திருப்பூர் இலக்கிய விருதுகள் 2024 : 1/12/24
16வது ஆண்டில்.. இதுவரை சுமார் 350 படைப்பாளிகளுக்கு எளிமையாக இந்த திருப்பூர் இலக்கிய விருது கடந்த 16 ஆண்டுகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் இல்லை இவர் இல்லை என்று சொல்பவர்கள் அவர்களும் இவர்களும் முன்பே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளலாம்
இந்த ஆண்டும் வழக்கமாக எளிமையாக ஒரு நூலகத்தில் நடைபெறுகிறது. 50 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணி தரும் நகரத்தில் பின்னலாடை மூலம் வருமானம் கிடைக்கும் நகரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. இந்த முறையும் முயன்றோம். நகரத்தின் முக்கிய 8 பிரமுகர்களுக்கு ( ஓரளவு அறிமுகமானவர்கள் ) கடிதங்கள் அனுப்பினோம் .யாரும் பதில் அளிக்கவில்லை எளிமையாக வழக்கம் போல் நடத்துகிறோம்.
இதை இதைப் பற்றி விமர்சிப்பவர்கள், அவதூறாய் பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் ஆதரவு தருவார்கள் அதிகம் இல்லை கூட இருப்பவர்களுக்கு கூட உதவி செய்ய மனவருவதில்லை இவர்களெல்லாம் கால வெள்ளத்தில் சாதாரண குப்பைகளாக கால வெள்ளத்தில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்
நகரத்தின் வியாபார வளர்ச்சியுடன் கலை இலக்கிய வளர்ச்சியும் இருந்தால் தான நகரத்தின் முழு வளர்ச்சியும் வெளியே தெரியும் அந்த வகையில் தமிழ் இலக்கிய பரப்பில் உள்ள சில எளிமையான படைப்பாளிகளை கௌரவம் படுத்தும் இந்த விழா எளிமையானது.சாதாரண எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் போலவே ஆடம்பரமான எழுத்துக்கள் வரிசையாக எழுத்தாளர்கள் உள்ளார்கள். அவர்கள் மத்தியில் எளிமையான எழுத்துக்களுக்கு கவுரவமாக கடந்த 16 ஆண்டுகளாய் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
இதைத் தவிர 20 ஆண்டுகளாய் பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது மற்றும் குறும்பட கலைஞர்களுக்கான குறும்பட விருது ஆகியவையும் நடந்து வருகின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு வருகிறோம். கனவு 38ம் ஆண்டில் தன் இலக்கிய இதழைக்கொண்டு வரும் நேரத்தில் இந்த நிகழ்வுகளையும் , மாதக் கூட்டங்கள் தவிர முன்னெடுத்து வருகிறது. எளிமையானப் படைப்பாளிகளை எளிமையான விழாவில் வாழ்த்துவோம். வாருங்கள்.