அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் ! - நாங்குநேரி வாசஸ்ரீ் -

- கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' -
கவிஞர் அறிமுகம்: அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர் 'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் ! - நாங்குநேரி வாசஸ்ரீ் -
- கவிஞர் எம். சுப்பையா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மூத்த தமிழறிஞர். அவர் நாங்குநேரி அருகேயுள்ள புதுக்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி 1993ல் ஓய்வு பெற்றவர். ‘இலக்கிய இன்பம்’ என்ற அமைப்பின் மூலம் அக்காலத்திய பல பட்டிமன்றங்களிலும், பொது மேடைகளிலும் தமது பேச்சாற்றலால் புகழ் பெற்றவர். பல தலைவர்களின் மேடைகளில் பேசி அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தற்போது தொண்ணூறு வயதினைத் தாண்டிய பின்னும், தம் இல்லத்தின் வெளிச்சுவற்றில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுதி இளம் சிறார்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டி வருபவர். அவர் சமூகம், தத்துவம், காதல், புரட்சி, பக்தி சார்ந்த பல கவிதைகளைப் படைத்து அவற்றைப் பாடலாகவும் பாடி வந்துள்ளார். இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையிலுள்ள அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு சில கவிதைகளை இங்கே காணலாம். -
தத்துவப் பாடல்!
மனிதா! மனிதா! சிந்தித்து நடடா மனிதா
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்
முன்வரிதனை மனதில் வை
பின்வரிதனை செயலில் காட்டு
நேற்றைய வாழ்வு நாளைய பாடம்
புரிந்து நடடா மனிதா
பட்டறிவு வாழ்க்கைப் பாடமன்றோ மனிதா
பார்போற்றும் மாமனிதர் கற்றுத்தந்தார்
இதை மறவாதே மனிதா
எந்நாளும் இனிய நாளே மனிதா.



இராஜ அரியரத்தினத்தின் அழகுவின் கதையை தமிழுக்கு கொண்டுவந்த (“சேதுப்பாட்டி”) முயற்சிக்குப் பிறகு, அழகுவின் ஆங்கிலக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அடுத்த முக்கிய முயற்சியாக 1973ஆம் ஆண்டு மல்லிகை மார்ச் மாத இதழில் (அழகுவின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட இதழ்) அழகுவின் The Scholar என்ற ஆங்கிலக் கதை “பட்டதாரி மாணவன்” என்ற தலைப்பில் ராஜஸ்ரீகாந்தனால் மொழிபெயர்க்கப்பட்டது.
நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற் பயணம். அடிமனத்தில் முதல் பயணமாதலால் எப்படி பயணம் இருக்கும்? 
அறிமுகம்: எண்பதுகளின் ஈழத்துக்கவிதைச் சூழலும் சோலைக்கிளியின் வரவும்
வானதி பிறந்தது வசதியான குடும்பத்தில். ஆனால் அவளின் வாழ்க்கையின் உண்மையான வடிவம் கனடாவின் பனிக்காற்றில் தான் செதுக்கப்பட்டது. ஒழுங்கும் ஒத்திகையும் கலந்து கிடந்த வளர்ப்பு, அதன் நடுவே, கடின உழைப்பை தன் நெஞ்சின் துடிப்பாக மாற்றிக் கொண்டு, அவள் வைத்தியராக உயர்ந்தாள்.
மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர். இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது. அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.
தமிழை வளம் மிக்க மொழியாக உலகிற்கு உரைக்க அடித்தளம் இட்டவை சங்க இலக்கியங்களாகும். உலகமொழிகளில் நம் மொழியை இனங்காட்டுதற்கும் நம் பழந்தமிழரின் காதல், , வீரம், கொடை, ஈகை முதலான நற்பண்புகளை எடுத்தோதுவதற்கும் வழிகோலுவன சங்க இலக்கியங்கள். அத்தகு நெறியில் சங்க இலக்கியங்களில் உள்ள கலைச்சொற்களை இனம் கண்டால் வருகின்ற இளந்தலைமுறையினர் அதைப் பயன்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப உலகிற்கான முன்னுதாரணமாகவும் அவை அமையும். அந்த வகையில் ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள் குறித்து அறிந்து கொள்வதும் ஆய்வு செய்வதும் இங்கு தேவையாகிறது.





அது புதிய வண்ணத்துப்பூச்சி 


கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.

அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









