'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)          Pathivugal  ISSN 1481-2991
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2007   இதழ் 91 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான ணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
வ.ந.கிரிதரன் கட்டுரைகள்!
அண்டவெளி ஆய்விற்கு
அடிகோலும் தத்துவங்கள்!

-வ.ந.கிரிதரன்-

Alberst Einsteinநவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை...உள்ளே

திண்ணை:
பிரபஞ்சத்து மாயங்கள்: கரும் ஈர்ப்பு மையங்கள்!...உள்ளே
மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்..உள்ளே
ஜெயமோகனின் கன்னியாகுமரி..உள்ளே
கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் பகவத் கீதை..உள்ளே
பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு..உள்ளே
பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?.உள்ளே

பிற:
பதிவுகள் 1: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!- வ.ந.கிரிதரன் - ...உள்ளே
பாரதியின் தாசன் புதுவை சுப்புரத்தினம்!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
பாவேந்தர் பற்றி மேலும் சில கருத்துகள்.....!-வ.ந.கிரிதரன் -..உள்ளே
சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!...உள்ளே
வளர்முக நாடுகளும் குடிமனைப் 
பிரச்சினைகளும் ...உள்ளே
ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்!
பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்!...உள்ளே
'மிஷியோ ஹகு'வின் 'ஹைபர் ஸ்பேஸ்'!...உள்ளே
பாரதியின் தாசன் புதுவை சுப்புரத்தினம்!...உள்ளே
சிக்மண்ட் பிராய்ட் பற்றிய கட்டுரை (தேடல், கனடா)..உள்ளே
எழுத்துக்காக வாழ்ந்த அ.ந.கந்தசாமி!...உள்ளே
தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!...உள்ளே
ஜெயமோகனின் விஷ்ணுபுரம்...உள்ளே
ஆனை பார்த்த குருடர்கள்..உள்ளே
நாவலர் பண்ணை நினைவுகள்..உள்ளே
பாரதியும், ஐரோப்பிய பெண்களும், 
கட்டுப்பாடற்ற காதலும்...உள்ளே
வெளி, நேரம், அதிவெளி.....உள்ளே
ஈழத்துத் தமிழ் இலக்கிய 
மூலவர்களில் ஒருவர்: எஸ்.பொ (ஆறாந்திணை)...உள்ளே
ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் 
முன்னோடி: அறிஞர் அ.ந.கந்தசாமி...உள்ளே
Being There: நூல் விமரிசனம் (சுபமங்களாக் கட்டுரை)..உள்ளே
'நந்தலாலா' ஜோதிகுமாருடன் நேர்காணல்....உள்ளே
சொக்கன்: ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையின் 
முக்கியமான படைப்பாளிகளிலொருவர்!...உள்ளே
கணித்தமிழும் இணைய இதழ்களும்....- வ.ந..கி -....உள்ளே
பண்டைய இந்துக்களின் கட்டடக் கலையும், நகர அமைப்பும் (கணையாழிக் கட்டுரை)
சூழலைப் பாதுகாப்பதன் அவசியமும் , மனித குலத்தின் வளர்ச்சியும் (கணையாழிக் கட்டுரை)]
மைக்ரோசாவ்டின் வெப் சேர்வர் (தமிழ்க் கம்ப்யூட்டர் கட்டுரை)
விண்டோஸ் எண்டி கட்டமைப்பு (தமிழ்க் கம்ப்யூட்டர் கட்டுரை)
இணையத் தமிழும் மின் வர்த்தகமும் (அம்பலம், இணைய இதழ்)
அச்சை விட்டு விலகிச் செல்லும் பிரபஞ்சக் குடும்பங்கள்..(வீரகேசரி)
விளக்கங் காணும் வெளி நேரப் பிரபஞ்சம் (வீரகேசரி)
விசைகளே பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள் (வீரகேசரி)
கரும் ஈர்ப்பு மையங்கள் (வீரகேசரி)
ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்..(வீரகேசரி)
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் மண்வாசனை (பொதிகை)
குறமகளுடன் நேர்காணல் (பொதிகை)
மு.த.வின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி பற்றிச் சில கருத்துகள்..(தாயகம், திண்ணை விவாதம்)
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் (திண்ணை விவாதத்திலிருந்து)
மரபும் கவிதையும் (தாயகம், கட்டுரைத் தொடர்)
பாரதி பற்றிய கட்டுரைகள் (தாயகம், கட்டுரைத் தொடர்)
தமிழ்ப் பகுதிகளின் பழமையின் சின்னங்களும் பேணப்படுதலின் அவசியமும் (ஈழநாடு, நுட்பம்)
கலாச்சாரம், மார்க்சியம் (திண்ணை விவாதத்திலிருந்து)
நல்லூர்க் கோட்டை (ஈழநாடு)
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஈழநாடு)
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (தாயகம், கட்டுரைத் தொடர்)
கோப்பாய்ப் பழைய கோட்டை (வீரகேசரி)
வளர்முக நாடுகளும் குடிமனைப் 
பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா? (நுட்பம்)
பாரதி மார்க்ஸியவாதியா? (தேடல்)
கவீந்திரன் (அ.ந.க) கவிதைகள் (செரந்தீபம்)
விளக்கங் காணும் வெளி நேரப் பிரபஞ்சம் (வீரகேசரி)
விசைகளே பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள் (வீரகேசரி)
கரும் ஈர்ப்பு மையங்கள் (வீரகேசரி)
சிக்மண்ட் பிராய்ட் பற்றிய கட்டுரை (தேடல், கனடா)
அ.ந.கந்தசாமி பற்றிய கட்டுரைத் தொடர் (ழகரம், கனடா)

நூல்:
நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு 
(ஆய்வு,ஸ்நேகா பதிப்பக வெளியீடு, ஆங்கில மொழிபெயர்ப்பு)...உள்ளே
நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு 
(ஆய்வு,ஸ்நேகா பதிப்பக வெளியீடு. தமிழில்)...உள்ளே
 

வ.ந.கிரிதரன் சிறுகதைகள்!
சீதாக்கா 
-வ.ந.கிரிதரன் - 
Seethaakkaaஇன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால்  இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ரியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான போதுதான் "மன்னிக்கவும். நீ ஸ்ரீலங்கா நாட்டவனா?" என்று ஆங்கிலத்தில் ஆண் குரல் கேட்கவே திரும்பினேன். எதிரே வெள்ளையினத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரொருவன் நின்றிருந்தான்..உள்ளே

ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.- வ.ந.கிரிதரன் -உள்ளே
நீ எங்கிருந்து வருகிறாய்?'- வ.ந.கிரிதரன் -..உள்ளே
அறிவியற் கதை:தேவதரிசனம்! -வ.ந.கிரிதரன்...உள்ளே
அறிவியற் சிறுகதை: 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!'...உள்ளே
கெளதமனின் வாழ்வு! - வ.ந.கிரிதரன் -...உள்ளே 
நடுவழியில் ஒரு பயணம்!...-...உள்ளே 
'வங்காலை'!- வ.ந.கிரிதரன் -..உள்ளே
யமேய்க்கனுடன் சில கணங்கள்!- வ.ந.கிரிதரன் -உள்ளே
கலாநிதியும் வீதி மனிதனும்! - ..வ.ந.கிரிதரன் -...உள்ளே
சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!-உள்ளே
மனோரஞ்சிதம்!- வ.ந.கிரிதரன்...உள்ளே
புலம் பெயர்தல்.- வ.ந.கிரிதரன்...உள்ளே
'காங்ரீட்' வனத்துக் குருவிகள்! - வ.ந.கிரிதரன் -....உள்ளே
Where are you from? - வ.ந.கிரிதரன்-உள்ளே.
சீதாக்கா - வ.ந.கிரிதரன் ...உள்ளே
ஒரு மகோன்னதப் படைப்பாளி 
எழுதும் சிறுகதை!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
சொந்தக்காரன்... .உள்ளே
வேதாளம் சொன்ன 'சாட்' கதை.உள்ளே
அக்கறை! - வ.ந.கிரிதரன்-......உள்ளே
தப்பிப் பிழைத்தல் - வ.ந.கிரிதரன் -....உள்ளே
வீடற்றவன்...- வ.ந.கிரிதரன் -....உள்ளே
'ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'...உள்ளே
மனைவி!...உள்ளே
உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்'...உள்ளே
கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள்....உள்ளே
என் குழந்தை..- -உள்ளே
யன்னல் ..- வ.ந.கிரிதரன் -உள்ளே
சுண்டெலிகள்.- வ.ந.கிரிதரன் -உள்ளே
'பல்லிக்கூடம்' (குட்டிச் சிறுகதை) -..உள்ளே  (ஆனந்த விகடன்)

ஆசிரியரும் மாணவனும்....உள்ளே

New Tamil Writer By Se.Ganesalingan
My Stories BBy V.N.Giritharan
Short Story: CO(W)UNTRY ISSUE
Short Story: MICE
Short Story: Manhole
Short Story: Homeless
Short Story: Husband

மான் ஹால்
மனித மூலம்
கணவன் அல்லது இந்தியக் கணவன்
பொந்துப் பறவைகள்
ஒரு முடிவும் விடிவும்

நாவல்கள்:
மண்ணின் குரல் (புரட்சிப் பாதை)
கணங்களும் குணங்களும் (தாயகம்)
வன்னி மண் (தாயகம்)
அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் (தாயகம்)
அமெரிக்கா (தாயகம்)

ஆரம்பகாலச் சிறுகதைகள் சில:
சலனங்கள் (சிரித்திரன்; அ.ந.கந்தசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வான கதைகளிலொன்று. பிரசுரமான முதல் கதை).
ஆலமரத்தடியில் பிறந்த ஞானம் (தினகரன்)
அஞ்சலை என்னை மன்னித்துவிடு! (ஈழநாடு)
இப்படியும் ஒரு பெண் (ஈழநாடு)
மணல்வீடுகள் (ஈழநாடு)
நியதி (உருவகக் கதை, ஈழநாடு)
அரசாளும் உரிமை யாருக்கு? (சிறுவர் கதை; கண்மணி)
 

வ.ந.கிரிதரன் கவிதைகள்!
இருப்பதிகாரம்

 - வ.ந.கிரிதரன் -

நிலை மண்டில ஆசிரியப்பா!

Man

வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?
விரியு மண்ட மடக்கு மண்டம்
அதனை யடக்க மற்றோ ரண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு....உள்ளே

அலைகளுக்கு மத்தியில்...!- வ.ந.கிரிதரன்...உள்ளே
விசும்பும், தொலைநோக்குதலும்!- வ.ந.கிரிதரன்- உள்ளே
இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
இயற்கையொன்றி இருத்தல்!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! -வ.நகிரிதரன் -......உள்ளே
விருட்சங்கள்!...உள்ளே
விண்ணும் மண்ணும்!...உள்ளே
ஞானம்!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
கிணற்றுத் தவளைகள்!...உள்ளே
யானை பார்த்த குருடர்கள்! ...உள்ளே
நகரத்து மனிதனின் புலம்பல்'  -வ.ந.கிரிதரன் உள்ளே
எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு.. வ.ந.கிரிதரன் -உள்ளே
பேய்த்தேர்! - வ.ந.கிரிதரன் -உள்ளே
கனவுக் குதிரைகள் (கனேடியக் கவிதை. மொழிபெயர்ப்பு)...உள்ளே
இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி
இருத்தற்கு!- வ.ந.கிரிதரன் -...உள்ளே
எதற்காக?- வ.ந.கிரிதரன் -உள்ளே
நடிகர்கள்! -வ.ந.கிரிதரன்.உள்ளே
நகர் வலம் - வ.ந.கிரிதரன்-.உள்ளே
அனகொண்டா -வ.ந.கிரிதரன்-.உள்ளே
காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.- வ.ந.கிரிதரன்-.உள்ளே
விடுதலைக் கவிதைகள் சில (1984-1987)...உள்ளே

திண்ணை இணைய இதழில் 
வெளிவந்த வ.ந.கிரிதரன் கவிதைகள் சில...

கனவுக் குதிரைகள் (கனேடியக் கவிதை. மொழிபெயர்ப்பு)...உள்ளே
கனவுக் குதிரைகள் (கனேடியக் கவிதை. மொழிபெயர்ப்பு)
திண்ணை யூன் 17,2001

எங்கோயொருக்கும் ஒரு கிரகவாசிக்கு
திண்ணை யூலை 1, 2001...

நகரத்து மனிதரின் புலம்பல்
திண்ணை யூலை 9, 2001

கனேடியக் கவிதைகள்: எனது விடுதி, பாத மொழி, அவளது தலைமயிர்
திண்ணை ஆகஸ்ட் 19, 2001

திக்குத் தெரியாத கட்டடக் காட்டினிலே
திண்ணை ஆகஸ்ட் 19, 2001

கனேடியக் கவிதைகள்: கோடைப் பல்லி, பனி உறைந்த ஆற்ர்ரின் மீது நடத்தல், முதல்
திண்ணை செப்டெம்பர் 3, 2001

நகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்
திண்ணை செப்டெம்பர் 9,2001

இயற்கையைச் சுகித்தல்
திண்ணை செப்டெம்பர் 16, 2001

மூன்று கவிதைகள்: சிட்டுக் குருவி, பாரதியாய்ப் படைத்திடுவீர், ஞாபகமிருக்கிறதா பெண்ணே!
திண்ணை செப்டெம்பர் 23, 2001

பரிமாணங்களை மீறுவதெப்போ (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம் )
திண்ணை செப்டெம்பர் 23, 2001

பேரசிற்கொரு வேண்டுகோள்
திண்ணை செப்டெம்பர் 30, 2001

நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும் 
திண்ணை ஒக்டோபர் 7, 2001

இருட்டுப் பன்றிகள்
திண்ணை ஒக்டோபர் 21, 2001

நாகரிக மானுடமே
திண்ணை ஒக்டோபர் 28,2001

ஞானச் சுடரே நீ எங்கு போயொளிந்தனையோ?
திண்ணை நவம்பர் 4,2001

'எழுக அதிமானுடா ' 
கவிதைத் தொகுதியிலிருந்து சில..

சுடர்ப்பெண்கள் 
சொல்லும் இரகசியம்?

இருண்ட அடிவானை நோக்குவீர்.
ஆங்கு 
இலங்கிடும் சுடர்ப்பெண்கள்
உரைத்திடும்
இரகசியம் தானென்ன?
புரிந்ததா?
புரிந்திடினோ, பின்னேன்
நீவிர் புழுதியில் கிடந்துருள்கின்றீர்?
சாக்கடையில்
புழுத்துளம் வேகுகின்றீர்?
சூன்யத்தைத்
துளைத்து
வருமொளிக்கதிர்கள்.
நோக்குங்கள்!
நோக்குங்கள்!
நோக்கம் தான்
தெரிந்ததுவோ?
தெரிந்துவிடின்
போக்கற்ற பிறவியெனப்
புவியில்
தாக்குண்டலைகின்றீரே? ஏன்?
'அஞ்சுதலற்ற கதிர்கள்.
அட, 
அண்டத்தே யார்க்கும்
அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்
ஓடியே வந்தோம். வருகின்றோம். வருவோம்.
காலப் பரிமாணங்களை
வெளியினிலே
காவியே வந்தோம்.
சூன்யங்கள் கண்டு
சிறிதேனும்
துவண்டுதான் போனோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர்
எம்முன்னே
மிஞ்சி நிற்பவர் தானுண்டோ?
தெரிந்ததா? விளக்கம்
புரிந்ததா?
தெரிந்திடினோ? அன்றி
புரிந்திடினோ?
உரிமையற்ற புள்ளெனவே
உழல்கின்றீரே யிவ்வுலகில்.
அட,
துள்ளியெழத் தான்
மாட்டீரோ? புத்துலகம்
சமைத்திடத்தான்
மாட்டீரோ?
புரிந்ததா? சுடர்ப்பெண்கள்
பகரும் இரகசியம்
புரிந்ததா? 

விடிவெள்ளி

அதிகாலை மெல்லிருட்
போதுகளில்
அடிவானில் நீ
மெளனித்துக் கிடப்பாய்.
படர்ந்திருக்கும் பனிப்போர்வையினூடு
ஊடுருவுமுந்தன்
நலிந்த ஒளிக்கீற்றில்
ஆதரவற்றதொரு சுடராய்
நீ
ஆழ்ந்திருப்பாய்
விடிவு நாடிப் போர் தொடுக்கும்
என் நாட்டைப் போல.
விடிவின் சின்னமென்று
கவி
வடிப்போர் மயங்கிக்கிடப்பர்.
ஆயின்
சிறுபோதில்
மங்களிற்காய் வாடிநிிற்கும்
உந்தன்
சோகம்
புரிகின்றது.
அதிகாலைப் போதுகளில்
சோகித்த
உந்தன்
பார்வை படுகையிலே
என் நெஞ்சகத்தே
கொடுமிருட் காட்டில் தத்தளிக்கும்
என் நாட்டின்
என் மக்களின்
பனித்த பார்வைகளில்
படர்ந்திருக்கும் வேதனைதான்
புரிகின்றது.
என்றிவர்கள் சோகங்கள்
தீர்ந்திடுமோ?
என்றிவர்கள் வாழ்வினில்
விடிவு பூத்திடுமோ?
விடிவினை வழிமொழியும்
சுடர்ப்பெண்ணே!
வழிமொழிந்திடுவாய். 

இயற்கைத்தாயே!

போதுமென்றே திருப்தியுறும்
பக்குவத்தைத் தந்துவிடு!
தாயே!  இயற்கைத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்.
விதியென்று
வீணாக்கும் போக்குதனை
விலக்கி விடு.
மதி கொண்டு
விதியறியும்
மனத்திடத்தை
மலர்த்திவிடு.
கோள்கள், சுடர்களெல்லாம்
குறித்தபடி செல்வதைப்போல்
வாழும் வாழ்வுதனை
என் வாழ்நாளில் வளர்த்துவிடு.
தாயே! இயற்கத்தாயே!
உந்தன்
தாள் பணிந்து கேட்பதெல்லாம்
இதனைத்தான். இதனைத்தான்... 

எங்கு போனார் என்னவர்?

அன்றொரு நாள் பின்னிரவில்
ஆயுதம்தனையேந்திப்
போனவர் என்னவர் தான்.
போனவர் போனவரே.
போராடிச் சாவதுவே
மேலென்று போனவரை
யாரேனும் பார்த்தீரோ?
பகைவன்தன்
போர்க்களத்தே போனாரோ?
அன்றி
'பூசா'வில் தான் புதைந்தாரோ?
உட் பகையால்
உதிர்ந்தாரோ?
உடல் படுத்தே மடிந்தாரோ?
போனவரை
யாரேனும்
பார்த்துவிட்டால் சொல்வீரோ?
அன்னவரை
எண்ணியெண்ணி
அகமுடையாளிருப்பதாக.
மன்னவரின் நினைவாலே
மங்கையிவள் வாழ்வதாக...

விழி! எழு! உடைத்தெறி!

தளைகள்!தளைகள்!தளைகள்!
எங்குமே..நானாபக்கமுமே..
சுற்றிப் படர்ந்திருக்கும்
தளைகள்!தளைகள்!தளைகள்!
சுயமாகப் பேசிட,
சிந்தித்திட,
உன்னையவை விடுவதில்லை.
நெஞ்சு நிமிர்த்தி
நடந்திட அவை சிறிதும்
நெகிழ்ந்து கொடுப்பதில்லை.
உள்ளும் புறமும்
நீ
உருவாக்கிய 
தளைகள்.
­ன்றுனை ­றுக்கி
நெருக்கி
உறுஞ்சிக் கிடக்கையில்..
விழி! எழு! உடைத்தெறி!
உன் கால்களை,
உன் கைகளை,
உன் நெஞ்சினைப்
பிணைத்து நிற்கும்
தளைகளை
விலங்குகளை
உடைத்துத் தள்ளு!
வேரறுத்துக் கொல்லு! 

ஆசை!

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும்
ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல்
அடியேனின் வழக்கமாகும்.
கருமைகளில்
வெளிகளிலே
கண் சிமிட்டும் சுடர்ப்
பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.
நத்துக்கள்
கத்தி விடும்
நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.
பரந்திருக்கும் அமைதியிலே
பரவி வரும்
பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி
பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.
இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால்
அடியேனின்
இஷ்ட்டமாகும்.   

இயற்கையே போற்றி

எங்கும் வியாபித்து, எங்கும் பரந்து
எங்கனுமே,
சூன்யத்துப் பெருவெளிகளும்
சுடர்களும், கோள்களும்,
ஆழ்கடலும், பாழ் நிலமும்,
பொங்கெழி லருவிகளும்,
பூவிரி சோலைகளும்,
­ன்னும்
எண்ணற்ற , எண்ணற்ற கோடி
கோடி யுயிர்களுமாய்
வியாபித்துக் கிடக்கும்
பரந்து கிடக்கும்
­யற்கைத் தாயே! உனைப்
போற்றுகின்றேன். நானுனைப்
போற்றுகின்றேன்.
பொருளும் சக்தியுமாய்
சக்தியே பொருளுமாய்
E=M(C*C)
­ருப்பதுவே யில்லாததாய்
­ல்லாததே யிருப்பதுவாய்
உண்மையே பொய்மையுமாய்
பொய்மையே உண்மையுமாய்
நித்தியமே அநித்தியமுமாய்
அநித்தியமே நித்தியமுமாய்
புதிர்களிற்குள் புதிராகக்
காட்சிதரும் ­யற்கைத்தாயே! உனைப்
போற்றுகின்றேன்!நானுனைப்
போற்றுகின்றேன். 

தனிமைச் சாம்ராஜ்யத்துச் 
சுதந்திரப் பறவை.

தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? ­ல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே. ­சை
பாடிடுமெழிற் புள்ளெனவே.
கட்டுக்களற்ற உலகில்
கவலைக் காட்டேரிகள் தானேது?
சட்டங்களற்ற வுலகில்
சோகங்கள் தானேது?
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிந்தனரென் பறத்தலின் பின்னே.
பிரபஞ்சத்து வீதிகளில்
பறந்து மீள்கையில் படர்வது
பெருமிதமே.
நோக்கங்கள் விளங்கி விட்ட வாழ்வில்
தாக்கங்கள் தானேது? அன்றி
ஏக்கங்கள் தானேது?
தனிமைகளின் சாம்ராச்சியங்களில்
நான் கட்டுண்டு கிடந்திடுகின்றேன்
அடிமையாகவா? அன்றி
ஆண்டானாகவா? ­ல்லை
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையெனவே.­சை
பாடிடுமெழிற் புள்ளெனவே. 

அதிகாலைப் பொழுதுகள்

அதிகாலைப் பொழுதுகள்
அழகானவை.பிடித்தமானவை. சில
அதிகாலைப்பொழுதுகளில்
அப்பாவின் தோளில் சாய்ந்தபடி
அடிவானச் சிவப்பு கண்டு
அதிசயித்திருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம் விண்ணில்
அழகாகக் கோடிழுக்கும்
நீர்க்காகத்தின்
நேர்த்தி கண்டு
நினைவிழந்திருக்கின்றேன்.
­ன்னும் சில
அதிகாலைப் பொழுதுகளோ
அற்புதமானவை. விடாது பெய்த
­ரவின்
அடை மழையில்
குட்டைகள் நிரம்பியதில் வாற்பேத்தைகள்
கும்மாளமிடும்.
பெரும்பாலான
அதிகாலைப் பொழுதுகளில்
நகரிற்குப் படையெடுப்பர்
நம் தொழிலாள வீரர். அவர்தம்
விடிவு வேண்டி
அச்சமயங்களீல்
ஆவேசம் அடைந்திருக்கின்றேன்.
விரகத்தால் துடிக்கும் பனைப்பெண்டிர்;
மூசிப் பெய்யும் மாசிப்பனி;
பனிதாங்கும் புற்கள்; புட்கள்.
­வையெல்லாம்
அதிகாலைப் பொழுதுகளிற்கு
அழகூட்டின. ஆயினெப்பொழதுமே
அதிகாலைப் பொழுதுகள்
அது போன்றே யிருந்ததில்லை. சில
அதிகாலைப் பொழுதுகள்
அவலத்தைத் தந்திருக்கின்றன.
அப்பொழுதெல்லாம்
எரிந்து கன்றி யுப்பிய
உடல்களை
அதிகாலைகளில் கண்டிருக்கின்றேன். ­ரவின்
அனர்த்தங்களை அவை சோகமாக
எடுத்துரைக்கும்;மெளனமான சோகங்கள்.
­ப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள் முன்புபோல்
­ல்லை தான். அவை
அழகாகவுமில்லை.
அவலட்சணமாகவுமில்லை. அவை
அற்புதமாகவுமில்லை. ஏன்
ஆபத்தாகக் கூடத் தெரிவதில்லை.
எத்தனை தரம் தான்
'காங்ரீட்' மரங்களையும்
கண்ணாடிப் பரப்புக்களையும்
பார்ப்பது?
­ப்பொழுதெல்லாம்
அதிகாலைப் பொழுதுகள்
சலிப்பைத் தருகின்றன,
போரடிக்கின்றன.
­ருந்தாலும் ­ன்னமும்
'விடிவை' எதிர்வு கூற மட்டும்
அவை தயங்குவதேயில்லை.

வ.ந.கிரிதரனின் ஆரம்பகாலக் கவிதைகள் சில ..உள்ளே

© காப்புரிமை: Pathivukal.COM
Info Whiz Systems Inc வ.ந,கிரிதரன்
2000-2006