாசுகியும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெளியே வந்த போது உபர்டாக்ஸி நின்று கொண்டிருந்தது. தன் கைபேசியை பார்த்து தேவன் ஓட்டி எண்ணை அந்த டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னான்.
புதுமைப்பித்தன் நவீனத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியாகவும், புதிய சகாப்தத்தின் விடிவெள்ளியாகவும் கருதப்படுகிறார். அவரது படைப்புகள், தமிழ் இலக்கியத்தை அதுவரை ஆக்கிரமித்திருந்த சீர்திருத்தக் கருத்துகள், கற்பனைச் சோடனைகள், அல்லது எளிய அறவுரைகள் ஆகியவற்றிலிருந்து விலக்கி, யதார்த்தவாதத்தின் (Realism) கொடியை உயர்த்தின. 1930களில், அவர் கதைசொல்லி முறையில், மொழி நடையில், மற்றும் பாத்திர வார்ப்பில் ஒரு தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவந்தார்.
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.
நடைமுறை வாழ்வின் ஒவ்வொரு அடுக்குகளையும் நேர்மையுடன் பதிவு செய்பவை படைப்பிலக்கியங்கள். ஒரு படைப்பாளி எழுதும் போது உணரப்படும் விடயங்களாக உள்வாங்கல், நோக்கம், செயல், வெளிப்பாடு என்பன இருக்கின்றன. எதை எழுத வேண்டும் என்ற தீர்மானம் உறுதியான பின்னரே வார்த்தைகள் பிறக்கின்றன. பிரச்சனைகளோடும் பல கேள்விகளோடும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்கின்ற சமூகம் இது. அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை அனுபவிக்கும் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்களை அடையாளம் காட்டுவதாகவே இந்த படைப்பிலக்கியங்கள் அமைகின்றன. அதனால் ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்துக்கானதாக மாறிக் கொள்கின்றன. அந்த வகையில் நேர்மையுடன் படைக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் வரவேற்கத்தக்கதே. 








[ 2013இல் ,திருச்சி தேசியக் கல்லூரியில், கனடிய எழுத்துக்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. ‘கனடா: பல இடங்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் இந்திய கனடிய ஆய்வுகள் சங்கம் இந்த மாநாட்டை நடத்தியது. வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த பின்வரும் ஆங்கிலக் கட்டுரை , Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan, முனைவர் ஆர். தாரணியால் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தமிழாக்கம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலக் கட்டுரை இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது]

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









