பதிவுகள் முகப்பு

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 2 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
10 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - செயற்கைத் தொழில் நுட்பம்.

உக்ரைனின் தேர்வு:

தனது சொந்தத் தலையிடிகளால், பெரிதும் அவஸ்தைப்பட்டுப்போன அமெரிக்கா, தன் வெளிநாட்டுக் கொள்கையுடன் உள்நாட்டுக் கொள்கையையும் உடனடியாக மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியது. முக்கியமாக, அது தான் எதிர்ப்பார்த்த போர்முடிவை உக்ரைனில் காணக்கிட்டாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

1963இல், தான் மூடிய தனது கொடூர சிறைகளில் ஒன்றான ALCARTANZNI யை, ட்ரம்ப் மீள திறந்து வைத்து உரையாற்றினார் (05.05.2025). ஆயிரம் காரணங்களை அவர் தேர்ந்து அடுக்கினாலும், அமெரிக்க எழுச்சிகளை கட்டுப்படுத்த மேற்படி திறப்பு விழா தேவையானதுதான் என நிபுணர்கள் கூறுவதாய் உள்ளது. அதாவது, “சுதந்திர அமெரிக்கா” என்ற கனவு எப்போதோ செத்துத்தொலைய, இன்று கை-கால் விலங்குகளுடன், இந்திய மாணவர்கள் 24 மணி நேரத்தில், விமானமேற்றி அனுப்பி வைப்பது அமெரிக்க தர்மமானது. ஆனால், 10 வருடங்களின் முன்னரேயே, உக்ரைனானது இவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் விதி தீர்மானிக்கப்படுகின்றது (2014). (அதாவது, 2009இன் முள்ளிவாய்க்கால் தீர்மானிக்கப்பட்டது போல).

2019இல் வெளியிடப்பட்ட RAND COPERATION அறிக்கையின் பிரகாரம் உக்ரைனை மேலும் ராணுவ ரீதியில் பலப்படுத்துவதும் அதற்காக மேலும் ஆயுதங்களை அதற்கு அனுப்பி வைப்பதும் முக்கியமானது என்று கூறப்பட்டது (அதாவது 2019லேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்படுகின்றது). எனவேதான், நச்சுக் கிருமிகளை உலகம் முழுவதும் பரப்பிப் தள்ளும் பயோ லெப்களை (BIO LABS) உருவாக்கி, கோவிட் போன்ற ஆட்கொல்லி தொற்றுக்களை உருவாக்க தேவையான லெப்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை மேற்கானது, ஆதியோடு அந்தமாக மறுத்திருந்த போதிலும் கென்னடி (ஜுனியர்- 2024 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர்) இது உண்மை என்றும் BIO LABSகள் உக்ரைனில், அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்டன என்பதில் உண்மையுண்டு எனவும் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, உக்ரைனின் அரசியல் அமைப்பினை மாற்றுவதும், தனக்குத் தோதான ஓர் அரசை அங்கு நிறுவுவதும், பெருந்தேசியவாதமான நாசிசத்தை அங்கே வேரூன்றச் செய்வதும் அடிப்படைகளாகின்றன.

மேலும் படிக்க ...

கவிஞர் அம்பியின் பேத்தி அஷ்வினி அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு தெரிவு ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
09 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்தின் மூத்த கவிஞரும், பாப்புவா நியுகினி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னியில் மறைந்தவருமான அம்பி அவர்களின் செல்லப்பேத்தி அஷ்வினி சிவக்குமரன் அம்பிகைபாகர் , கடந்த மே 03 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் சிட்னி Barton தொகுதியில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். எமது மனமார்ந்த வாழ்த்துக்களை அஷ்வினி அம்பிகைபாகருக்கு தெரிவிக்கின்றோம்.

அஷ்வினியை குழந்தைப் பராயத்திலிருந்தே நன்கு அறிவேன்.

சிட்னியிலும், மெல்பனிலும் நடைபெற்ற கவிஞர் அம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும், அஷ்வினி, கடந்த 2024 ஆம் ஆண்டு, சிட்னியில் தமது அபிமானத்திற்குரிய தாத்தா அம்பி அவர்களின் இறுதி நிகழ்விலும் உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

அஷ்வினி, கவிஞர் அம்பியின் மூத்த புதல்வி மருத்துவர் உமாதேவி – பொறியியலாளர் சிவகுமாரன் தம்பதியரின் மூத்த புதல்வியாவார். சிட்னியில் ஹார்ட்ஸ்வில் பிரதேசத்தில் நீண்ட காலம் வசித்த அஷ்வினி, இங்கு தனது ஆரம்பக்கல்வியையும் உயர்தரக்கல்வியையும் பயின்றார். சிட்னி பல்கலைக்கழகத்தில், விஞ்ஞானத் துறையிலும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பயின்று பட்டம் பெற்றார்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு - சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.

விவரங்கள்
- சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.
ஆய்வு
09 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி - 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. -

ஆய்வுச்சுருக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.

திறவுச் சொற்கள்:- குரு அரவிந்தன், புல்லுக்கு இறைத்த நீர், பனிச்சறுக்கல், நங்கூரி, உறவுகள்

தொடர்கதை.

அறிமுகம்

குரு அரவிந்தன் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், புலம்பெயர் தேசமாகிய கனடாவில் வசிப்பவருமாகிய கணக்காளர், ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் படைப்பிலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாவார். ஆழ்ந்த புலமைப் பின்புலம் கொண்ட மகாஜனாக் கல்லூரியின் அறிவேற்றமும், ஆழ்ந்த புலமையும், ஆழ்ந்த வாசிப்பும் இவரின் ஆக்கங்களின் வேர்களோடு தொடர்புபட்டுள்ளன. எட்டுச் சிறுகதைத் தொகுப்புக்கள், ஏழு நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், சினிமாக் கதை, வசனம், சிறுவர் இலக்கியம், நாடகங்கள் என்ற பன்முகத்தளங்களில் கால்பதித்து நிற்கும் அவரது ஆளுமையின் உறுபண்பு (trait ) அறிவு நிலையிலும், ஆக்க நிலையிலும் அவர் மேற்கொண்ட செறிவான ஊடாட்டங்களின் வெளிப்படுத்துகையாயின. சர்வதேச தமிழர் மட்டத்தில் இவரது வாசகர் வட்டம் மிகப்பெரிய அளவில் பரிணாமம் அடைந்து கொண்டிருப்பதற்கு இவரின் கனதியான இலக்கியப் பங்களிப்பே காரணமாகின்றது.

மேலும் படிக்க ...

பயனுள்ள மருத்துவக் காணொளிகள் இரண்டு: இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமியுடனான (Dr. S Ramasamy) ஒரு நேர்காணல் மற்றும் Dr. Pradip Jamnadas, MD இன் காணொளி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நலந்தானா? நலந்தானா?
08 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இக்காணொளிகளை அண்மையில் பார்த்தேன். இவற்றில் ஒன்றில்  இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமி அவர்கள் மாரடைப்பு, அதற்கான சிகிச்சை முறைகளான 'ஆஞ்சியோ பிளாஸ்டி', 'ஸ்டென்ட்',  'பைபாஸ்' சத்திர சிகிச்சை , இரத்த அடைப்புகள் & அவற்றால் உருவாகும் இரத்தக் கட்டிகள் போன்றவற்றைப்பற்றித் தெளிவான விளக்கங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். இருதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றுக்கான மருத்துவர்களின் ஆலோசனைகளை எவ்விதம் அணுக வேண்டும் என்பது பற்றிய அவரது கருத்துகளும் முக்கியமானவை.  இப் பதிவு  என் ஆலோசனை அல்ல. தகவலைப் பகிர்ந்து கொள்ளல் மட்டுமே. அவ்வப்போது என் கருத்துகளையும் கூறியிருக்கின்றேன். அவை மருத்துவ ஆலோசனைகள் அல்ல. என் கருத்துகள் மட்டுமே.

மேலும் படிக்க ...

வானம் சிவக்கப் பாடிய கவிஞன் புதுவை இரத்தினதுரை நினைவலைகள்! - வி. ரி. இளங்கோவன் -

விவரங்கள்
- வி. ரி. இளங்கோவன் -
இலக்கியம்
07 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈழத்திலும் எம்மவர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை. இவர் எழுதிய எழுச்சிப் பாடல்கள் உலகெங்கும் எம்மவர் பலரது வீடுகளிலும் விரும்பிக் கேட்கப்பட்டன. அன்று எழுபதுகளில் இவர் எழுதிய புரட்சிகரக் கவிதைகள் பேராசிரியர் கைலாசபதி முதல் மூத்த எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன்,  கே. டானியல்இ சில்லையூர் செல்வராசன்,  டொமினிக் ஜீவா உட்படப் பலரையும் கவர்ந்தது.

அவரது சிறிய தந்தையார் கந்தசாமி இலங்கையில் சிறந்த சிற்பாசாரியார். அவரது வீடும் சிற்பாலயமும் திருநெல்வேலி காளி கோவில் முன்பாக இருந்தது. சிற்பாசாரியார் கந்தசாமி அன்று மொஸ்கோ சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். சிறிய தந்தையாரின் சிற்பாலயத்தில் இரத்தினதுரையும் சேர்ந்து பணியாற்றி வந்தார். நாட்டில் பல கோவில்களுக்கான சித்திரத் தேர்களைச் செய்யும் வேலைகளை அவர்கள் மேற்கொண்டார்கள்.

இரத்தினதுரை புத்தூர் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வரதலிங்கம் - பாக்கியம் தம்பதிகளின் மகனாக 1948 -ம் ஆண்டு மார்கழி மாதம் 3ஆம் திகதி  பிறந்தவர். 1972 -ம் ஆண்டு முதல் சில வருடங்கள் யான் அவருடன் நெருங்கிப் பழகியுள்ளேன். கே. டானியலின் தொழிலகத்தில்தான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டோம். அன்றுதொட்டு நெருங்கிய தோழர்களானோம். 1973 - 1974 காலப்பகுதியில் சில மாதங்கள் இரத்தினதுரை எனது ஊரான புங்குடுதீவில் தங்கியிருந்தார். புங்குடுதீவு கிழக்குக் கலட்டிப் பிள்ளையார் கோவில் தேர் வேலையில் அவர் ஈடுபட்டிருந்தார்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 49 - “நூல்களைப் பேசுவோம்”

விவரங்கள்
- தகவல்: அகில் -
நிகழ்வுகள்
06 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
05 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



* ஓவியம் - AI

நான் நினைவில் வைத்திருப்பது இன்றுள்ள
குருமணகாடு அல்ல.
அது ஒரு கனவுலகம் போல்தான்
இப்போது தோன்றுகின்றது.
உண்மையில் அது இருந்ததா என்றும்
சில வேளைகளில் நான் ஐயுறுகின்றேன்.
ஆனால் அவ்விதமான சந்தேகங்களுக்கான
தேவை இல்லையென்பதையும் கூடவே
நான் உணர்கின்றேன்.
அது இருந்ததா அல்லது இருக்கவில்லையா
என்பது எனக்கு முக்கியமல்ல.
அது பற்றிய நினைவுகள் இன்றும்
என் உணர்வுகளில் விரவிக்கிடக்கின்றன.
அவை முக்கியமானவை.
மாபெரும் டைனோசர்கள் ஒரு காலத்தில்
இப்புவியுலகை ஆட்சி செய்தன அல்லவா.
அவற்றை நாம் பார்த்ததில்லை.
பார்க்கப்போவதுமில்லை அல்லவா.
ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்
இம்மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
என் நினைவுத் தடங்களில் குருமண்காடும்
புதைந்துதான் கிடக்கின்றது.
அத்தடங்களிலிருந்து அவ்வப்போது அது
உயிர் பெறுகிறது. அவ்வளவுதான்.
அது போதுமெனக்கு.

மேலும் படிக்க ...

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
05 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

உக்ரைன்-ரஷ்ய மோதலானது, உலகின் முகத்தைத் தீவிரமாக மாற்றியமைப்பதில் வெற்றிகண்டுள்ளது எனச் சிலர் கருதுவர். இன்னும் சிலர் இதனை ஒரு நிரந்தர மாற்றம் எனவும் வாதிப்பர். மேலும் சிலர் இது Uni Polar World என்பதிலிருந்து Multi Polar World என்ற உலகை நோக்கிய ஒரு பயணம் எனவும் விவரிப்பர்.

இது, சுவாரஸ்யமானது.

கிஷோர்-மஹுபானியும் (Kishore-Mahoubani) “அமெரிக்கா தனது இலக்கைச் சரியாகத் தேறாமல் தொடுத்துவிட்ட முட்டாள்தனமான போர் இது” என விசனிப்பர்.

ஹென்றி கிசிஞ்சரைத் துணைக்கு அழைத்து, அவர் மேலும் கூறுவதாவது: “அது ஒரு நீண்ட நண்பகல் உணவு. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம். மீட்டுப் பார்க்கும்போது அவர் கூறியதின் மொத்தச் சாரமும், அமெரிக்காவானது தனது இலக்கைச் சரியாக நிர்ணயிக்காமல் போரில் இறங்கி விட்டது என்பதேயாகும்”.

கிசிஞ்சர், ஆரம்பத்தில் மாத்திரம் உக்ரைன் போருக்கு எதிராக இருந்தவர் என்பது தெரிந்ததே.

மீன் தனது இரையைக் கவ்விக்கொள்ள தன் வாயைத் திறந்து, ஈற்றில் ஒரு திமிங்கலத்தையே விழுங்க எத்தனித்தக் கதைதான் இது.

வியட்நாம் யுத்தத்தின்போது, அதனை முழுமையாகப் பார்த்து, அதனை முடிவுக்குக் கொண்டுவருவதே, அமெரிக்க நலன்களுக்குப் பாதிப்பில்லாதது எனக் கிசிஞ்சர் முடிவு செய்கின்றார்.

மேலும் படிக்க ...

சிந்தனைக்களம்- ‘இசையும் கற்பனையும்’

விவரங்கள்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
05 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 841 8955 5886 | Passcode: 736093



Time: May 17, 2025 09:00 AM Eastern Time (US and Canada)

Join Zoom Meeting | Meeting ID: 841 8955 5886 | Passcode: 736093

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - "இந்தியத் தத்துவ இயலில் திருக்குறளின் வகிபாகம்"

விவரங்கள்
- ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் -
நிகழ்வுகள்
05 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

வாசிப்புப் பகிர்வு: Homecoming ஊர் திரும்பல்! - தகவல் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- தகவல்; ஶ்ரீரஞ்சனி -
நிகழ்வுகள்
05 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விருந்து : சமூக மதிப்பும் மாற்றமும்! - முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை. -

விவரங்கள்
- முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை. -
ஆய்வு
02 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

விருந்து என்பது தமிழர்களுக்கானத் தனிப்பெரும் பண்புகளுள் ஒன்று. நாடோடியாக வாழ்ந்த மனிதன் கூடி வாழத் தொடங்கியது நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். கூடி வாழும் குணம் என்பது இயற்கை. அது பறவைகளிடமும் விலங்குகளிடமும் இருக்கிறது. இதுவே மனிதர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கலாம். அவ்வாறான பறவைகள், விலங்குகளிடமிருந்து மனிதர்கள் நிலையான கூட்டு வாழ்க்கை வாழ்வதால் வேறுபட்டு இருக்கின்றனர். இதில் அவர்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றையும் உறுதிச் செய்ய வேண்டிய நெருக்கடி நிலை நேர்ந்த போது ஒருவருக்கொருவர் உதவியும் விட்டுக் கொடுத்தும் வாழத் தொடங்கினர். அதிலும் முக்கியமாக, உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டனர். அதுமுதல் பகிர்ந்து உண்ணும் பழக்கம் தோன்றியது. பகிர்ந்து உண்ணுதல் என்பதே மனிதகுல நாகரிகத்தின் முதற்படி. தமிழ் இலக்கியங்கள் இதனை விருந்து என்ற சொல்லால் குறிக்கின்றன. தமிழர் நாகரிக வளர்ச்சியில் அவ்வாறான விருந்தின் வகிபாகம் குறித்துத் தமிழ் இலக்கியத் தரவுகளின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

மேலும் படிக்க ...

பேராசிரியர் சி.மெளனகுருவின் கடிதம்.....

விவரங்கள்
- பேராசிரியர் சி.மெளனகுரு -
இலக்கியம்
02 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- பீஷ்மப் பிரதிக்ஞை என்னும் ஓரங்க நாடகம் பற்றிப் பதிவுகளில் வெளியான நிகழ்வுக் குறிப்பையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு  எழுதிய எதிர்வினையிது. -  பதிவுகள்.-


மிகவும் நன்றி கிரிதரன், பீஷ்மப் பிரதிக்ஞை வெறுமனே ஓர் ஓரங்க நாடகம் மாத்திரம் அன்று. "பாத்திர உருவாக்கம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற ஒரு செயல் முறை அரங்க நிகழ்வுக்காக மேடை இடப்பட்ட நாடகம். இதிலே பீஷ்மர் என்னும் பாத்திரத்தை

1.டெல் சார்ட் நடிப்பு முறை
2. ஸரனிஸ்லவ்ஸ்கியின் மெதட் நடிப்பு முறை
3. மேயர் ஹோல்டின் உடற்பொறிமுறை நடிப்பு முறை
4.பிரக்டின் தொலைப் படுத்தல் நடிப்பு முறை
5. கூத்து நடிப்பு முறை
6. பரத நடிப்பு முறை
 
ஆகியவற்றைக் குழைத்து உருவாக்க முயன்றோம்.
மேலும் படிக்க ...

பீஸ்மப் பிரதிக்ஞை ஓரங்க நாடகம்! - மு.இளையராஜா -

விவரங்கள்
- மு.இளையராஜா -
நிகழ்வுகள்
01 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                         - பீஷ்மராகப் பேராசிரியர் சி.மெளனகுரு -

27.04.2025 அன்று, கொழும்பு தமிழ் சங்கம் நடாத்திய அரங்கியல் கருத்தரங்கில் "பீஷ்ம பிரதிஞ்ஞை என்ற ஓரங்க நாடகத்தில் அயூரனின் வேண்டுகோளுக்கு இணங்க பீஷ்மர் பாத்திரத்தை ஏற்றிருந்தார் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள். இதற்கான எழுத்து பிரதியையும் இவரே வழங்கியிருந்தார்.

நடிப்பின் மீதும் மாணவர்களின் மீதும் உள்ள பற்றுதல் காரணமாக, வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க பேராசிரியர் மௌனகுரு அவர்கள், மேடையேறி, மற்றவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இப்படி முன்னுதாரணமாய் பாத்திரமேற்று நடிப்பது உற்சாகமளிக்க கூடிய விடயமாகும்.

மேலும் இவரது இத்தகைய பங்களிப்புகள் தமிழ் நாடக உலகுக்கு ஒரு வரப்பிரசாதமாகின்றது. இதனால் பயன்பெற போவது தமிழ் இலக்கிய நாடக உலகமே என்றால் மிகையாகாது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Plantation Teachers Forum Srilanka




பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
30 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கவிஞர் பாரதிதாசன் பிறந்த  தினன் ஏப்ரில் 29!

பாரதி வந்தார் பற்பல பாடினார்
பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
கன்னித் தமிழின் காவலன் ஆனார்

பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார்
நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
நாடே அவரின் உயிராய் இருந்தது

பாரதி காலம் கவிமணி இருந்தார்
நாமக் கல்லின் நற்கவி இருந்தார்
எட்டய புரத்து பாரதி மூச்சை
சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

நாமக் கல்லார் நற்கவி ஆவார்
கவிமணி தமிழின் கற்கண் டாவார்
பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
அதுவே அவரின் ஆசியே ஆகும்

மேலும் படிக்க ...

உடைபடும் இணைய முகமூடிகள்! - ஜி.ஏ. கௌதம் (சென்னை) -

விவரங்கள்
- ஜி.ஏ. கௌதம் (சென்னை) -
சமூகம்
30 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

முன்பு வாரத்திற்கு ஒரு தலைப்பு வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போதெல்லாம் வாரத்துக்கு குறைந்தது நான்கைந்து தலைப்புகள் Trendingஇல் இடம்பெற்று ஆகிவிடுகின்றன. நீங்கள் செய்யும் எப்பேர்பட்ட தவறும் மிக விரைவில் மறக்கடிகப்படும், அல்லது வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக ஓரங்கட்டப்படும் என்பது எத்தனை ஆபத்தான ஒன்று. அப்படி நீங்கள் எத்தனை மோசமான ஒரு வழக்கில் சிக்கினாலும், நீங்கள் மிக விரைவில் மக்களால் மறக்கப்படுவிர்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஓவியாவின் வீடியோவும், அதில் கமெண்ட் அடித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதில்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக சில நாட்கள் இருந்தது. அதையே மறந்துபோகும் அளவுக்கு A2D என்ற சானல் வைத்திருக்கும் நந்தா அதன் பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தார். அதன் பிறகு தொடர்ந்த அடுத்தடுத்த வைரல் செய்திகளால் அப்படி ஒரு நிகழ்வே நடந்தது போன்ற தடையம் இப்போது இல்லை என்றாகிவிடுகிறது.

அலைபேசிகள், கணினியின் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருக்கும் பிரச்சனைகள், புதிதாக வெளியாகும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து காணொளிகளை YouTube சானலில் வெளியிடும் நந்தக்குமார் எனும் ’PC Doc நந்தா’ சமூக ஊடகங்களில் மிகப்பிரபலம். கடினமான தொழில்நுட்ப விளக்கங்களையும் கூட வடிவேலு, மதுரை முத்து போன்ற காமெடி நடிகர்களின் காணொளிகளைக்கொண்டு நகைச்சுவையாக எளிய மனிதர்களுக்கும் புரியும் அளவுக்கு பாடமெடுக்க அவரால் முடிகிறது. திரைக்குப்பின் அவருக்காக வேலை செய்ய ஒரு தனி படையே இருக்கிறது.

விருவிருப்பான படத்தொகுப்பு, குழந்தை முகத்துடன் சிரிப்பு, தொழில்நுட்பம் குறித்த updates விரல்நுனியில் வைத்திருக்கும் நந்தாவின் YouTube சானலை, 1.90+ மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதன் விளைவு, தனது திரைப்படம் வெளியாகும் பட்சத்தில், படத்திற்கான விளம்பரத்திற்கு விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நிறைய திரைப்பிரபலங்கள் நந்தாவின் சானலுக்கு படையெடுக்க துவங்கினார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி கேட்கும் ரசிகர்கள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர், பல யூடியூபர்களுக்கும் பிரபலங்களுக்கும் கணினியை தயார்செய்து கொடுக்கும் தொழில்நேர்த்தி என இவரது ஏறுமுகம் எந்த சறுக்கலும் இன்றி உயர்ந்து கொண்டிருந்தது. ஜேசன் சாமுவேல் (Jason Samuel) என்ற Youtuber காணொளி வெளியிடும் வரை. ஜேசன் சாமுவேல் நந்தாவைப்பற்றி சாட்சிகளுடன் வெளியிட்டிருக்கும் 25 நிமிட காணொளி, கையும் களவுமாக நந்தாவை சமூக ஊடகங்களின் முன்னே நிற்க வைத்தது.

மேலும் படிக்க ...

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி - 3 2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம் - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
30 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                    - எழுத்தாளர் குரு அரவிந்தன் -

இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற் றினார்கள். இவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

மேலும் படிக்க ...

டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (1) : கார்க்கி - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
29 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                            - டால்ஸ்டாயும் மாக்சிம் கார்க்கியும் -

1

இருபதாவது முறை, வாசிக்கும் போதே, இச் சிறியவரிகளில் மறைந்து கிடக்கும் எண்ணங்களை ஓரளவில் புரியக் கூடியதாக இருந்தது. இத்தனை இரத்தினச் சுருக்கமாகக் கூறுதல் என்பது கடினம். ‘கடுகைத் துளைத்து’ எனச் சொல்வதுபோல், கிட்டத்தட்ட, இங்கேயும் அதே பண்பலைதான் காணகிட்டுகின்றன. ஆனால், இது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இயங்குவதாய் இருக்கின்றது.

இறைவன் பொறுத்த டால்ஸ்டாயின் அபிப்ராயங்கள் விசித்திரமானவை. தொளதொளவென்ற தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து, பின், ஒரு டயரியின் நைந்த பகுதியை எடுத்து, கார்க்கியிடம் தந்துவிட்டு: “இறைவன்… அதுவே எனது… ஆர்வம்…” என்று வரையறுக்கும் இந்த மனிதரின் வார்த்தைகள் எம்மையும் ஒருகணம் நிலைக்குலையச் செய்வதே. என்ன இது? ஆசையா அல்லது மனுகுலத்தின் மேல் கொண்டுள்ள ஒட்டுமொத்த மரியாதையின் பிரதிபலிப்பா?.

ஆயிரம் இலக்கியங்களை நுகர்ந்ததன் அனுபவங்களும், தத்துவச் செல்வங்களைத் தேடித் திரட்டி, கிரகித்தபின், ஆயிரம் மனிதர்கள் நடந்த காலடி சுவடுகளையும் உள்வாங்கி அவிழ்த்து விடப்படும். இவரது வார்த்தைகள் மகாபாரதத்தின் தோற்றுவாயையும், இராமாயணத்தின் ரிஷி மூலத்தையும் உள்ளடக்கவே செய்கின்றன. இக் கருத்து நிலையில் இருந்து உதிப்பதே இவரது கலையாகின்றது.

இவரது கடவுள் எனும் கருத்தும், இங்கேயே பரிணமித்திருக்கலாம்.

இது பாரதியின் கடவுளுடன் ஒப்புநோக்க வேண்டிய தேவையை எழுப்பாமல் இல்லை.

மேலும் படிக்க ...

வானியலில் ஆர்வம் மிக்க வழக்கறிஞர் செந்தில்நாதனும், அவரது வானியல் பற்றிய நூலும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
28 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனக்கு  இவருடன் நேரில் பழக்கமில்லை. ஆனால் என் பதின்ம வயதுகளில்  என் கவனத்தை ஈர்த்த ஆளுமைகளில் இவரும் ஒருவர்.  அதற்குக் காரணம் இவரது வானியல் மீதான ஆர்வம்தான்.

இவரது வீடு கஸ்தூரியார் வீதியில், நாவலர் வீதிக்குச் சிறிது தெற்காக இருந்தது. மாடி வீடு. மொட்டை மாடியில் ஒரு தொலைக்காட்டி எப்பொழுதும்  விண்ணை ஆராய்வதற்குரிய்  வகையில் தயாராகவிருக்கும். அதுதான் என் கவனத்தை இவர் ஈர்க்கக் காரணம்.  அதனால் அந்த வீடு அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண நகரில் முக்கியமானதொரு நில அடையாளமாக விளங்கியது.  

இவர் ஒரு வழக்கறிஞர். வானியலில் ஆர்வம் மிக்கவர். இலங்கை வானியற் சங்கத்தின் செயலாளராக 1965 - 1967 இல் இருந்திருக்கின்றார். இவர் பெயர் செந்தில்நாதன்.

ஆனால் இவரது வானியல் துறை சம்பந்தமான கட்டுரைகள் எவற்றையும் நான் ஈழநாடு போன்ற அக்காலகட்டத்தில் வெளியான தமிழ்ப்பத்திரிகைகளில் கண்டதாக நினைவிலில்லை.  வெளிவந்திருந்தாலும் என் கவனத்தில் படும்  அளவுக்கு அதிகமாக அது பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ஏன் வானியற் சங்கத்தின் செயலாளராக இருந்த இவர் வானியற் கழகம் பற்றி அதிகமாக வெளிப்படுத்தவில்லை என்பற்கான காரணம் தெரியவில்லை. என்னைப்போன்ற வானியற் துறையில் ஆர்வம் மிக்க மாணவர்கள் பலர் அதனால் நிச்சயம் பலனடைந்திருப்பார்கள்.

மேலும் படிக்க ...

தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்! - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
27 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(* ஓவியம் AI)

தேர்தல் வெற்றிக்காக, உங்கள் அரசியல் நலன்களுக்காகத் தொடர்ந்தும் இனவாதம் பேசாதீர்கள்.  அவன் சிங்களவன். அவனுக்கு ஆதரவளிக்காதீர்கள் என்று கோசம் எழுப்பாதீர்கள். அது இனவாதம். அதற்குப் பதிலாக இதுவரை கால அரசுகள் இனவாதம் பேசின. நாமும் இனவாதம் பேசினோம். இனியும் இனவாதம் பேசுவதைத் தவிர்ப்போம். ஆனால் இதுவரை இலங்கையில் நடைபெற்ற அனைத்து அழிவுகளுக்கும், போர்களுக்கும் காரணமாக இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இதுவரை கிட்டவில்லை. அதுவரை  பிரதேசமொன்றில் வாழும் மக்களின் கைகளில் அதிகாரம் இருப்பது ஆரோக்கியமானது, எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க அது அவசியம் என்று கோரிக்கை விடுங்கள். அது நியாயமானது. ஆரோக்கியமானது. இனவாதமற்றது.

அதே நேரத்தில் எம் அரசியல்வாதிகள் இதுவரை புரிந்த அனைத்துத்  தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.  உதாரணத்துக்கு எம்  பகுதிகளுக்கு அபிவிருத்திக்கென்று வந்த நிதியைத் திருப்பி அனுப்பினோம். ஆனால் அதே சமயம் நாம் எமக்கு, எம் பதவிகள்  காரணமாகக் கிடைத்த நன்மைகளை உதாசீனம் செய்யவில்லை. முன் கதவாலும், பின் கதவாலும் ஏற்றுக்கொண்டோம்.  

மேலும் படிக்க ...

பரதம் பரப்பும் வித்தகி ஸ்ரீமதி அம்பிகா சிற்சபேசன்! நியூசிலாந்தில் இருபது ஆண்டுகள் தாண்டும் புனிதப் பணி! - கலாநிதி மு. ந. சிவச்செல்வன், இளைப்பாறிய பேராசிரியர், நியூசிலாந்து -

விவரங்கள்
- கலாநிதி மு. ந. சிவச்செல்வன், இளைப்பாறிய பேராசிரியர், நியூசிலாந்து -
நிகழ்வுகள்
27 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்தியக் கலாச்சாரத்தியே முதன்மையான பாரம்பரியக் கலையான பரதநாட்டியம், தென்னிந்திய தமிழ்நாட்டின் தெய்வீகத் தொன்மை கொண்டதும் மிகவும் பிரபலமானதுமாகும். இந்த நாட்டிய வடிவமானது, தெய்வீகத்தோடும் ஆன்மீகத்தோடும் இணைந்து, உடல்சார்ந்த பாவங்களை வெளிக்கொணரும் சாத்வீகமான தூயகலையெனலாம்.

ஆகவே, இந்துசமய, சமண மதங்கள் சார்ந்த ஆழ்ந்த சமயக் கோட்பாடுகளையும், தெய்வ வழிபாடுகள் சார்ந்த தத்துவங்களையும், உள்ளடக்கியே பரதநாட்டியங்கள் யாவையும் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே, ஒரு சைவ சமய கோட்பாடுகளையும், சமய ஆசாரத்தையும் பேணிவாழும் குடும்பமொன்றில், என் மதிப்புக்குரிய ஆசிரியரான அமரர் அருணாசலம் அவர்களின் புதல்வியாக உதித்த திருமதி அம்பிகா சிற்சபேசன், சிறுமியாக இருக்கும்போதே இப் புனிதமான கலையில் கவரப்பட்டது ஆச்சரியமானதல்ல. அதோடு, பொறியியல் மேற்கல்வியைத் தொடரும் சந்தர்ப்பம் கிடைத்ததால் அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் பரதநாட்டியக் கல்வியையும் பாரம்பரிய குரு சிஷ்யை முறையில் கற்று அதை முழுதாகக் கற்றுதகைமைசால் நடன வித்தகியாக வெளியேறினார்.

மேலும் படிக்க ...

நெடுங்கவிதை: அந்நிய மண்ணில் அடைக்கலம் தந்த தெய்வங்கள்! -இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து லிங்கேஸ் -
கவிதை
26 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,
ஒன்றுகூடி அடித்துப்பெய்தது மழை.
எதிர்த்திசையில் ஓடிவரும் கார்களின்
கூரிய வெளிச்சங்கள் என்
கண்களைக் குளப்பின.
நித்திரை முளித்து வேலைசெய்த களைப்பில்,
அரைத்தூக்கத்தில்
காரை ஓட்டிவந்த எனக்கு அன்றைய
காரிருள் ஆழ் மனசுக்குள் புகுந்து
காலங்களைப் புரட்டிப்போட்டது.

விழிகள் புதிதாய்ப் பூத்தது
போன்ற உசாரில்
காரை இன்னும் நிதானமாக
ஓட்டி வந்தேன்.
'காலச்சக்கரத்தின் சுற்று
கடுகதி வேகத்தில் சுழன்று
கொண்டேயிருக்கின்றது.
அதில் நானே அச்சாணி.
அச்சாணிக்கும்
எப்போது ஓய்வுவரும்?'
என்பதுபோன்ற
எண்ணச்சிதறல்கள்
மனசுக்குள் கரைந்தோடின.
இந்த
'அச்சாணிவாழ்வு'தந்த
அனுபவம் என்ன?

மேலும் படிக்க ...

கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
26 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு  வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில்  நன்றி.

இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன்  பார்வைகளை  வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆளுமையின் மறு பக்கத்தை பேராசிரியரின் உரையாடல்களூடு எடுத்துக் காட்டுகின்றார். வாதப்பிரதிவாதங்களை எழுப்பக்கூடிய விபரிப்புகள். 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு, ஜெயமோகனின் ரப்பர் நாவல்களைப் பற்றிய இவரது விமர்சனங்கள் ஆழமான தர்க்கங்களை வேண்டி நிற்கின்றன.

மேலும் படிக்க ...

வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வாழ்த்துகள்: அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருது பெறுகின்றார் பேராசிரியர் கந்தையா இரமணிதரன்!  

அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES ) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான  விருதினைப் பேராசிரியர் கந்தையா இரமணிதரன் பெற்றுள்ளார்.  வாழ்த்துகள் இரமணி! இவ்விருதினைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு - https://www.aaees.org/e4saward

தற்போது ஒஹியோ மாநிலத்திலுள்ள 'சென்ரல் ஸ்டேட் 'யுனிவேர்சிடி' (Central State University) இல் சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் குடிசார்ப் பொறியியற் துறையில் இளமானிப் பட்டம் பெற்றவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. அத்துடன் சீனாவிலுள்ள Hohai University இல் நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் பொறியியற் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றவர். Tulane University இல் குடிசார்ப்பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

மேலும் படிக்க ...

மீள்பிரசுரம் (விகடன்.காம்) : பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி! - சு. அருண் பிரசாத் -

விவரங்கள்
- சு. அருண் பிரசாத் -
நேர்காணல்
24 ஏப்ரல் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பற்றி ஆனந்த விகடனில் வெளியான பேட்டியிது.  இதன் முக்கியத்துவம் கருதி, நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -


“எதிர்பாராதவிதமாக, எனக்குப் பாரதியின் ஒன்றுவிட்ட சகோதரரும், பாரதி பிரசுராலய நிறுவனருமான சி. விசுவநாத ஐயரின் தொடர்பு ஏற்பட்டது.”

60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதி ஆய்வில் ஈடுபட்டுவருபவர் சீனி. விசுவநாதன். தற்போது 88 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர், பாரதி குறித்து இதுவரை அறியப்படாத அரிய தகவல்களையும், பாரதியின் எழுத்துகளையும், பாரதி பற்றிய எழுத்துகளையும் பதிப்பித்துள்ளார். ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்', ‘பாரதி நூற்பெயர்க் கோவை' ஆகியவை இவரது பெரும் சாதனைகள்.

    “தம் வாழ்வையே பாரதி ஆய்வுக்காக அர்ப்பணித்த சீனி. விசுவநாதனின் பணியைப் போற்றும் வகையில், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்'' என்று கடந்த செப்டம்பர் மாதம் பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவின்போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின், சீனி. விசுவநாதன் உள்ளிட்ட பாரதி ஆய்வாளர்களுக்கு 'பாரதி நினைவு நூற்றாண்டு விருது' வழங்கிச் சிறப்பித்தார்.

பாரதியின் 139-வது பிறந்தநாளை ஒட்டி, மூத்த பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதனுடனான சிறப்புப் பேட்டி.

“உங்கள் குழந்தைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்?”

“1934-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று பரமத்திவேலூரில் பிறந்தேன். நான்காம் வகுப்பு வரை ஓசூரில் படித்தேன். அங்கு என்னுடைய அப்பா வருவாய்த் துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1944-ல் என் அப்பா இறந்த பிறகு ஒரு வருடம் சேலத்தில் என்னுடைய மூத்த அண்ணன் ராமலிங்கம் வீட்டில் இருந்து படித்தேன். பிறகு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்துதான் படித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.”

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கவிதை: ஏ! விரிவானே! உன்னைத்தான் விரிவானே! - வ.ந.கிரிதரன் -
  2. புத்தக வாசிப்பின் மகத்துவம்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
  3. கம்பராமாயணத்தில் சுவை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  4. ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு! - சுலோச்சனா அருண் -
  5. கண்ணையெரிக்கும் புகைக்காற்று - இக்பால் அலி -
  6. கவிதைகள்: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா? & சோக்கிரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -
  7. உயிர்த்த ஞாயிறில் உயிரிழந்தவர்கள் நினைவாக! ஆறாவது ஆண்டையும் கடந்து செல்லும் ஆறாவடு! நீதியில்லா நாட்டில் நாதியற்றவர்களின் ஓலம்! - முருகபூபதி -
  8. நிலம்சார் பண்பாட்டு மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்! - மெய்ஸ்ரீ ப. செ, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014. -
  9. சிற்றிதழ் விருது : கனவு என்ற சிற்றிதழ் - சுப்ரபாரதிமணியன் -
  10. அஞ்சலி: ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற முதல் பெண்ணாளுமை புஷ்பராணி நினைவுகள்! - முருகபூபதி -
  11. முதல் சந்திப்பு : புஷ்பராணியின் 'அகாலம்' கூறும் செய்தி! - முருகபூபதி -
  12. இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான 'தமிழ் மகளிர் பேரவை' புஸ்பராணி சிதம்பரி மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -
  13. அறிந்திரன் சிறுவர் சஞ்சிகையின் வெளியீட்டாளரான எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவின் வேண்டுகோள்!
  14. பட்டினப்பாலையில் வணிகம்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
பக்கம் 1 / 104
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி