பாரதிராஜா! - ஜோதிகுமார் -

பாரதிராஜா என்று தமிழ் திரைப்பட உலகில் சாதனை படைத்தவன் மறைந்து விட்டான். கிட்டத்தட்ட 49 வருடங்களின் முன்னர், 1977இல் “16 வயதினிலே” என்ற படத்திற்கூடாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜா தனது காலப் பகுதியில் சில பிரமாண்டங்களை தராமல் இருக்கவில்லை. இதற்கான ஒரு காரணம் அன்று இருந்திருக்கக்கூடிய காலச் சூழல் என்பதும் நீதியரசர் பகவதி கூட பொது நல வழக்கு (Public Interest Litigation) என்ற கருத்தாக்கத்தை இக்காலத்திலேயே அறிமுகம் செய்தார் என்பதும் குறிக்கத்தக்கது. ஆதலால் இது தற்செயல் அல்ல என புரிவது பொதுவில் சிறப்பானது.
“அலைகள் ஓய்வதில்லை” (1981) தனது முக்கிய படம் என பாரதிராஜா வரையறுப்பார். தேசிய விருது பெற்ற “முதல் மரியாதை''யைத் தாண்டி (1985) அவர் இப்படத்தை தேர்வது இவரது சிறப்பம்சம். “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய அமைச்சர்களில் ஒருவர் இவர் மனக்கண்களில் வடித்து வைத்திருக்கும் முஸ்லீம் பெண் கதாப்பாத்திரத்தை மட்டும் எடுத்துவிடக் கோருவார். “முஸ்லிம்- இந்து விவகாரத்தை நீங்கள் தொடாதீர்கள்… என்பது அவர் விடுத்த வேண்டுகோள்” எனக் கூறுவார் பாரதிராஜா.
தனது 16 வயதினிலேக்கு பிறகு தனது கால்களை ஓரளவு உறுதியாக தமிழ் திரைப்பட உலகில் பதித்துக் கொண்ட பாரதிராஜா “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தின் மூலமே புரையோடி போயிருந்த முஸ்லிம்-இந்து உறவுகளை சீர்படுத்தும் விதத்தில் செயல்படலானார். முஸ்லிம்-இந்து என்ற இரண்டு வெவ்வேறு மதங்களை சார்ந்த இரு பதின் வயது இளசுகளிடையே தோன்றும் காதல் குறித்தும் இறுதியில் இவ்விளசுகள் இருவருமே தத்தமது மத அடையாளங்களை தூக்கி எறியும் காட்சிகளையும் பிரதானமாக படம் பிடிக்க திட்டமிட்டு இருந்ததாகக் கூறுவார்:
“இறுதியில் அந்த முஸ்லிம் பெண் தனது பர்தாவை அப்படியே கழற்றி தூக்கி எறிவதாக நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை கற்பனையிலேயே வடிவமைத்தும் இருந்தேன். ஆனால் அமைச்சரின் இந்த கோரிக்கைகயை என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை… படம் வெளிவந்தாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததேன்…இறுதியில் இந்த முரணை ஒரு இந்து-கிறிஸ்தவ முரணாக மாற்றிக் கொண்டேன்…”
இது அவரது காலம் முழுவதும் தொடர்ந்த ஒரு கதையாகின்றது. அதாவது ஆதிக்க சக்திகள் கலைஞன் ஒருவனை வாங்குவதும் சிதைப்பதும், உருவகப்படுத்தி தமக்கேற்ற வகையில் உருவாக்குவதும் இச்சமூகம் கூறும் விடயமாகின்றது.


* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 
மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

செயற்கை நுண்ணறிவின் ஆளுகையில் உலகம் உழலுகின்ற இன்றும் இயற்கைகென்று மாறாத இயல்புண்டு; தரமுண்டு. இதை உயிரிகளால், குறிப்பாக மனிதனால் ஆக்க முடியாது. ஆக்க முயற்சித்தாலும் அதன் தன்மை இயற்கையில் கிளைத்ததுபோல் இராது எனும் கோட்பாடு உயிர்த்திருக்கிறது. இக்கோட்டை நன்னூலாரின் “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” (நன். சொல். நூ. 404) எனும் சூத்திரத்தோடு ஒப்புநோக்கி மேலும் விளங்கிக்கொள்ளலாம். இயற்கைசார் பயன்பாட்டுநிலையார்ந்து மற்றெல்லா உயிரிகளுக்கு இயற்கையிலேயே விரவியிருந்த சூழலியல் சமநிலைப் பேணலிருந்து பகுத்தறியும் அறிவைக்கொண்ட மனிதன் பெரிதும் விலகியிருந்தான். அவனின் மனமானது விலங்குநிலை மனதிலிருந்து நனவிலிநிலை, நனவுநிலை என்று பரிணாம வளர்ச்சியுற்றது மானுட சமூகத்திற்கு ஏற்றம் தந்தாலும் சூழல்சார்ந்து பெருமளவில் சுயநலத்தையே விளைத்தது எனலாம். ஆனால், தன் வாழ்வியல் தகவமைப்பில் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்ட இனக்குழு சமூகங்களிடையே இயற்கை எல்லோருக்குமானது எனும் சூழலியல் சமநிலைக் குறித்த தெளிவும், பிரஞ்ஞையும் மிகுந்திருந்தது. இயற்கையின் துணையின்றி வாழவியலாது எனும் தெளிவிருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டுமென்ற அக்கறையிருந்தது எனலாம்.
மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.
மனித சமூகம் உருவான காலத்திலிருந்தே கதைகள் மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. மனிதனின் அனுபவங்கள், உணர்ச்சிகள், போராட்டங்கள், ஆசைகள், அச்சங்கள் மற்றும் சமூக மாற்றங்கள் அனைத்தும் கதைகளின் மூலம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது ஒரு சமூக ஆவணமாகவும், சிந்தனையின் கருவியாகவும், மாற்றத்தின் ஊடகமாகவும் விளங்குகிறது.



ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 
சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.


உடலுக்குள்



கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நடத்தும் உதயன் சர்வதேச விருது விழா சென்ற சனிக்கிழமை 6-6-2026 அன்று ரொறன்ரோவில் நகெட் அவென்யூவில் உள்ள எஸ்டேட் பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வருகை தந்த மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.
இந்திய மெய்யியலின் ஆன்மிக மனத்தை, தமிழுக்கேயான உலகநிலைப்பட்ட நவீன சிந்தனை மரபொன்றைக் கட்டமைப்பதற்குத் தளமாக்கி, சிந்தித்தும் எழுதியும் செயலாற்றியும் வினை புரிந்தவன், பாரதி. பண்டைய வேத, உபநிஷத ஞான மரபினூடும் வேதாந்த மரபினூடும், பல்வகை மதநெறிகளின் உட்கிடையான முழுமுதல் பற்றிய அறிவினூடும், தமிழ் நிலத்தின் சித்தர் தத்துவத்தினூடும் அவன் பெற்றிருந்ததும், காலத்தேவையுணர்ந்து புதுமை செய்ததும், அதனைத் தனது பாணியில் முன்வைத்ததுமான கருத்துநிலையை, 'பாரதீயம்' என இக்கட்டுரை கருதுகிறது. தமிழ் நவீனம் என்பதைத் தனியே மொழி, இலக்கிய நவீனமாக அணுகாது, தனது காலத்திருந்த, ஒட்டுமொத்த இந்திய மெய்யியல் சாரத்தினூடு அணுகிய, பாரதியின் தனித்த சிந்தனையின் தேட்டமே, 'பாரதீயம்'. இது, பாரதி நவீன காலத்தில், தமிழுக்கு வழங்கிய தத்துவார்த்தக் கொடை. பாரதீயத்தில் வேத, உபநிஷத் வழிவந்த வேதாந்தமாகிய பகவத்கீதை குறித்த உரையாடல்களே முதன்மையானவை. அவ்வகையில், 'பாரதி பார்வையில் பகவத்கீதை' எனும் பொருளிலான இந்த அறிமுகக் கட்டுரை, கீதையின் தோற்றம், பிரதான அடிப்படைகள் எவ்வாறமைந்தன, சத்திரியர்களின் மேலெழுகையை எதிர்கொண்டு தாக்கியதில் கீதையின் வகிபாகம் எவ்வாறமைந்தது, இந்திய விடுதலை இயக்க காலத்தில் அதன் வரலாற்றுப் பாத்திரம் எவ்வகையில் முதன்மை மிக்கது, தத்துவத்தின் வரலாற்றோட்டத்தில் கீதை மீதான எதிர்க் கருத்தியலை பாரதி எவ்வாறு எதிர்கொண்டான், கீதை பற்றிய பாரதியின் நோக்குநிலை எவ்வாறமைந்தது, கீதையூடு அவன் அவாவிய புரட்சி எத்தகையது போன்ற வினாக்களை இக்கட்டுரை அலச முன்னிறுத்துகிறது.



எம். பௌசரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'தோழர் வேலு சிந்தனையும் செயலும்' எனும் இந்நூல் , எம்மிடையே வாழ்ந்த உன்னதமான மனிதனின் வாழ்நாட் போராட்டங்களையும், பல கருத்தியல்களையும் மையப்படுத்தி வெளி வந்திருக்கின்றது. ‘சமூகம் இயல்’ பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் மேற்குலக நாடுகளிலும் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் பற்றிய அனுபவங்களையும் அவரது அரசியல் சமூகச் செயற்பாடுகளையும் எழுதியுள்ளனர்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









