சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ
சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம்
தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே
உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது
தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்
பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலானா 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய 
[எழுத்தாளரும், ஞானம் சஞ்சிகையின் பதிப்பாளரும், ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரனின் மறைவையொட்டி, எழுத்தாளர் முருகபூபதி ஞானசேகரன் அவர்களின் எண்பதாவது வயதையொட்டிப் பதிவுகள் இணைய இதழில் அன்று எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.]
எழுத்தாளர் ஞானசேகரன் மறைந்தார் என்னும் செய்தி எதிர்பாராதது. இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர். நாவல், சிறுகதை, கட்டுரை (பத்தி எழுத்துகள், பயணக் கட்டுரைகளுட்பட) ,இதழியல் (ஞானம் சஞ்சிகை), பதிப்புத்துறை (ஞானம் சஞ்சிகையின் சார்பில் பல நூல்கள் வெளியாகியுள்ளன) என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது.
'காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.
தனித்த வாழ்வியலிற்காக யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட படகர்களின் தொல்சடங்குகள் தனித்துவமானவை. சுமய சார்பற்றவை. இவர்களே உருவாக்கிய தொல் பண்பாட்டினைக் கட்டியங் கூறுபவை. இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியலின் உறுதிபாடாகத் தொடர்பவை. அந்தச் சடங்குகளில் சில சங்கக் கூறுகளின் தொடர்ச்சியாகத் திகழ்பவை. இன்றும் இவர்களின் இயற்கை வாழ்வின், வழிபாட்டின் எச்சங்களாத் தொடர்கின்றன. அதில், இவர்களின் மரவழிபாடு இன்றியமையானதாகும்.
வேப்ப மரம் பெரும்பாலும் பங்குனி தொடங்கி வைகாசி மாதங்களில் பூக்கும்.நன்றாக வைகாசியில் வேப்பம்பூ பூத்துக்குலுங்க எங்கள் வீட்டு வேப்பம்பூவில் வடகத்தைத்தட்டிப் பாயில் போட்டுக் காயவைக்க அப்பாவும், அம்மாவும் தங்களைத் தயார்படுத்துவார்கள். அதுவே அன்று எமக்கு பெரும் செயல்முறையாக இருந்தது.முற்றத்தில் பாய்விரித்து வடகத்தைத் தட்டி பாயில் காயவைக்கும்போது,காற்று புழுதியையும் மண்ணையும் சேர்த்து அள்ளிக்கொண்டு வந்து ஈரப் பதத்திலிருக்கும் வடகத்தில் விழுந்துவிட்டால்போதும்,அந்த வடகங்களை உண்ணவே முடியாது. கர கரவென்று வாய்க்குள் மண்தான் கடிபடும்.ஓரிரு நாட்களின் உழைப்பு முழுவதும் வீணாய்ப்போய்விடும். மனமும் கலங்கும்.காயப்போட்ட இடத்திற்கு நாயோ, பூனையோ,அணிலோ, காகமோ எதுவுமே வந்து கொத்தியோ, மிதித்தோவிடக்கூடாது என்பதற்காகவே பாய்களுக்குப் பக்கத்திலேயே கிளுவம் தடியுடன் அன்று அரைக்காற்சட்டை போட்ட இளசுகள் நாம் காவலிருந்தோம்.

கோண்டல் என்பது எமிலி பிரான்டே மற்றும் அவரது சகோதரி ஆன்னே ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு கற்பனை உலகம். அவ்வுலகத்தை மையமாகக் கொண்டே அவர்கள் இருவரும் கவிதைகள் மற்றும் கதைகள் எழுதி வந்தனர். இவ்வுலகத்தை உருவாக்குவதற்கு முன் அவர்கள் தங்களின் மூத்த சகோதர சகோதரிகளான சார்லட் மற்றும் பிரான்வெல்லுடன் இணைந்து ‘ஆங்க்ரியா’ என்ற இராச்சியத்தை உருவாக்கி விளையாடி வந்தனர். அந்த இராச்சியத்தின் கதாநாயகர்களாக ‘டியூக் ஆப் வெல்லிங்டன் மற்றும் அவரது மகன்கள் இருந்தனர். இப்போது அந்த இராச்சியம் உருவான கதையைப் பார்ப்போமா.
5
இதேபோல், பழமையின் செழுமைகளில் இவன் ஆழ ஈடுபாடு கொண்டிருந்தாலும் அது நவீன அரசியலில் இவன் கால்பதிப்பதை தடுப்பதாக தோன்றவில்லை. அதாவது, பண்டைய அரசியல் சிந்தனைகளில் இருந்தும், மரபுகளில் இருந்தும் ஒப்பீட்டளவில் விடைபெற்ற இளைஞனாகவே இவன் தனது 23-25 வயதில் தோற்றம் தருபவனாக காட்சியளிக்கின்றான்.
கட்டுரையின் கட்டமைப்பு (Outline)
அமெரிக்காவின் ஒற்றைத்தருவ உலக ஆதிக்கம் (Unipolar Hegemony), அதன் இராணுவத் தலையீடுகள் மற்றும் அவை எவ்வாறு உலகளாவிய விநியோகச் சங்கிலி (Global Supply Chain), பணவீக்கம் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்பது குறித்த ஒரு சுருக்கமான அறிமுகம்.



இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறை அதிகமாக மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக “மின்னணு அடிமையாதல்” (Digital Addiction) என்ற பிரச்சினை தீவிரமாக உருவாகியுள்ளது. இதே சமயம், மரபு மற்றும் பண்பாட்டு மதிப்புகள் பின்தள்ளப்படுகின்றன என்பது கவலைக்குரிய நிலையாகும்.

யமுனா அனைத்து வேலைகளையும் முடித்து தூக்கத்திற்குப் போக மணி சாமம் 12:30 ஆகிவிட்டது. அவளுக்கோ குளிர் வேறு எலும்புகளூடு ஊடுருவி உடம்பு எல்லாம் குத்துவது போல உணர்வு. அதிகாலை எழவேண்டும், மகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 6:00, 6:15, 6:30 என மூன்று அலாரங்களை கையடக்கத் தொலைபேசியில் வைத்துவிட்டு அயர்ந்து தூங்கிப்போனாள். ஒரு மணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டாள் சுருண்டு படுத்திருந்த மகனின் இருமல் அவளை மீண்டும் எழச் செய்தது. இந்தக் குளிர் ஆரம்பித்தது முதல் எந்நேரமும் குழந்தைக்கு இருமலும் தடிமனும் தான். பாவம் குழந்தை தொடர்ந்து இருமிக் கொண்டிருக்க இளஞ்சூடான தண்ணீர் கொடுத்து மீண்டும் அவனைத் தூங்க வைக்க மணி இரண்டு ஆகி விட்டது. அவளுக்கோ குழம்பிய தூக்கம் மீண்டும் வர மறுக்கின்றது. புரண்டு புரண்டு படுக்கின்றாள் . அவ்வப்போது இடைக்கிடை மீண்டும் குழந்தையின் இருமல். குழந்தையின் முதுகைத் தடவிவிட்டபடியே ஒருவாறு மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் யமுனா . 

கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









