சென்னை 29வது 'சமூக நீதி' திரைப்பட விழாவில்... - சுப்ரபாரதி மணியன் -

இந்தத் திரைப்பட விழாவில் துவக்க விழா படமாக ஃபர்ஸ்ட் ஃபிலிம் என்ற படம் திரையிடப்பட்டது . இந்த படம் சென்ற மாதம் திருப்பூர் டாப் நூலகத்தில் நடந்த பெண்கள் தினத்திரைப்பட விழாவில் முதல் படமாக திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது..
29ஆவது சமூக நீதி திரைப்பட விழா சென்னையில் பெரியார் திடல் அன்னையின் மணியம்மையார் திடலில் அரங்கில் 15/4/26 அன்று ஆரம்பித்தது. ஐந்து நாட்கள் இந்த சமூக நீதி திரைப்பட விழா நடக்கின்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த விழாவை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் துவக்கி வைத்தார் .மறுபக்கம் அமைப்பின் செயல் பாடுகள் கடந்த முப்பது ஆண்டுகளாக மாற்று கலாச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருப்பதைக் குறிப்பிட்டார். இயக்குனர் ஆர்பி அமுதன் அவர்கள் வரவேற்று பேசினார். 'இந்த திரைப்பட விழாவில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகின்றன. அதுவும் கணிசமாக தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படம் மற்றும் குறும்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது. முதன் முயற்சியாக திரைப்படங்களை எடுத்து இருப்பவர்களின் படங்களும் நிறைய இடம்பெறுகின்றன அவர்களை முதன்மைப்படுத்தும் விதமாக இதில் திரைப்படங்கள் திரையிடல் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் சமூக நீதி சார்ந்த பிரச்சினைகளும் மனித உரிமை கேள்விகளும் நிறைய எழுபப்பட்டு வரும் நிலையில் அதற்கான களங்கள் குறும்பட ஆவணப்படங்களில் இடம் பெற்று இருக்கின்றன என்பது ஆரோக்கியமாகப்படுகிறது .இந்த திரைப்பட விழாவில் சமூக நீதி கூறும் மனிதர்கள் அவர்கள் நடவடிக்கைகள் அவர்கள் சார்ந்த தருணங்கள் கொண்ட படங்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன' என்று குறிப்பிட்டார்.
நேற்று முதல் படமாக 'தி ஃபர்ஸ்ட் ஃபிலிம்' என்ற படம் இடம்பெற்றது. இந்தப் படத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சூழலில் ஒரு பெண் ஒரு திரைப்படம் பார்ப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எவ்வளவு சிரமமாக இருந்தன, அது அவர்களின் விடுதலையின் ஒரு படியாக எப்படி இருந்தது என்பதை அந்த படம் விளக்கியது. 'தீண்டாத வசந்தம்' போன்ற படங்கள் இந்தியாவில் நடந்து வரும் ஆவண கொலைகள் பற்றிய மையமாக இருந்தது. 'மறையாத நிழல்' என்ற பாரு பெண்மணியின் படம் பாலியல் தொந்தரவு சார்ந்த ஒரு பெண்ணின் நிகழ்வு வாழ்க்கை முழுவதும் தொடர்வது பற்றி இருந்தது. மற்றும் விளிம்பு நிலை சார்ந்த மக்கள் பற்றிய படங்களும் மொழி சிறுபான்மையினர் பற்றிய படங்களும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன.


உடற்கூற்று அரசியலும் அண்டவியல் சிதைவும் (Anatomy of Violence & Cosmic Rupture) என்ற பகுதிக்குள் நுழைகிறோம். இதில் கவிஞர் சோலைக்கிளியின் 'எனது தாய்ப்பால்', 'நவீன இலங்காபுரி', 'இறகு உதிர்ந்த கிராமம்' ஆகிய மூன்று முக்கிய கவிதைகளை முன்வைத்து, வன்முறை என்பது மனித உடலைத் தாண்டி, பிரபஞ்சக் கூறுகளையும் இயற்கையையும் எவ்வாறு சிதைக்கிறது என்பதை 'உடலரசியல்' (Biopolitics) மற்றும் 'அண்டவியல் சிதைவுக் கோட்பாடு' (Cosmic Rupture) ஊடாக விரிவாக ஆராய்வோம்.
ஈரானிய போரும் ஹோமூஸ் நீரிணையும் ஓர் இடியாப்ப சிக்கலாய் நீளுவதாய் உள்ளன. பரஸ்பர தாக்குதல்களும், பரஸ்பர மறுப்புகளும் இப்போரின் உறுத்தும் முக்கிய அம்சங்களாகின்றன. கண்ணுக்கு புலப்படாத, அதி நவீன விமானம் என்று பெயர் பெற்ற கு-35 விமானமும், மூன்று நாசகாரி கப்பல்களும் தாக்கப்பட்டு விட்டதாய் ஈரான் கூறினாலும் அமெரிக்கா அதனை உடனடியாக மறுப்பது வழமையாகின்றது. உண்மையில், அப்படி எந்த ஒரு கப்பலும் தாக்கப்படவில்லை. நாங்களாகவேதான் நீரிணையினையிலிருந்து அவற்றை அப்புறப்படுத்தி விட்டோம் என்று அமெரிக்கா எடுத்துரைப்பதையும் உலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது. போதாதற்கு, இப்போரின் நிலவரங்கள் இப்போது, நாளுக்கு நாள், மணிக்கு மணி, செக்கனுக்கு செக்கன் மாறி கொண்டே இருப்பது இன்னும் ஒரு விசேட அம்சமாகிறது.


இராஜ அரியரத்தினத்தின் அழகுவின் கதையை தமிழுக்கு கொண்டுவந்த (“சேதுப்பாட்டி”) முயற்சிக்குப் பிறகு, அழகுவின் ஆங்கிலக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அடுத்த முக்கிய முயற்சியாக 1973ஆம் ஆண்டு மல்லிகை மார்ச் மாத இதழில் (அழகுவின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட இதழ்) அழகுவின் The Scholar என்ற ஆங்கிலக் கதை “பட்டதாரி மாணவன்” என்ற தலைப்பில் ராஜஸ்ரீகாந்தனால் மொழிபெயர்க்கப்பட்டது.
நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற் பயணம். அடிமனத்தில் முதல் பயணமாதலால் எப்படி பயணம் இருக்கும்? 
வானதி பிறந்தது வசதியான குடும்பத்தில். ஆனால் அவளின் வாழ்க்கையின் உண்மையான வடிவம் கனடாவின் பனிக்காற்றில் தான் செதுக்கப்பட்டது. ஒழுங்கும் ஒத்திகையும் கலந்து கிடந்த வளர்ப்பு, அதன் நடுவே, கடின உழைப்பை தன் நெஞ்சின் துடிப்பாக மாற்றிக் கொண்டு, அவள் வைத்தியராக உயர்ந்தாள்.
மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர். இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது. அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.
தமிழை வளம் மிக்க மொழியாக உலகிற்கு உரைக்க அடித்தளம் இட்டவை சங்க இலக்கியங்களாகும். உலகமொழிகளில் நம் மொழியை இனங்காட்டுதற்கும் நம் பழந்தமிழரின் காதல், , வீரம், கொடை, ஈகை முதலான நற்பண்புகளை எடுத்தோதுவதற்கும் வழிகோலுவன சங்க இலக்கியங்கள். அத்தகு நெறியில் சங்க இலக்கியங்களில் உள்ள கலைச்சொற்களை இனம் கண்டால் வருகின்ற இளந்தலைமுறையினர் அதைப் பயன்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப உலகிற்கான முன்னுதாரணமாகவும் அவை அமையும். அந்த வகையில் ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள் குறித்து அறிந்து கொள்வதும் ஆய்வு செய்வதும் இங்கு தேவையாகிறது.





அது புதிய வண்ணத்துப்பூச்சி 


கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









