எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைவு!

எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியையும், இலங்கை அரசியலில் நன்கறியப்பட்ட பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியாருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது. இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட மீரான் வாத்தியின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுமைக்காலத்திலும் சத்தியமனை நூலகச் செயற்பாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தவர். நாட்டின் பிரதமர் உட்படப் பலர் தம் யாழ் மாவட்டப் பயணங்களின்போது செல்லுமிடங்களில் ஒன்றாகச் சத்தியமனை நூலகம் அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இவரது அந்நூலகச் செயற்பாடுகளே.
இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்திலார்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர். பாலபண்டிதரும் கூட. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர்.


தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழ னுக்குத்
ஜெயதேவன் என்னும் பெயரில் கவிதை உலகில் இயங்கி வந்த இவரின் இயற்பெயர் மகாதேவன் . முதுகலை தமிழ் பட்டமும் ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றி விட்டுப் பணி நிறைவு பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பண்ணைக்காடு கவிஞரின் சொந்த ஊர் ஆகும். இவரது இலக்கிய செயல்பாடு என்பது சமூக ஊடகத்தில் தொடர்ந்து எழுதி வந்தது ஆகும். அத்தோடு பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர்.,



நாங்கள் சென்ற அசகுசா என்ற இடத்தில் உள்ள புத்த கோயில் யப்பான் வருபவர்கள் எவரும் தவறவிடாது செல்லும் இடமாகும் இது டோக்கியோவில் உள்ளது . 30 மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போவார்கள். முக்கியமான மட்டுமல்ல எல்லா நாட்களுமே உல்லாசப்பிரயாணிகளால் நிறைந்திருக்கும். அசகுசா என்பது புல்தரை என்ற கருத்தாகும் அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். அருகில் ஆறு ஓடுகிறது தற்போது முழு இடமும் கடைவீதிகள், உணவகங்கள் நிரம்பி உள்ள இடமாகிறது.
இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வு, வரலாறு, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலக்கியங்கள் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்திச் சென்ற அறநெறிகள் ஏராளம். அதில் சித்தர்களின் பாடல்களில் மக்கள் அறிந்துக் கொள்ளக்கூடிய நிலையாமை கருத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அந்த வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களில் காணப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலை கடந்த திங்கட்கிழமை ஜூன் மாதம் 2 ஆம் திகதி மதியம் போல மீண்டும் வெடித்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் எட்னா ஆய்வகம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடித்தபோது பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் கரும்புகையோடு கலந்த தூசிகளும் கற்களும் பறந்ததால், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து போயிருந்தனர். எந்த நேரமும் விமானப் போக்குவரத்து தடைப்படலாம் என்ற பயத்தில் சில சுற்றுலாப் பயணிகள் சிசிலித் தீவைவிட்டு உடனே கிளம்பினார்கள்.


தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.


சென்னை திருச்சி ஸ்ரீ பாரதகலா குரு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஷ்கலா அவர்களின் பரத நாட்டிய நடனம் கொழும்பு கதிர்காமத்தில் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் தேதி கொழும்பிலும் 6 ஆம் தேதி கதிர்காமத்திலும் இடம்பெறவுள்ளது.

“ஆழ்கடலின் மிகப் பெரிய சுறா. கரையோரத்துச் சிறுமீன்களில் ஒன்றல்ல இவர்.”
ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடுத்து


