'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து மூன்றாம் வயதில் பாரதி' பற்றி..- வ.ந.கிரிதரன் -

- எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் பற்றிய , கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை.-
பகுதி ஒன்று
தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை. அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை. குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும். சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும். இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.
அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' 23ஆம் வயதில் பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.


காஷ்மீர் பயணத்தைத் தொடங்கும் முன், நாங்கள் மிகப் பல முறை யோசித்தோம். பயண முகவரிடம் எங்களுடைய சந்தேகங்களை வெளிப்படுத்தினோம். அவர் கூறிய பதில் நமக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது:
தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.











ஊரின் வாசம்


ஏனைய இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது சிறுகதைக்கு வீரியம் அதிகம்; குறைந்த பக்க எண்ணிக்கைக்குள் ஆழமான மனப் பதிவை ஏற்படுத்தக்கூடியது. ஒரு கதையைப் படிக்கும்முன் இருந்த மனநிலையிலிருந்து அக்கதையைப் படித்து முடித்தப்பின் வேறொரு மனநிலைக்கு மாற்றக்க்கூடியது; கதைக்கும் வாசகனுக்கும் இடையே சொல்லால் சொல்லப்படாத இடைவெளியை விட்டு அவனோடு உறவாடிக்கொண்டே இருப்பது; அமைதியாய் இருக்கும் வாசகனின் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்வது; கிளர்ந்து கிடக்கும் வாசகனின் சிந்தனையை அமைதியுறச் செய்வது. இவ்வாறாக படைக்கப்படும் சிறுகதை பொழுதுபோக்கு அம்சம் குன்றியும் பொதுபுத்தியில் ஊறிக்கிடக்கும் ஒரு சிந்தனைக்கு மாற்றாக இன்னொரு சிந்தனையை விதைக்கும் தன்மை கொண்டது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









