புதுமைப்பித்தனின் செல்லம்மாள்: எளிய மனித வாழ்வின் அங்கீகரிக்கப்படாத அவலத்தின் குறியீடு! - ஈழக்கவி -

([டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
அறிமுகம்: தமிழ்ச் சிறுகதையின் திருப்புமுனை
புதுமைப்பித்தன் நவீனத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியாகவும், புதிய சகாப்தத்தின் விடிவெள்ளியாகவும் கருதப்படுகிறார். அவரது படைப்புகள், தமிழ் இலக்கியத்தை அதுவரை ஆக்கிரமித்திருந்த சீர்திருத்தக் கருத்துகள், கற்பனைச் சோடனைகள், அல்லது எளிய அறவுரைகள் ஆகியவற்றிலிருந்து விலக்கி, யதார்த்தவாதத்தின் (Realism) கொடியை உயர்த்தின. 1930களில், அவர் கதைசொல்லி முறையில், மொழி நடையில், மற்றும் பாத்திர வார்ப்பில் ஒரு தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவந்தார்.
புதுமைப்பித்தனின் நவீன அணுகுமுறை என்பது, வாழ்வின் கசப்பான உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது, சாதாரண மனிதர்களின் சிக்கலான உளவியலை ஆழமாகப் பதிவு செய்வது, மற்றும் சமூக - பொருளாதார நெருக்கடிகளை எந்தவித சமரசமுமின்றிச் சித்திரிப்பது என்பதாகும். இந்தக் கூரிய பார்வைக்கு "செல்லம்மாள்" ஒரு சிறந்த உதாரணம். இச்சிறுகதை, வெறும் கதைசொல்லல் அல்ல; இது வறுமை, நோய், மற்றும் நகரத்தின் தனிமை ஆகியவற்றால் சிதைக்கப்பட்ட ஒரு வாழ்வின் அங்கீகரிக்கப்படாத துயரத்தின் குறியீடாக (Symbol) நிற்கிறது.
1. சுந்தர ராமசாமியின் கூற்று: துக்கத்தின் குறியீடும் உன்னதக் காதலும்
சுந்தர ராமசாமியின் கூற்று, இந்தக் கதையின் நவீனப் பரிமாணங்களை இரு தளங்களில் நிறுவுகிறது:
i. வாழ்க்கை சார்ந்த துக்கத்தின் குறியீடு (A Symbol of Life-related Sorrow): இது செல்லம்மாளின் தனிப்பட்ட துயரத்தைக் கடந்து, வறுமையில் வாடும் பொதுமனிதனின் வாழ்வியல் அவலத்தைப் பேசுகிறது. துக்கம் இங்குத் தத்துவார்த்தமானது.


தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.
நடைமுறை வாழ்வின் ஒவ்வொரு அடுக்குகளையும் நேர்மையுடன் பதிவு செய்பவை படைப்பிலக்கியங்கள். ஒரு படைப்பாளி எழுதும் போது உணரப்படும் விடயங்களாக உள்வாங்கல், நோக்கம், செயல், வெளிப்பாடு என்பன இருக்கின்றன. எதை எழுத வேண்டும் என்ற தீர்மானம் உறுதியான பின்னரே வார்த்தைகள் பிறக்கின்றன. பிரச்சனைகளோடும் பல கேள்விகளோடும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்கின்ற சமூகம் இது. அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை அனுபவிக்கும் துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்களை அடையாளம் காட்டுவதாகவே இந்த படைப்பிலக்கியங்கள் அமைகின்றன. அதனால் ஒவ்வொரு எழுத்தும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்துக்கானதாக மாறிக் கொள்கின்றன. அந்த வகையில் நேர்மையுடன் படைக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் வரவேற்கத்தக்கதே. 




எங்கள் முதல் நாள் பயணத்தின் முடிவில் ரீச்சவிக் அருகாமையில் ஒரு பண்ணையில் உள்ள சிறிய மரத்தால் ஆன கபின்(Cabin) எனப்படும் இடத்தில் தங்கியிருந்தோம். இங்கு மிகவும் சிறிதான ஒரு படுக்கை வைத்திருக்கக் கூடிய இடமும் திரும்பி உடலில் சவர்க்காரம் போடமுடியாத குளியலறையும் உள்ளது. இதுவரை காலத்தில் நான் இப்படி ஒரு இடத்தில் இராத் தங்கவில்லை. ஆனால் வெந்நீரும் ஹீட்டர் இருந்ததே போதுமாக இருந்தது .. தலைநகரிலும் மற்றும் ஒரு சில இடங்களைத் தவிர ஐஸ்லாந்தில் பெரும்பாலான தங்குமிடங்கள் இப்படியே. இவை வாடகை அதிகமில்லை என்பதால் அமரிக்கா ஐரோப்பாவிலிருந்து ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் இங்கு விடுமுறைக்கு வருகிறார்கள். நகரங்களில் உள்ள விடுதிகள் மிகவும் விலை கேட்டால் உடலில் மயிர்கூச்சம் ஏற்படும்.


” அதிகாரத்திற்கு எதிரான குரலாக இலக்கியச் செயல்பாடுகள் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது . உயர்ந்த விழுமியம், லட்சியம் கொண்டவை இலக்கியப் படைப்புகள். லட்சியவாதம்கொண்ட படைப்புகள் வாழ்க்கையை உயர்த்தும். அவ்வகைப்படைப்புகளை வாசகர்கள் படைக்க வேண்டும்.எழுத்தாளர்கள் எழுத வேண்டும்”

[ 2013இல் ,திருச்சி தேசியக் கல்லூரியில், கனடிய எழுத்துக்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. ‘கனடா: பல இடங்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் இந்திய கனடிய ஆய்வுகள் சங்கம் இந்த மாநாட்டை நடத்தியது. வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த பின்வரும் ஆங்கிலக் கட்டுரை , Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan, முனைவர் ஆர். தாரணியால் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தமிழாக்கம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலக் கட்டுரை இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது]



மகாஜனக்கல்லூரியில் புதிய மாணவர்களில் ஒருவனாக நானும் அன்று இருந்தேன். இதுவரை காலமும் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றதால், புதிய பாடசாலையான மகாஜனக்கல்லூரி எனக்குள் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீதிவழியாகக் காங்கேசந்துறையில் இருந்து எனது தாயாரின் ஊரான சண்டிலிப்பாய்க்குத் துவிச்சக்கர வண்டியில் போகும் போது மகாஜனாவின் கட்டிட அமைப்பே என்னை முதலில் பிரமிக்க வைத்திருந்தது. இன்று அந்தப் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவனாக உள்ளே நுழைந்தபோது அதே பிரமிப்பில் மூழ்கிப் போயிருந்தேன். எனது அத்தான் அக்காவின் கணவர் பொ.கனகசபாபதி அவர்கள் மகாஜனாவில் அப்போது ஆசிரியராக இருந்ததால், எனது அக்காவின் விருப்பப்படி நானும் மகாஜனாவில் மாணவனாக இணைந்து கொண்டேன்.
ஓர் ஊர் அல்லது ஒரு தலம் அமைந்த இடம், அல்லது ஒரு தலம் குறித்த அதிகளவிலான இடப்பெயர் ஆராய்ச்சி, பல்வேறு நோக்குகளில் நடைபெற்றிருக்கும் எனில், அது ‘கதிர்காமம்’ என்பதற்கே என்பதை, இடப்பெயர் ஆய்வு பற்றிய ஈழத்து எழுத்துக்களை வாசித்தோர் நன்கு உணர்வர். ஈழத்தில், பல்லின பல்சமயச் சங்கமிப்பு நிகழும் இடங்களில், கதிர்காமம் முதன்மையானது. அதனால், அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில், அச்சொல் குறித்த அர்த்தப்படுத்தலும் அது குறித்த அவதானிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்பொருண்மை குறித்த அறிமுகக் கட்டுரையாகவே இது அமைகிறது. ஆகையால், ‘கதிர்காமம்’ என்பதன் இடப்பெயர் அர்த்தம் குறித்;து மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றின் நிலைநின்று, சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயலுகிறது.


இன்று, காசாவின் இருளில் 



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









